TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st January 2019

Current Affairs in Tamil 1st January 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st January 2019. Take the quiz and improve your knowledge.



1. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. எஸ். கோவிந்த பிள்ளை
  2.  எம். எம். சீனிவாசன்
  3. எம்.கிருஷ்ணன்
  4. சுதா சேஷையன்
Answer & Explanation
Answer: சுதா சேஷையன்

Explanation:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக சுதா சேஷையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக எம்.கிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில், மத்திய தகவல் ஆணைத்தின் புதிய தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சுதிர் பார்கவா
  2. R.K. மாத்தூர்
  3. T.B.N. ராதா கிருஷ்ணன்
  4. L. நரசிம்மன்
Answer & Explanation
Answer: சுதிர் பார்கவா

Explanation:

மத்திய தகவல் ஆணைத்தின் தலைமை ஆணையராக இருந்த R.K. மாத்தூர் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய ஆணையராக சுதிர் பார்கவா (Sudhir Bhargava) நியமிக்கப்பட்டுள்ளார்.

3. 2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள குளோபல் ஏவியேஷன் உச்சி மாநாட்டிற்காக இந்திய விமான போக்குவரத்து அமைச்கம் அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி?

  1. GPS-2019
  2. GAS-2019
  3. CAS-2019
  4. GAA-2019
Answer & Explanation
Answer: GAS-2019

Explanation:

வரும் ஜனவரியில் மும்பையில் நடைபெற உள்ள குளோபல் ஏவியேஷன் உச்சி மாநாட்டிற்காக இந்திய விமான போக்குவரத்து அமைச்கம் GAS-2019 என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

4. சமீபத்தில், “உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டத்தை” துவங்கி வைத்தவர்?

  1. அமித் ஷா
  2. பியுஷ் கோயல்
  3. மனோகர் பாரிக்கர்
  4. தர்மேந்திர பிரதான்
Answer & Explanation
Answer: தர்மேந்திர பிரதான்

Explanation:

IOCL, BPCL, மற்றும் HPCL ஆகிய மூன்று பெட்ரோல் உற்பத்தி நிறுவனங்களின் உதவியுடன் Ujjwala Sanitary Napkins initiative என்ற திட்டமானது ஒடிஷா மாநிலத்திலுள்ள புவனேஸ்ர் நகரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் ஒருபகுதியாக சுமார் 100 சானிட்டரி நாப்கின் உற்பத்தி சாலைகள் மேற்சொன்ன எண்ணெய் நிறுவனங்களால் அமைக்கப்படும்.

  • IOCL – Indian Oil Corporation Ltd
  • BPCL – Bharat Petroleum Corporation Ltd
  • HPCL – Hindustan Petroleum Corporation Limited

5.  சமீபத்தில், யுன்ஹாய் 2 (Yunhai-2) என்ற செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய நாடு?

  1. சீனா
  2. ஜப்பான்
  3. வட கொரியா
  4. தென் கொரியா
Answer & Explanation
Answer: சீனா

Explanation:

சமீபத்தில் சீனா, யுன்ஹாய் – 2(Yunhai-2) என்ற செயற்கைக்கோளை லாங் மார்ச் 2 டி (Long March-2D) என்ற ராக்கெட் மூலம் விண்வெளி சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

இந்த செயற்கைக்கோளானது வளிமண்டல சுழல், விண்வெளி சூழல் கண்காணிப்பு, பேரிடர்களை தடுத்தல் & குறைத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.

6. சமீபத்தில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ள நீர்மூழ்கி கப்பல்?

  1. ஐ என் எஸ் காந்தேரி
  2. ஐ.என்.எஸ். கல்வாரி
  3. ஐ.என்.எஸ். கரஞ்
  4. ஐ என் எஸ் விராட்
Answer & Explanation
Answer: ஐ.என்.எஸ். கரஞ்

Explanation:

’ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கிப்பலான ஐ.என்.எஸ். கரஞ் (INS Karanj) டிசம்பர் 31 அன்று இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இது இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட ’ஸ்கார்பீன்’ வகை நீர்மூழ்கிப்பல்களில் (Scorpene submarine) மூன்றாவது கப்பல் ஆகும்.

இதற்கு முன், இணைக்கப்பட்டவை.,

1) ஐ.என்.எஸ்.கல்வாரி’ (INS Kalvari) , டிசம்பர் 14 – 2017

2) ‘ஐ என் எஸ் காந்தேரி’ (INS Khanderi,) ஜனவரி 2018 .

7. சமீபத்தில், காலமான “காதர் கான்”(Kader Khan) பின்வரும் எந்த துறையை சேர்ந்தவர்?

  1. கிரிக்கெட்
  2. அரசியல்
  3. சினிமா
  4. பத்திரிக்கை
Answer & Explanation
Answer: சினிமா

Explanation:

பிரபல பாலிவுட் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான காதர் கான் 31 டிசம்பர் 2018 அன்று காலமானார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுடன், 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த காதர் கான், 250 படங்களுக்கு, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி உள்ளார்

8. “ஸ்மிருதி மந்தானா ” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. டேபிள் டென்னிஸ்
  2. கிரிக்கெட்
  3. டென்னிஸ்
  4. பாட்மிட்டன்
Answer & Explanation
Answer: கிரிக்கெட்

Explanation:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) சார்பில், 2018ம் ஆண்டிற்கான சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை ஆகிய இரட்டை விருதுகளுக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை “ஸ்மிரிதி மந்தனா” தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும்., 2018 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டுப்போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை பெற்ற வீரர் எனும் பெருமையை இந்திய பந்து வீச்சாளர் ஜாஸ்பிரித் பூம்ரா (Jasprit Bumrah) பெற்றுள்ளார்.

9. “Defying the Paradigm N. Srinivasan : Fifty Years of an extraordinary journey” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. குருநாத் மெய்யப்பன்
  2. கல்யாணி கேன்டாடி
  3. வருண் காந்தி
  4. சீனிவாசன்
Answer & Explanation
Answer: கல்யாணி கேன்டாடி

சமீபத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவர் N. சீனிவாசனைப் பற்றிய “Defying the Paradigm N. Srinivasan : Fifty Years of an extraordinary journey” என்ற புத்தகத்தை தமிழக முதலமைச்சர்  வெளியிட்டுள்ளார். இந்த புத்தகத்தை கல்யாணி கேன்டாடி (Kalyani Candade) என்பவரால் எழுதப்பட்டது.

10. உலக குடும்ப தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 30th டிசம்பர்
  2. 1st ஜனவரி
  3. 2nd ஜனவரி
  4. 3rd ஜனவரி
Answer & Explanation
Answer: ஜனவரி 1

Explanation:

மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாக கொண்டு ஆண்டுதோறும் உலக குடும்ப தினம் கொண்டாடப்படுகிறது.

More TNPSC Current Affairs


1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st January 2019”

Leave a Comment