Current Affairs in Tamil 13th August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 13th August 2018. Take the quiz and improve your knowledge.

1. ஆதார் தொடர்புள்ள பண பரிவத்தனைகளுக்கு கண் விழித்திரையினை பயன்படுத்தும் முதல் வங்கி?
- ICICI
- Axis
- DCB
- SBI
Answer & Explanation
Answer: Axis
Explanation:
ஆதார் எண் கொண்டு பணபரிவர்தனை மேற்கொள்பவர்களின் கண் விழித்திரையினை (Iris Scan Authentication Feature) பயன்படுத்தி பண பரிவத்தனைகளை Axis வங்கி முதல் முறையாக மேற்கொண்டுள்ளது.
TNPSC Group 2 Model Question Papers – Download
2. சமீபத்தில் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் முதன்மைச் செயல் அலுவலராக நியமிகப்பட்டுள்ளவர்??
- ஆஸிஷ் குமார் பட்டானி
- சுனில் பாலிவால்
- தீரஜ்குமார்
- கே .எஸ் ஸ்ரீனிவாஸ்
Answer & Explanation
Answer: ஆஸிஷ் குமார் பட்டானி
Explanation:
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா என்பது பயிர் காப்பீட்டு திட்டம் ஆகும். இத்திட்டம் பல பயிர் காப்பீட்டு திட்டங்களை ஒருங்கிணைத்து கடந்த 2016 ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
3. “Human Rights, Values and Cultural Ethos” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- ராமச்சந்திர குஹா
- ராமகாந்த ரத்
- மாதவ் காட்கில்
- ஆர்.பி. தோக்கலியா
Answer & Explanation
Answer: ஆர் பி. தோக்கலியா (R P. Dhokalia)
4. வாகனங்களில் பயன்படுத்தும் எரிபொருளுக்கு ஏற்ப தனித்தனி வண்ணங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் திட்டத்தை செயல்படுத்த உள்ள மாநிலம்?
- கோவா
- டெல்லி
- பாண்டிச்சேரி
- சத்தீஸ்கர்
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
பெட்ரோல், டீசல் மற்றும் இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை அடையாளம் காண, அவற்றில் தனித்தனி வண்ணங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் டெல்லி அரசின் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயு (Petrol and CNG) வாகனங்களுக்கு “நீல” (Blue) ஸ்டிக்கரும் டீசல்(Diesel) வாகனங்களுக்கு “ஆரஞ்சு” (Orange) ஸ்டிக்கரும் ஒட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும்., மின்சார வாகனங்கள் மற்றும் இரட்டை எரிபொருள் வாகனங்களுக்கு “பச்சை” நிற நம்பர் பிளேட்டு வழங்கலாம் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
5. சர்வதேச இடது கைப்பழக்கம் உடையோர் தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?
- 13th ஆகஸ்ட்
- 12th ஆகஸ்ட்
- 11th ஆகஸ்ட்
- 10th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 13th ஆகஸ்ட்
Explanation:
இடது கைப்பழக்கம் உடையோர்களுக்கு தகுந்த பொருட்களை (கத்தரிக்கோல், Computer Mouse & etc.,) தயாரிக்க வலியுறுத்தியும், அவர்களின் சாதனைகளைப் பாராட்டும் விதத்திலும் International Left Hander’s Day 1992ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
6. சமீபத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் “Peace Mission Exercise” நடைபெற உள்ள இடம்?
- ரஷ்யா
- சீனா
- கஜகஸ்தான்
- உஸ்பெகிஸ்தான்
Answer & Explanation
Answer: ரஷ்யா
Explanation:
ரஷ்யாவில் வரும் ஆகஸ்ட் 22 முதல் 29 வரை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் “Peace Mission Exercise” நடைபெற உள்ளது. இதில் முதல் முறையாக இந்தியா கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
7. மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் நகரம்?
- ஒசாகா
- மெல்போர்ன்
- வியன்னா
- சிட்னி
Answer & Explanation
Answer: வியன்னா
Explanation:
எக்னாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் (Global Liveability index) ஆஸ்திரியாவின் “வியன்னா” நகரம் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது.
இப்பட்டியலில் இந்தியாவின் டெல்லி 112வது இடமும், மும்பை 117வது இடமும் பிடித்துள்ளது
முதல் 10 இடங்களை பிடித்துள்ள நகரங்களும் அவை பெற்ற மதிப்பெண்களும்
- Vienna, Austria (99.1)
- Melbourne, Australia (98.4)
- Osaka, Japan (97.7)
- Calgary, Canada (97.5)
- Sydney, Australia (97.4)
- Vancouver, Canada (97.3)
- Toronto, Canada (97.2)
- Tokyo, Japan (97.2)
- Copenhagen, Denmark (96.8)
- Adelaide, Australia (96.6)
8. சமீபத்தில் காலமான “சோம்நாத் சட்டர்ஜி”, எத்தனையாவது நாடாளுமன்ற சபாநாயகர்?
- 11 வது
- 12 வது
- 13 வது
- 14 வது
Answer & Explanation
Answer: 13 வது
Explanation:
லோக்சபா முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி உடல்நலக் குறைவால் ஆகஸ்ட் 13 அன்று காலமானார். இவர் 4 June 2004 – 16 May 2009 காலகட்டங்களில் லோக்சபா சபாநாயராக பணியாற்றியுள்ளார்.
சோம்நாத் சட்டர்ஜி 1929ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அசாம் மாநிலம் திஸ்பூரில் பிறந்தார். 10 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அதிக ஆண்டுகள் எம்பியாக இருந்தவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் சோம்நாத் சட்டர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related