TNPSC Current Affairs Question and Answer in Tamil 16th March 2019

Current Affairs in Tamil 16th March 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 16th March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.



1.சமீபத்திய கணக்கின்படி முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம் உள்ள மாநிலம்?

  1. உத்திர பிரதேஷ்
  2. மத்திய பிரதேஷ்
  3. மேற்குவங்காளம்
  4. பீகார்
Answer & Explanation
Answer: மேற்குவங்காளம்

Explanation:

20.1 லட்சம் புதிய வாக்காளர்களை கொண்ட மேற்குவங்காளம், நாட்டிலேயே அதிக முதல் தலைமுறை வாக்காளர்களை கொண்ட மாநிலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் முறேயை உத்திர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேஷ் உள்ளது.

தமிழகத்தில் புதியதாக 8.9 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில், உஸ்பெகிஸ்தான் நாட்டிற்க்கான இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சந்தோஷ் ஜா
  2. பிரமோத் குமார் அகர்வால்
  3. T.B.N. ராதா கிருஷ்ணன்
  4. L. நரசிம்மன்
Answer & Explanation
Answer: சந்தோஷ் ஜா

Explanation:

3. சமீபத்தில் இந்தியாவின் “ஸ்வயம்” (SWAYAM) வலைத்தளத்தை எந்த நாட்டு மாணவர்கள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது ?

  1. ஆப்கானிஸ்தான்
  2. பங்களாதேஷ்
  3. மியான்மர்
  4. ஜெர்மனி
Answer & Explanation
Answer: ஆப்கானிஸ்தான்

Explanation:

இணையவழியில் அனைத்து வகையான கல்விகளை இலவசமாக அளிக்கும் இந்தியாவின் “ஸ்வயம்” திட்டத்தை தற்போது “ஆப்கானிஸ்தான்” நாட்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது

  • SWAYAM (Study Webs of Active–Learning for Young Aspiring Minds)

4. சமீபத்தில், “யோனோ கேஷ்” (YONO Cash) என்ற புதிய செயலியை அறிமுகம் செய்த வங்கி?

  1. Yes Bank
  2. SBI
  3. Indian Bank
  4. HDFC
Answer & Explanation
Answer: SBI

Explanation:

ATMகளில் கார்டு இல்லாமல் பரிவர்த்தனையை மேற்கொள்ள ஏதுவாக “யோனோ கேஷ்” (YONO Cash) என்ற புதிய செயலியை SBI வங்கி சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.




5.  சமீபத்தில், எங்கு நமஸ்தே தாய்லாந்த் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது?

  1. டெல்லி
  2. சென்னை
  3. பாங்காங்
  4. மும்பை
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

3வது “நமஸ்தே தாய்லாந்த் திருவிழா” (Namaste Thailand) நேற்று(15-3-2019) டெல்லியில் தொடங்கியது. இந்திய-தாய்லாந்து ஒற்றுமையை பலப்படுத்தும் விதமாக இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

6. உலகின் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?

  1. 5
  2. 7
  3. 9
  4. 11
Answer & Explanation
Answer: 11

Explanation:

உலக தங்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கைப்படி உலகின் தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் ஜெர்மனியும் உள்ளன.

இந்த பட்டியலில் இந்தியா 11வது இடம் வகிக்கிறது.

7. சமீபத்தில், காலமான “மாதே மஹாதேவ்” பின்வரும் எந்த துறையை சேர்ந்தவர்?

  1. கிரிக்கெட்
  2. அரசியல்
  3. ஆன்மிகம்
  4. பத்திரிக்கை
Answer & Explanation
Answer: ஆன்மிகம்

Explanation:

லிங்காயத் சமூகத்தின் போப்பாண்டவராக கருதப்படும் மாதே மஹாதேவ் (Lingayat Pontiff Maate Mahadevi) சமீபத்தில் பெங்களூரில் காலமானார்.

8. 2020ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கால்பந்து போட்டியை நடத்த உள்ள நாடு?

  1. கோஸ்ட்டா ரிக்கா
  2. ஜோர்டான்
  3. உருகுவே
  4. இந்தியா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

2008 முதல் 2 ஆண்டுகளுக் ஒருமுறை நடத்தப்பட்டு வரும் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலக கால்பந்து போட்டியின் 7வது பதிப்பு வரும் 2020இல் இந்தியாவில் நடைபெற உள்ளது.

  • 2018இல் உருகுவே நாடு இந்தப் போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது

மேலும், கடந்த 2017இல் 17 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலக கால்பந்து போட்டியை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

9. தேசிய தடுப்பூசி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 16 மார்ச்
  2. 17 மார்ச்
  3. 18 மார்ச்
  4. 19 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 16

Explanation:

இந்தியாவில் முதன்முதலாக 1995ம் ஆண்டு மார்ச் 16ந் தேதி முதல் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் மார்ச் 16ம் தேதி தேசிய தடுப்பூசி தினமாக (National Vaccination Day) கடைபிடிக்கப்படுகிறது.

Static GK

10. இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களிலேயே, எந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிக வாக்கு பதிவு பதிவாகியுள்ளது?

  1. 1989
  2. 1999
  3. 2004
  4. 2014
Answer & Explanation
Answer: 2014

Explanation:

இதுவரை நடந்த மக்களவை தேர்தல்களிலேயே, 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தான் அதிகபட்சமாக 66.4% வாக்கு பதிவு, பதிவாகியுள்ளது.

11. 18வயது நிரம்பியவர்கள் எந்த மக்களவை தேர்தலில் இருந்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்?

  1. 1988
  2. 1989
  3. 1998
  4. 1999
Answer & Explanation
Answer: 1989

Explanation:

1988ஆம் கொண்டு வரப்பட்ட 61வது அரசியலமைப்பு சட்ட திருத்தம் 18வயது நிரம்பியவர்களும் வாக்களிக்க வழி வகுத்தது.

அதற்கு முன்னர் வாக்களிக்க குறைந்தப்பட்ச வயது 21 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது

More TNPSC Current Affairs


Leave a Comment