TNPSC Current Affairs Question and Answer in Tamil 13th December 2018

Current Affairs in Tamil 13th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 13th December 2018. Take the quiz and improve your knowledge.



1. இந்தியாவிலேயே முதல் முறையாக, முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்தப்படுதியுள்ள மாநிலம்?

  1. தெலுங்கானா
  2. தமிழ்நாடு
  3. ஹரியானா
  4. ராஜஸ்தான்
Answer & Explanation
Answer: தமிழ்நாடு

Explanation:

முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்களுக்கு, இலவசமாக நிமோனியா தடுப்பூசி போடும் திட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 12 அன்று வியாசர்பாடியில் உள்ள, செயின்ட் தாமஸ் முதியோர் இல்லத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில் இந்திய விமானப்படை ‘CROSS BOW-18’ என்ற பயற்சியை மேற்கொண்ட மாநிலம்?

  1. ஆந்திரபிரதேஷ்
  2. கேரளா
  3. தமிழ்நாடு
  4. மேற்குவங்கம்
Answer & Explanation
Answer: ஆந்திரபிரதேஷ்

Explanation:

டிசம்பர் 5 முதல் 7 வரை இந்திய விமானப்படை தனது முதலாவது ‘CROSS BOW-18’ என்ற பயற்சியை ஆந்திரபிரதேசத்தில் உள்ள சூர்யலங்கா விமானப்படைத்தளத்தில் மேற்கொண்டது. இதில் இந்திய விமானப்படையின் பல்வேறு ஏவுகணைகள் சோதிக்கப்பட்டன.

3. “Hand-in-Hand” என்பது இந்தியா மற்றும் எந்த நாடுகளுக்கு இடையேயான ராணுவ பயற்சி ஆகும்?

  1. ரஷ்யா
  2. தென்கொரியா
  3. இலங்கை
  4. சீனா
Answer & Explanation
Answer: சீனா

Explanation:

இந்தியா மற்றும் சீனா ராணுவத்துக்கு இடையே “Hand-in-Hand” என்ற ராணுவ பயற்சி டிசம்பர் 11 முதல் 23 வரை சீனாவின் செங்குடூ நகரில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு சிக்கிமின் டோக்லாம் பகுதியில் இரண்டு நாட்டு இராணுவங்களுக்கு இடையே கசப்பான சூழ்நிலை உருவானதால் “Hand-in-Hand” ராணுவ பயற்சி நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4. இணையவழி குற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமீபத்தில் மத்திய அரசு துவங்கியுள்ள ட்விட்டர் கணக்கு?

  1. @DigitalDost
  2. @DigitalEye
  3. @CyberDost
  4. @CyberEye
Answer & Explanation
Answer: @CyberDost

Explanation:

இணையவழி குற்றங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் @CyberDost என்ற ட்விட்டர்(Twitter) கணக்கை துவங்கியுள்ளது.

5.  சமீபத்தில், தெலுங்கான மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டவர்?

  1. கே. சந்திரசேகர் ராவ்
  2. வெங்கைய்யா நாயுடு
  3. என். சந்திரபாபு நாயுடு
  4. Y. S. ராஜசேகர ரெட்டி
Answer & Explanation
Answer: கே. சந்திரசேகர் ராவ்

Explanation:

சமீபத்தில் நடைபெற்ற தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்.) கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் , தொடர்ந்து 2ஆவது முறையாக தெலங்கானா மாநில முதல்வராக டிசம்பர் 13 அன்று பதவியேற்றுக்கொண்டார்.

6. சமீபத்தில் காலமான சி.என்.பாலகிருஷ்ணன் பின்வரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

  1. உத்திரபிரதேஷ்
  2. மத்தியபிரதேஷ்
  3. மகாராஷ்டிரா
  4. கேரளா
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

கேரளாவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் மந்திரியான சி.என்.பாலகிருஷ்ணன் சமீபத்தில் காலமானார்.

7. சமீபத்தில், SWIFT இந்தியா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. கிரண் மஜும் தார்
  2. அருந்ததி பட்டாச்சார்யா
  3. சந்தா கோச்சார்
  4. சித்ரா ராம்கிருஷ்ணா
Answer & Explanation
Answer: அருந்ததி பட்டாச்சார்யா

Explanation:

இந்திய ஸ்டேட் வங்கியின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா SWIFT இந்தியா அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். SWIFT இந்தியா ஆனது பொது மற்றும் தனியார் துறை வங்கிகளின் கூட்டு அமைப்பு ஆகும்

SWIFT: Society for Worldwide Interbank Financial Telecommunication

8. சமீபத்தில், ‘பகவத் கீதை விழா’ நடைபெறும் இடம்?

  1. கொல்கத்தா, மேற்குவங்கம்
  2. ராமேஸ்வரம், தமிழ்நாடு
  3. திருப்பதி, ஆந்திரா
  4. குருக்ஷேத்திரா, ஹரியானா
Answer & Explanation
Answer: குருக்ஷேத்திரா, ஹரியானா

Explanation:

இந்த ஆண்டுக்கான “பகவத் கீதை விழா” ஹரியானாவின் குருக்ஷேத்திராவில் டிசம்பர் 7 முதல் 23 வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு மோரீஷஸில் நடைபெற உள்ளது.

9. “Of Counsel:The Challenges of the Modi Jaitley Economy” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. சஞ்ஜீவ் சன்யால்
  2. அரவிந்த் சுப்ரமணியன்
  3. ரகுராம் ராஜன்
  4. ராஜீவ் கெர்
Answer & Explanation
Answer: அரவிந்த் சுப்ரமணியன்

10. சர்வதேச கன உலோக தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 11th டிசம்பர்
  2. 12th டிசம்பர்
  3. 13th டிசம்பர்
  4. 14th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 12

More TNPSC Current Affairs



1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 13th December 2018”

  1. sir nan typewritting both higher, coa, complete pannirukan enaku tnpsc evalo question correcta panna job kidaikum. please reply sir

    Reply

Leave a Comment