2. “கொங்கன் 18” என்பது இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையேயான கடற்படை பயிற்சி ஆகும்?
ஜப்பான்
சீனா
சிங்கப்பூர்
இங்கிலாந்து
Answer & Explanation
Answer: இங்கிலாந்து
Explanation:
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே “கொங்கன் 18” என்ற பெயரில் கடற்படை பயிற்சி கோவாவில் நவம்பர் 28 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
3. “The Diary of a Domestic Diva” என்ற புத்தகத்தை எழுதியவர்?
ஆண்டி மரினோ
எஸ்.ஹரிஷ்
ஷில்பா ஷெட்டி
நீலஞ்சன் முகபாப்புதய்
Answer & Explanation
Answer: ஷில்பா ஷெட்டி
Explanation:
4. தெற்கு ஆசிய பிராந்திய இளைஞர்கள் அமைதி மாநாடு நடைபெற்ற இடம்?
காத்மண்டு
புதுடில்லி
பிஜீங்
சிங்கப்பூர்
Answer & Explanation
Answer: புதுடில்லி
Explanation:
மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு புதுடில்லியில் South Asia Regional Peace Conference என்ற பெயரில் 3 நாள் மாநாடு நடைபெற்றது
5. உலக எய்ட்ஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
1st டிசம்பர்
2nd டிசம்பர்
29th நவம்பர்
30th நவம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் – 01
Explanation:
எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த, 1987 ஆண்டிலிருந்து இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் முதன்முதலில் 1981ஆம் ஆண்டு அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Know Your Status”
6. முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின், காப்பீட்டுத் தொகை 2 லட்சத்திலிருந்து எவ்வளவாக உயர்த்தப்பட்டுள்ளது ?
3 லட்சம்
4 லட்சம்
5 லட்சம்
2.5 லட்சம்
Answer & Explanation
Answer: 5 லட்சம்
Explanation:
கடந்த 2012ம் ஆண்டு ஜனவரி 11ம் தேதி தொடங்கப்பட்ட முதல்வர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின், காப்பீட்டுத் தொகை 2 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
7. சமீபத்தில் காலமான “ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்” அமெரிக்காவின் எத்தனையாவது அதிபர் ஆவார்?
41வது
42வது
45வது
46வது
Answer & Explanation
Answer: 41வது
Explanation:
அமெரிக்காவின் 41-வது அதிபரும் (1989 முதல் 1993வரை), முன்னால் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையுமான ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் சமீபத்தில் காலமானர்.
8. சமீபத்தில், நாகலாந்தில் ஹார்ன்பில் திருவிழாவை துவங்கி வைத்தவர்?
அருண்ஜெட்லி
ராஜ்நாத்சிங்
சுஷ்மா சுவராஜ்
வெங்கையா நாயுடு
Answer & Explanation
Answer: ராஜ்நாத்சிங்
Explanation:
நாகலாந்தின் 19வது ஹார்ன்பில் திருவிழாவை (Hornbill Festival) ராஜ்நாத்சிங், இன்று(டிசம்பர் 01) துவங்கி வைத்தார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் இந்த விழா கொண்டாடப்படுகிறது.
Hornbill – இருவாய்ச்சி
நாகலாந்து, இந்தியாவின் 16வது மாநிலமாக டிசம்பர் 01, 1963 அன்று பிரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
9. “இஷா சிங்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
குதிரை ஏற்றம்
துப்பாக்கி சுடுதல்
வில்வித்தை
நீச்சல்
Answer & Explanation
Answer: துப்பாக்கி சுடுதல்
Explanation:
62வது தேசிய துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானாவை சேர்ந்த 13 வயது சிறுமி இஷா சிங் சீனியர் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
10. சமீபத்தில் நடந்த அபுதாபி கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
செபாஸ்டின் வெட்டல்
மேக்ஸ் வெர்ஸ்ட்டப்பன்
லெவிஸ் ஹமில்டன்
ரோஸ்பெர்க்
Answer & Explanation
Answer: லெவிஸ் ஹமில்டன்
Explanation:
“எதிஹாட் ஏர்வேஸ் அபுதாபி கிரான்ட் பிரிக்ஸ்” போட்டியில் 4-வது முறையாக லெவிஸ் ஹமில்டன் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.