TNPSC Current Affairs Question and Answer in Tamil 14th December 2018

Current Affairs in Tamil 14th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 14th December 2018. Take the quiz and improve your knowledge.



1. பருவநிலை மாற்றத்திற்கான செயல்திறன் பட்டியலில்(CCPI) இந்தியா வகிக்கும் இடம்?

  1. 10
  2. 11
  3. 12
  4. 13
Answer & Explanation
Answer: 11

Explanation:

பருவநிலை மாற்றத்திற்கான செயல்திறன் பட்டியலில் [Climate Change Performance Index (CCPI)] இந்தியா 11வது இடத்தை பிடித்துள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில், ராஜஸ்தான் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டவர்?

  1. சி. பி. ஜோஷி
  2. வசுந்தரா ராஜே
  3. சச்சின் பைலட்
  4. அசோக் கெலாட்
Answer & Explanation
Answer: அசோக் கெலாட்

Explanation:

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 199 தொகுதிகளில் 99 இடங்களை பிடித்த காங்கிரசின் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே முதல்வர் பதவிக்கு கடும் போட்டி ஏற்பட்ட நிலையில்  ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

மூன்றாவது முறையாக ராஜஸ்தான் மாநில முதல்வராக அசோக் கெலாட் பதவியேற்றுக் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்., மத்தியப் பிரதேச முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

3. 2018ஆம் ஆண்டுக்கான ஞானபீடம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?

  1. அருந்ததி ராய்
  2. அமிதவ் கோஷ்
  3. கிரிராஜ் கிஷோர்
  4. எஸ்.எல்.பைரப்பா
Answer & Explanation
Answer: அமிதவ் கோஷ்

Explanation:

இலக்கிய துறையில் சிறப்பாக பங்காற்றியதற்காக ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் 2018ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் உயரிய இலக்கிய விருதான ஞானபீடத்தைப் பெறும் முதல் இந்திய ஆங்கில எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இவரது The Shadow Lines (தமிழில்- ‘நிழல் கோடுகள்’) என்ற நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

4. ”பெய்ட்டி புயல்” க்கு பெயர் வைத்துள்ள நாடு?

  1. தாய்லாந்து
  2. இலங்கை
  3. பங்களாதேஷ்
  4. இந்தியா
Answer & Explanation
Answer: தாய்லாந்து

Explanation:

சமீபத்தில் வங்க கடலில் தீவிரமாக உருவெடுத்துள்ள புயலுக்கு தாய்லாந்து “பெய்ட்டி” என பெயர் வைத்துள்ளது.

5.  சமீபத்தில், 5வது “இந்திய தொழில் கண்காட்சி” (Enterprise India Exhibition) நடைபெற்ற நாடு?

  1. ஆப்கானிஸ்தான்
  2. பங்களாதேஷ்
  3. மியான்மர்
  4. நேபாளம்
Answer & Explanation
Answer: மியான்மர்

Explanation:

டிசம்பர் 13 அன்று மியான்மர் நாட்டின் யங்கூன்(Yangon) நகரில் 5வது “இந்திய தொழில் கண்காட்சியை இந்திய குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் தொடங்கி வைத்தார்.

6. சமீபத்தில் இந்தியாவின் உயர் மதிப்புள்ள (ரூ.200, ரூ.500, ரூ.2000) நோட்டுகளுக்கு தடை விதித்துள்ள நாடு?

  1. ஆப்கானிஸ்தான்
  2. பங்களாதேஷ்
  3. மியான்மர்
  4. நேபாளம்
Answer & Explanation
Answer: நேபாளம்

Explanation:

இந்திய அரசின் 100 ரூபாய் நோட்டுகளை தவிர மற்ற உயர் மதிப்புள்ள (ரூ.200, ரூ.500, ரூ.2000) நோட்டுகளை பயன்படுத்த நேபாள அரசு தடை விதித்துள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டு வந்தபோது, நேபாளத்தில் கோடிக்கணக்கில் 500,1000 ரூபாய் நோட்டுகள் தேங்கி விட்டன. அந்த நோட்டுகளை இதுவரை மத்திய அரசு நேபாள ரிசர்வ் வங்கியிடம் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் நேபாள அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக அறிமுகப்படுத்திய 2000, 500, 200 நோட்டுகளை மட்டும் தற்போது நேபாள அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

7. மத்திய அரசின் ‘கோச் மித்ரா’ திட்டம் பின்வரும் எந்த அமைச்சகத்துடன் தொடர்புடையது?

  1. ரயில்வே
  2. பாதுகாப்பு
  3. சுற்றுலாத் துறை
  4. மனிதவள மேம்பாடு
Answer & Explanation
Answer: ரயில்வே

Explanation:

ரயில் பயணத்தின் போது, ரயில் பெட்டிகளை சுத்தம் செய்வதற்கான, ‘கோச் மித்ரா’ திட்டம், 102 ரயில்களில் அறிமுகமாகி உள்ளது. ”கிளீன் மை கோச்“ சேவை தற்போது ”கோச் மித்ரா” எனத் தரமுயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரயில்களில் பயணிப்போர், ரயில் பெட்டியின் சுகாதாரம், பயணியருக்கு வழங்கப்படும் போர்வைகள், குடிநீர் வசதி, மின் வசதிகள் மற்றும் கழிப்பறை குறைபாடுகள் குறித்து தெரிவிக்கப்படும் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும்.

8. சமீபத்தில், பெண்கள் டென்னிஸ் சங்கத்தின்(WTA) சிறந்த பயிற்சியாளர் விருதை பெற்றவர்?

  1. சாஷா பஜின்
  2. பிராட் கில்பர்ட்
  3. போரிஸ் பெக்கர்
  4. மேக்னஸ் நார்மன்
Answer & Explanation
Answer: சாஷா பஜின்

Explanation:

பெண்கள் டென்னிஸ் சங்கத்தின்(WTA) சிறந்த பயிற்சியாளர் விருதை, நவோமி ஒசாகாவின் (Naomi Osaka) பயிற்சியாளர் சாஷா பஜின்(Sascha Bajin) பெற்றுள்ளார்.

9. “Changing India” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. பிராணப்முகர்ஜி
  2. அரவிந்த் சுப்ரமணியன்
  3. ரகுராம் ராஜன்
  4. மன்மோகன்சிங்
Answer & Explanation
Answer: மன்மோகன்சிங்

10. ஐக்கிய நாடுகள் சர்வதேச குழந்தைகள் அவசரகால நிதியக (UNICEF) தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 11th டிசம்பர்
  2. 12th டிசம்பர்
  3. 13th டிசம்பர்
  4. 14th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 11

Explanation:

UNICEF – United Nations International Children Emergency Fund

More TNPSC Current Affairs


Leave a Comment