Current Affairs in Tamil 1st August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st August 2018. Take the quiz and improve your knowledge.

1. 2018 ஆம் ஆண்டுக்கான ராஜீவ் காந்தி சத்பாவனா விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?
- கோபாலகிருஷ்ண காந்தி
- பரத் வத்மானி
- ஸ்மிருதி மந்தனா
- ஜனனி சுந்தர்
Answer & Explanation
Answer: கோபாலகிருஷ்ண காந்தி
Explanation:
மேற்கு வங்காளத்தின் முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தி 24வது ராஜீவ் காந்தி சத்பாவனா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மகாத்மா காந்தியின் பேரன் என்பது குறிப்பிடதக்கத.
சிறந்த சமூக தொண்டு செய்பவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
2. தேசிய சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை, முதல் கட்டமாக எத்தனை மாவட்டங்களில் நடத்தப்பட உள்ளது?
- 75
- 65
- 55
- 45
Answer & Explanation
Answer: 55
Explanation:
இந்தியாவில் முதல் முறையாக ‘தேசிய சுற்றுச்சூழல் ஆய்வறிக்கை’ (National Environment Survey) 55 மாவட்டங்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தினால் நடத்தப்பட உள்ளது.
3. 2018 ஆண்டுக்கான ஐநாவின் E- Government குறியீட்டில் இந்தியா வகிக்கும் இடம்?
- 88
- 96
- 104
- 118
Answer & Explanation
Answer: 96
Explanation:
[E-Government Development Index (EGDI)] 2014 இல் 148 வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு 22 இடங்கள் முன்னேறி 96 வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் டென்மார்க் உள்ளது.
இந்த பட்டியலானது பின்வரும் மூன்று குறியீடுகளின் சராசரியை வைத்து கணக்கிடப்படுகிறது.
- Telecommunications Infrastructure Index (TII),
- Human Capital Index (HCI),
- Online Service Index (OSI).
4. ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான கற்றலுக்கு உதவும் வகையில் ‘iHub’ மையத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- தமிழ்நாடு
- கர்நாடகம்
- ஆந்திரபிரதேஷ்
- தெலுங்கானா
Answer & Explanation
Answer: ஆந்திரபிரதேஷ்
Explanation:
ஆந்திரபிரதேஷ் அரசு 245 கோடி செலவில் ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞான கற்றலுக்கு உதவும் வகையில் ‘iHub’[The intelligent hub] என்ற மையத்தை துவங்கியுள்ளது.
5. N.C.C மற்றும் N.S.S அமைப்பை வலுப்படுத்த அமைக்கப்பட உள்ள குழுவின் தலைவர்?
- அனில் சொரூப்
- பிரதீப் குமார் சின்ஹா
- ராஜீவ் தோப்னே
- நிர்பேந்திரகுமார்
Answer & Explanation
Answer: அனில் சொரூப்
Explanation:
தேசிய மாணவர் படையையும், (N.C.C) நாட்டு நலப்பணித் திட்டத்தையும் (N.S.S) வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் செயலர் திரு. அனில் ஸ்வருப் தலைமையிலான குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது
6. சமீபத்தில் TCS நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் மிக மதிப்பு வாய்ந்த கம்பெனியாக உயர்ந்துள்ள நிறுவனம்?
- Bharti Airtel
- Reliance
- Infosys
- Larsen and Toubro
Answer & Explanation
Answer: Reliance
Explanation:
- Reliance இன் மதிப்பு – Rs7.44 trillion
- TCS இன் மதிப்பு – Rs7.39 trillion
7. சமீபத்தில் “Gaofen-11” என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நாடு?
- பாக்கிஸ்தான்
- ஜப்பான்
- சீனா
- வடகொரியா
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
சீனா, தனது திட்டமான Belt and Road Initiative (BRI) -ஐ கண்காணிக்கும் பொருட்டு உயர்-பூகோள கண்காணிப்பு செயற்கைக்கோளான Gaofen-11 -ஐ Long March 4B ராக்கெட் மூலம் ஜூலை 30 அன்று விண்ணில் செலுத்தியது.
8. RBC கனடிய ஓபன் (RBC Canadian Open) போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- டாமி பிளெட்வுட்
- மெக்கில் ராய்
- ஜோர்டன் ஸ்பையத்
- டஸ்டின் ஜான்சன்
Answer & Explanation
Answer: டஸ்டின் ஜான்சன்
Explanation:
கோல்ப் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டஸ்டின் ஜான்சன் (Dustin Johnson) சமீபத்தில் நடந்த “RBC கனடிய ஓபன் (RBC Canadian Open)” போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
9. சமீபத்தில் சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAAI) ‘Marketer of the Year’ விருதை பெற்றுள்ள நிறுவனம்?
- அமுல்
- ஆவின்
- ஹட்சன் ஆக்ரோ
- டாபர்
Answer & Explanation
Answer: அமுல்
Explanation:
குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு லிமிடெட்டான அமுல், சர்வதேச விளம்பர சங்கத்தின் (IAAI) ‘Marketer of the Year’ விருதை பெற்றுள்ளது.
10. சமீபத்தில் “Pp” அல்லது “P null” என பெயரிடப்பட்ட ஒரு அரிய இரத்த பிரிவை கண்டறிந்த மருத்துவமனை?
- சென்னை மருத்துவக் கல்லூரி
- கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி
- பெங்களூர் மருத்துவக் கல்லூரி
- கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி
Answer & Explanation
Answer: கஸ்தூர்பா மருத்துவக் கல்லூரி
More TNPSC Current Affairs
Related