Current Affairs in Tamil 1st October 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st October 2018. Take the quiz and improve your knowledge.

1. இந்தியா நேபாளம் இடையிலான எல்லை செயல்பாடுகள் குழுவின் 5வது கூட்டம் நடைபெற்ற இடம்?
- ஜெய்பூர்
- புதுடெல்லி
- காத்மாண்டு
- போக்ஹாரா
Answer & Explanation
Answer: காத்மாண்டு
Explanation:
செப்டம்பர் 21 அன்று, இந்தியா-நேபாளம் இடையிலான எல்லை செயல்பாடுகள் குழுவின் 5வது கூட்டம் நடைபெற்றது.
TNPSC Group 2 Model Question Papers – Download
2. “ஆர்தர் ஆஷ்கின்” பின்வரும் எந்த பிரிவின் கீழ் நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
- இயற்பியல்
- வேதியியல்
- மருத்துவம்
- அமைதி
Answer & Explanation
Answer: இயற்பியல்
Explanation:
அமெரிக்கவைச் சேர்ந்த ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸின் ஜெராரர்டு முரோ, கனடாவின் டோனா ஸ்டிரிக்லேண்டு ஆகியோர் நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர். ‘லேசர் இயற்பியல்’ துறையில் சாதித்ததற்காக மூவர் விஞ்ஞானிகள் குழு வாங்க உள்ளது.
3. “Mohan Bhagwat : Influencer-in-Chief” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- ஆண்டி மரினோ
- எஸ்.ஹரிஷ்
- கிங்ஸ்ஹக் நக்
- நீலஞ்சன் முகபாப்புதய்
Answer & Explanation
Answer: கிங்ஸ்ஹக் நக்
Explanation:
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எடிட்டர் Kingshuk Nag, RSS-இன் தற்போதைய தலைவரான மோகன் பகவத் பற்றி “Mohan Bhagwat : Influencer-in-Chief” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
4. 2018ஆம் ஆண்டுக்கான “உலக வாழ்விட தினத்தின்” கருப்பொருள்?
- Public Spaces for All
- Cities and Climate Change
- Housing at the Centre
- Municipal Solid Waste Management
Answer & Explanation
Answer: Municipal Solid Waste Management
Explanation:
1986லிருந்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் முதலாவது திங்கள் உலக வாழ்விட தினமாக (World Habitat Day) அனுசரிக்கப்பட்டு வருகிறது. இத்தினமானது இந்த ஆண்டு அக்டோபர் 1 அன்று அனுசரிக்கப்பட்டது.
5. உலக முதியோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 1st அக்டோபர்
- 2nd அக்டோபர்
- 3rd அக்டோபர்
- 4th அக்டோபர்
Answer & Explanation
Answer: 1st அக்டோபர்
Explanation:
1990ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையானது அக்டோபர் 1 ஐ உலக முதியோர் தினம் என்று அறிவித்தது, அதன்படி 1991 முதல் அக்டோபர் 1 ஆனது உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Celebrating Older Human Rights Champions
6. 2018 ஆம் ஆண்டுக்கான வயோஸ்ஸ்ரீத சம்மான் விருதை பெற்றுள்ள மாவட்டம்?
- மதுரை
- திண்டுக்கல்
- தேனி
- விருதுநகர்
Answer & Explanation
Answer: மதுரை
Explanation:
மூத்த குடிமக்களுக்கு சேவை மற்றும் வசதிகளை வழங்கும் சிறந்த மாவட்ட பஞ்சாயத்துகான “வயோஸ்ஸ்ரீத சம்மான் -2018” விருது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது .
7. சமீபத்தில், பன்னாட்டு நிதியத்தின் ( IMF ) தலைமைப் பொருளாதார வல்லுநராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்?
- கீதா கோபிநாத்
- ரகுராம் ராஜன்
- அமெர்தியா சென்
- மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட்
Answer & Explanation
Answer: கீதா கோபிநாத்
Explanation:
தற்போது IMF தலைமைப் பொருளாதார வல்லுநராக இருக்கும் மவுரீஸ் ஆப்ஸ்பீல்ட் இந்த ஆண்டு ஓய்வு பெறுவதை அடுத்து அப்பதவிக்கு கீதா கோபிநாத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
ரகுராம் ராஜனுக்கு பின், ஐஎம்எப்க்கு நியமிக்கப்படும் 2வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
8. சமீபத்தில், சதாத் (SATAT) என்ற திட்டத்தை துவங்கி வைத்தவர்?
- அருண்ஜெட்லி
- தர்மேந்திர பிரதான்
- சுஷ்மா சுவராஜ்
- வெங்கையா நாயுடு
Answer & Explanation
Answer: தர்மேந்திர பிரதான்
Explanation:
உயிரி எரிவாயு (Compresses Bio-Gas) உற்பத்திக்கான ஆலைகளை அமைக்கும் சதாத் (SATAT-Scestainable Alternative Toward Affordable Transportation) புதிய திட்டத்தினை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதுடெல்லியில் அக்டோபர் 01, அன்று தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வாகனங்களுக்கு மாற்று எரிவாயுவை தங்கு தடையின்றி கிடைக்க வகை செய்வது ஆகும்.
9. “தீபிகா குமாரி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- குதிரை ஏற்றம்
- துப்பாக்கி சுடுதல்
- வில்வித்தை
- நீச்சல்
Answer & Explanation
Answer: வில்வித்தை
Explanation:
ஜார்கண்டை சேர்ந்த தீபிகா குமாரி ஒரு வில்வித்தை வீராங்கனை ஆவார். இவர் சமீபத்தில் துருக்கியில் நடைபெற்ற உலக கோப்பை வில்வித்தை போட்டியின் பெண்களுக்கான தனிநபர் “ரிகர்வ்” பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இது, இவர் உலக கோப்பை போட்டியில் பெறும் 5வது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. (2011, 2012, 2013, 2015 அனைத்தும் வெள்ளிகளே)
ஆண்கள் தனிநபர் “ரிகர்வ்” பிரிவில் அபிஷேக் வர்மா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இந்த ஆண்டுக்கான உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா மொத்தம் 3 பதக்கங்கங்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
10. சமீபத்தில், ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அமிதவா ராய்
- முகமது முஸ்தாக் அஹ்மத்
- கோமல் லகிரி
- எஸ்.எஸ். தேஸ்வால்
Answer & Explanation
Answer: முகமது முஸ்தாக் அஹ்மத்
Explanation:
ஹாக்கி இந்தியா அமைப்பின் புதிய தலைவராக பீகாரைச் சேர்ந்த முகமது முஸ்தாக் அகமது அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
More TNPSC Current Affairs
Related