Current Affairs in Tamil 18-19th March 2019
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 18-19 March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.
1. AFINDEX-19 என்ற போர் ஒத்திகை பயிற்சி நடைபெறும் இடம்?
- திருவனந்தபுரம்
- ஹைதராபாத்
- புனே
- சென்னை
Answer & Explanation
Answer: புனே
Explanation:
இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு இடையே, இராணுவ துறைரீதியான பயிற்சியான (Africa-India Field Training Exercise-2019) AFINDEX-19 புனேவில் உள்ள இராணுவ பயிற்சி நிலையத்தில் மார்ச் 18 முதல் 27 வரை நடைபெறுகிறது.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. சமீபத்தில், கோவாவின் புதிய முதல்வராக பதிவி ஏற்றுள்ளவர்?
- சுதீன் தவலிகர்
- ஷீலா பாலாஜி
- விஜய் சர்தேசி
- பிரமோத் சாவந்த்
Answer & Explanation
Answer: பிரமோத் சாவந்த்
Explanation:
மனோகர் பாரிகர் மறைவை தொடர்ந்து கோவாவின் புதிய முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த பிரமோத் சாவந்த் பதவி ஏற்றுள்ளார். மேலும் விஜய் சர்தேசி மற்றும் சுதீன் தவலிகர், துணை முதல்வர்களாக பதவி ஏற்றுள்ளனர்.
பிரமோத் சாவந்த் கோவாவின் 11வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.
3. சமீபத்தில் வெளியிடப்பட்ட “மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில்” முதலிடம் வகிக்கும் நகரம்?
- பாரிஸ்
- மெல்போர்ன்
- வியன்னா
- சிங்கப்பூர்
Answer & Explanation
Answer: வியன்னா
Explanation:
ஆஸ்திரியா நாட்டின் “வியன்னா” (Vienna) தொடர்ந்து 10வது முறையாக, மனிதர்கள் வாழத்தகுந்த நகரங்களின் பட்டியலில் (Most Liveable cities) முதலிடம் பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவின் ஹைதராபாத் மற்றும் புனே நகரங்கள் 143 வது இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில், முதல் லோக்பால் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- பினாகி சந்திர கோஸ்
- திலீப் பி.போஸ்லே
- பிரதீப் குமார் மொஹந்தி
- அஜய்குமார் திரிபாதி
Answer & Explanation
Answer: பினாகி சந்திர கோஸ்
Explanation:
இந்தியாவில் முதல் முறையாக ஊழல் தடுப்புப் பதவியான லோக் பால் பதவி நிரப்பப்பட்டுள்ளது. இந்தியாவின் முதல் லோக் பாலாக நீதிபதியாக பினாகி சந்திர கோஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், நீதித்துறை உறுப்பினர்களாக நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பிரதீப் குமார் மொஹந்தி, அபிலாஷா குமாரி, அஜய்குமார் திரிபாதியும் நீதித்துறை சாராத உறுப்பினர்களாக தினேஷ்குமார் ஜெயின், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி அர்ச்சனா ராமசுந்தரம், மஹேந்தர் சிங், இந்திரஜீத் பிரசாத் கௌதமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
5. சமீபத்தில், ‘Conquer Exam, Be a Warrior’ என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ள நிறுவனம்?
- IIT – மெட்ராஸ்
- IISC – பெங்களூர்
- TIFR – மும்பை
- IIPH – காந்திநகர்
Answer & Explanation
Answer: IIPH – காந்திநகர்
Explanation:
தேர்வு தொடர்பான அழுத்தத்தை குறைக்க Indian Institute of Public Health Gandhinagar, Gujarat, (IIPHG) ‘Conquer Exam, Be a Warrior’ என்ற மொபைல் செயலியை உருவாக்கியுள்ளது.
March 17th Current Affairs
6. சமீபத்தில், இந்தோனேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்திய கடலோர காவற்படை கப்பல்?
- ICGS விஜயா
- ICGS வருண
- ICGS சாம்ராட்
- ICGS விஜித்
Answer & Explanation
Answer: ICGS விஜித்
Explanation:
இந்தியா மற்றும் இந்தோனிசியாவிற்கு இடையில் உள்ள நெருங்கிய கடல் சார்பு உறவை பறைசாற்றும் விதமாக இந்திய கடலோர காவற்படை கப்பலான ICGS விஜித் (ICGS VIJIT) இந்தோனிசியாவின் ஷாபா நகரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டடுள்ளது.
7. சமீபத்தில், காலமான “சின்மயா ராய்” பின்வரும் எந்த துறையுடன் தொடர்பானவர்?
- அரசியல்
- சினிமா
- பத்திரிக்கை
- நீதிதுறை
Answer & Explanation
Answer: சினிமா
Explanation:
இவர் மூத்த வங்காள நடிகர் ஆவார்.
8. 2018-19ஆம் ஆண்டுக்கான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?
- கோவா
- பெங்களுர்
- சென்னை
- மும்பை
Answer & Explanation
Answer: பெங்களுர்
Explanation:
சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் கோவா அணியை வீழ்த்தி பெங்களுர் அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது .
9. “ரியா முகர்ஜி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- டேபிள் டென்னிஸ்
- கிரிக்கெட்
- டென்னிஸ்
- பாட்மிண்டன்
Answer & Explanation
Answer: பாட்மிண்டன்
Explanation:
சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இளம் இந்திய நட்சத்திரங்களான லக்ஷயா சென் மற்றும் ரியா முகர்ஜி இடம் பிடித்துள்ளனர்.
10. உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 17 மார்ச்
- 18 மார்ச்
- 19 மார்ச்
- 20 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 20
Explanation:
சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2010 ஆம் ஆண்டு முதல் உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
டெல்லியின் மாநில பறவை “சிட்டுக்குருவி” என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: I LOVE Sparrows
11. “Farthest Field: An Indian story of Second World War” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- ஜிதேந்திர சிங்
- கல்யாணி கேன்டாடி
- ரகு கர்னாட்
- மன்சி குலாட்டி
Answer & Explanation
Answer: ரகு கர்னாட்
Explanation:
ரகு கர்னாட்(Raghu Karnad) இன் “Farthest Field: An Indian story of Second World War” என்ற புத்தகத்திற்கு சமீபத்தில் Windham-Author Raghu Campbell Prize என்ற விருது (பரிசு தொகை) வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகம் இந்த பரிசை வழங்குகிறது.
More TNPSC Current Affairs
Related