Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 16th and 17th August 2018. Take the quiz and improve your knowledge.
1. சமீபத்தில், பெண்கள் மட்டுமே உள்ள ஸ்வாட் பாதுகாப்பு படையை உருவாகியுள்ளது மாநிலம்?
தமிழ்நாடு
டெல்லி
பாண்டிச்சேரி
தெலுங்கானா
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
நாட்டிலேயே முதல் முறையாக டெல்லி காவல்துறை 36 பேர் கொண்ட மகளிர் ஸ்வாட் (SWAT) படையை உருவாக்கியுள்ளது. டெல்லியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இந்த படை பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டது குறிப்பிடத்தக்கது.
2. சமீபத்தில், தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருது யாருக்கு வழங்கப்பட்டது?
முத்துமாரி
சீ.பிரித்தி
ஜெயந்தி
ஜோதி நிர்மலா
Answer & Explanation
Answer: முத்துமாரி
Explanation:
தனது மகளை இழுத்துச்சென்ற சிறுத்தையை விறகு கட்டையால் விரட்டியடித்த கோவை முத்துமாரிக்கு சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.
3. “அகிம்சா (Ahimsa)” என்ற புத்தகத்தை எழுதியவர்?
அயான் கபாடியா
சுப்ரியா கேல்கர்
கைலாஷ் சத்யார்த்தி
பிரணாப் முகர்ஜி
Answer & Explanation
Answer: சுப்ரியா கேல்கர் (Supriya Kelkar)
4. பள்ளிக்கு செல்லும் மாணவிகள் புகார்களை தெரிவிக்க தமிழக அரசு அறிமுகபடுத்தியுள்ள அவசர எண்?
15517
13456
14417
19898
Answer & Explanation
Answer: 14417
Explanation:
பள்ளிக்கு செல்லும் மாணவிகள் புகார்களை தெரிவிக்க ‘14417’ என்ற இலவச செல்போன் எண் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாலேயே முதல்முறையாக பள்ளி மாணவிகள் புகார்களை தெரிவிக்க தமிழகத்தில்தான் இந்த ‘ஹெல்ப்லைன்’ என்ற உதவி சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவை ஆகஸ்ட் 15-ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டது.
5. உலக மனித நேய தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?
19th ஆகஸ்ட்
18th ஆகஸ்ட்
17th ஆகஸ்ட்
16th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 19th ஆகஸ்ட்
Explanation:
மனிதாபிமானம் மிக்க சேவையை நன்றியுடன் நினைவுகூர்வதற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19 உலக மனித நேய தினமாக அனுசரிகப்டுகிறது. ஐ.நா-வின் சிறப்புப் பிரதிநிதியான செர்ஜியோ வியரா டெ மெல்லோவின் நினைவாக, அவர் இறந்த ஆகஸ்ட் 19 மனித நேய தினமாக அனுசரிகப்டுகிறது
இந்த ஆண்டிற்கான கருப்பொருள்: Not A Target
6. ஜூனியர் NBA உலக கூடைபந்து சாம்பியன்ஷிப்னின் சமூக விருதை வென்ற இந்தியர்?
ஜெனிபர்
பிரதாமா சிங்
ராஜேஷ் தேவநாதன்
சுனிஷ்கா கார்த்திக்
Answer & Explanation
Answer: சுனிஷ்கா கார்த்திக்
Explanation:
7. சமீபத்தில் ரஷ்யாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
பங்கஜ் சரண்
பால வெங்கடேஷ் வர்மா
துஷார் ஆரோத்
பார்த சத்பதி
Answer & Explanation
Answer: பால வெங்கடேஷ் வர்மா
Explanation:
ரஷ்யாவுக்கான இந்திய தூதராக இருந்துவந்த பங்கஜ் சரண் துணை தேசிய பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அந்த பதவிக்கு ஸ்பெயினுக்கான இந்திய தூதராக உள்ள பால வெங்கடேஷ் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
பார்த சத்பதி உக்ரேனுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8. சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
எஸ்.சி.ஜமீர்
சத்யபால் மாலிக்
ஆனந்திபென் படேல்
ராமன் சிங்
Answer & Explanation
Answer:
Explanation:
சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இருந்த பல்ராம்ஜி தாஸ் டான்டன் (90) 14-8-2018 ஆன்று காலமானதை தொடர்ந்து புதிய ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) மத்தியபிரதேச கவர்னர் ஆனந்திபென் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
9. “நிக்கி கே.புனச்சா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
கோல்ப்
துப்பாக்கி சுடுதல்
பாட்மிட்டன்
டென்னிஸ்
Answer & Explanation
Answer: டென்னிஸ்
Explanation:
இந்தோனிசியாவில் நடைபெற்ற ITF Futures ஆடவருக்கான டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் நிக்கி கே.புனச்சா ஆஸ்திரேலியாவின் மைக்கேலினை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
10. மத்தியஅரசின் “சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு” பிரச்சாரத்திற்கு விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
அக்ஷய் குமார்
விராட் கோலி
ஏ.ஆர். ரகுமான்
அமிதாப் பச்சன்
Answer & Explanation
Answer: அக்ஷய் குமார்
Explanation:
சாலை பாதுகாப்பு வாரத்தின் கருப்பொருளான “சதக் சுரக்ஷா –ஜீவன் ரக்ஷா” (Sadak Suraksha — Jeevan Raksha’)-இன் ஒருபகுதியாக அக்ஷய் குமார் நடித்த 1 நிமிட விளம்பர படம் சமீபத்தில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி வெளியிட்டார்.
சாலை பாதுகாப்பு வாரம்: ஏப்ரல் 23-30
11. சமீபத்தில் “cameos” என்ற மொபைல் செயலியை வெளியிட்டுள்ள நிறுவனம்?
கூகுள்
மைக்ரோசாப்ட்
அமேசான்
ப்ளிப்கார்ட்
Answer & Explanation
Answer: கூகுள்
Explanation:
புகழ்பெற்ற பிரபலங்கள், தங்கள் ரசிகர்களிடம் உரையாற்ற, வீடியோ மற்றும் கேள்வி பதில்கள் வடிவிலான செயலியான Cameos-ஐ கூகுள் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
12. செப்டம்பர் மாதத்தை “ஊட்டசத்து மாதமாக” கடைபிடிக்க உள்ள மாநிலம்?
மத்திய பிரதேசம்
உத்திர பிரதேசம்
ராஜஸ்தான்
தெலுங்கானா
Answer & Explanation
Answer: ராஜஸ்தான்
Explanation:
ஊட்டசத்தின் முக்கியதுவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ராஜஸ்தான் மாநிலம் செப்டம்பர் மாதத்தை “ஊட்டசத்து மாதமாக” கடைபிடிக்க உள்ளது.
13. சமீபத்தில் “Pitch to Move” என்ற போட்டியை தொடங்கியுள்ள அமைப்பு?
நிதி அயோக்
ரிசர்வ் வங்கி
நிதி ஆணையம்
தேர்தல் ஆணையம்
Answer & Explanation
Answer: நிதி அயோக்
Explanation:
போக்குவரத்து துறையில் புதிய நிறுவனங்களை உருவாக்க (Startups), “Pitch to Move” என்ற போட்டியை நிதி அயோக் Invest India and Society of Indian Automobile Manufacturers (SIAM) உடன் இணைந்து துவங்கியுள்ளது. போக்குவரத்து துறையில் புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதை ஊக்குவிக்க இப்போட்டி நடத்தப்படுகிறது.
14. சமீபத்தில் “Rythu Bima” என்ற ஆயுள் காப்பீட்டு திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
ஆந்திரபிரதேஷ்
தெலுங்கானா
கர்நாடகா
பாண்டிச்சேரி
Answer & Explanation
Answer: தெலுங்கானா
Explanation:
72வது சுகந்திர தினத்தை முன்னிட்டு தெலுங்கானா அரசு “Rythu Bima”, “Kanti Velugu” மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பொருளாதார அதரவு என மூன்று திட்டங்களை துவங்கியுள்ளது.
Rythu Bima – விவசாயிகளுக்கான இலவச ஆயுள் காப்பீட்டு திட்டம்.