TNPSC Current Affairs Question and Answer in Tamil 17th March 2019

Current Affairs in Tamil 17th March 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 17th March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.



1.சமீபத்திய “வெஸ்ட் நைல் வைரஸ்” பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள இந்திய மாநிலம்?

  1. அசாம்
  2. மத்திய பிரதேஷ்
  3. மேற்குவங்காளம்
  4. கேரளா
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

நிபா வைரஸை தொடர்ந்து வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு கேரள மாநிலம் மலப்புரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வகை காய்ச்சல், பறவைகளில் இருந்து கொசுகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. கியூலக்ஸ் வகை கொசுக்கள் இந்த காய்ச்சலை மனிதர்களுக்கு பரப்புகின்றன.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில், யாருக்கு “நரி சக்தி புர்ஸ்கார்” விருது வழங்கப்பட்டது?

  1. ரேகா மிஸ்ரா
  2. ஷீலா பாலாஜி
  3. கீதா மிட்டல்
  4. சீமா மேத்தா
Answer & Explanation
Answer: சீமா மேத்தா

Explanation:

கதக் நடன கலைஞர் சீமா மேத்தாவிற்கு சமீபத்தில் நரி சக்தி புர்ஸ்கார் (Nari Shakti Puraskar) விருதை ஜனாதிபதி வழங்கினார்.

பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

3. சமீபத்தில் பிரிக்ஸ் ஷெர்பா (BRICS Sherpa) மாநாடு எங்கு நடைபெற்றது?

  1. பிரேசில்
  2. ரஷ்யா
  3. இந்தியா
  4. சீனா
Answer & Explanation
Answer: பிரேசில்

Explanation:

பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான முதல் பிரிக்ஸ் ஷெர்பா (BRICS Sherpa) மாநாடு பிரேசிலின் கியூரிடிபா (Curitiba) நகரில் நடைபெற்றது.

4. பின்வரும் எந்த அமைப்பின் நாடுகள் இணைந்து Sary-Arka-Anti Terror 2019-என்ற ராணுவப் பயிற்சியை மேற்கொண்டன?

  1. BRICS
  2. Shanghai Cooperation Organisation
  3. NATO
  4. G20
Answer & Explanation
Answer: Shanghai Cooperation Organisation

Explanation:

தீவிரவாதத்திற்கு எதிராக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் இணைந்து Sary-Arka-Anti Terror 2019-என்ற ராணுவப் பயிற்சியை மேற்கொண்டன.

இம்மாநாடு உஸ்பெஸ்கித்தானில் உள்ள தாஷ்கண்டில்  நடைபெற்றது.

5.  சமீபத்தில், எந்த ரக விமானங்களை இந்தியாவில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது?

  1. போயிங் நெக்ஸ்ட் GEN 737
  2. போயிங் 777 X
  3. போயிங் 747
  4. போயிங் 737 மேக்ஸ் 8
Answer & Explanation
Answer: போயிங் 737 மேக்ஸ்

Explanation:

போயிங் 737 மேக்ஸ் 8 வகை விமானம் அதிக விபத்துகளில் சிக்குவதால் அதனை இந்திய அரசு இந்தியாவில் இயக்க தடை விதித்துள்ளது.

March 16th Current Affairs

6. சமீபத்தில், மத்தியபிரதேச மாநிலத்தின் முதல் மாற்று பாலின அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. அஜிதா பானர்ஜி
  2. மீனு காஜல்
  3. மைதிலி
  4. சஞ்சனா சிங்
Answer & Explanation
Answer: சஞ்சனா சிங்

7. சமீபத்தில், காலமான “மனோகர் பாரிக்கர்” எத்தனை முறை கோவாவின் முதல்வராக பதவி வகித்துள்ளார்?

  1. 2
  2. 3
  3. 4
  4. 5
Answer & Explanation
Answer: 4

Explanation:

கோவாவின் முதல்வராக 4 முறை பதவி வகித்துள்ளார். கோவாவின் முதல் பா.ஜ.க முதல்வராகவும், ஐ.ஐ.டியில் படித்த மாணவர்களில் முதல்வராக முதல்முறையாகவும் மனோகர் பாரிக்கர் பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி மோடி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8. டோக்கியோ ஒலிம்பிக்-2020 போட்டிக்கு தகுதி பெற்றுள்ள முதல் இந்தியர்?

  1. சிவ கேசவன்
  2. இர்பான் கே.டி
  3. தீபா கர்மாகர்
  4. அங்கூர் மிட்டல்
Answer & Explanation
Answer: இர்பான் கே.டி

Explanation:

டோக்கியோ ஒலிம்பிக்-2020 போட்டிக்கு தகுதி பெறும் முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமையை 20km வேக நடை(20km Race Walk) வீரர் “இர்பான் கே.டி” (Irfan KT) பெற்றுள்ளார்.

ஆசிய நடை போட்டியில் சிறப்பாக விளையாடி 4வது இடம் பிடித்ததன் மூலம் 2020ம் ஆண்டு டோக்யோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மேலும், கத்தார் நாட்டில் உள்ள தோகாவில் வரும் செப்டம்பர் 27ம் தேதி தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்கும் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

9. “தீக்சா தாகர்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. டேபிள் டென்னிஸ்
  2. கிரிக்கெட்
  3. டென்னிஸ்
  4. கோல்ப்
Answer & Explanation
Answer: கோல்ப்

Explanation:

சமீபத்தில் “தீக்சா தாகர்” (Diksha Dagar) சவுத் ஆப்ரிக்கன் ஓபன் (South African Open) கோல்ப் போட்டியின் பட்டத்தை வென்றுள்ளார். இதன்மூலம் ஐரோப்பிய சுற்றுப்பந்தைய போட்டிகளில் வெற்றி பெற்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

‘அதிதி அசோக்’ முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. உலக நுகர்வோர் உரிமைகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 15 மார்ச்
  2. 16 மார்ச்
  3. 17 மார்ச்
  4. 18 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 15

Explanation:

இந்த வருடத்திற்கான கருப்பொருள்: Trusted Smart Products

More TNPSC Current Affairs


Leave a Comment