TNPSC Current Affairs Question and Answer in Tamil 1st September 2018

Current Affairs in Tamil 1st September 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 1st September 2018. Take the quiz and improve your knowledge.



TNPSC Current Affairs in Tamil 1st September 2018

1. வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?

  1. கேரளா
  2. மகாராஷ்டிரா
  3. தமிழ்நாடு
  4. உத்திரப் பிரதேசம்
Answer & Explanation
Answer: மகாராஷ்டிரா

Explanation:

சமீபத்தில் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின் படி வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், உத்திரப் பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் வருகை தரும் நாடுகளின் பட்டியலில் வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Group 2 Model Question Papers – Download

2.  2018ம் ஆண்டு முதல் காலாண்டின், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP)?

  1. 6.5%
  2. 8.2%
  3. 7.7%
  4. 7.8%
Answer & Explanation
Answer: 8.2%

Explanation:

2017ம் ஆண்டு இறுதி காலாண்டில் 7.7 சதவீகிதமாக இருந்த நாட்டின்  ஜி.டி.பி, 2018ம் ஆண்டு முதல் காலாண்டில் (April-June) 8.2% சதவீகிதமாக உயர்ந்துள்ளது.

3. “Shades of Truth: A Journey Derailed” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. ஜெய்ராம் ரமேஷ்
  2. சல்மான் குர்ஷித்
  3. கபில் சிபல்
  4. பிரணாப் முகர்ஜி
Answer & Explanation
Answer: கபில் சிபல்

4. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவர்?

  1. எஸ்.ஜே.வசீப்தர்
  2. தருண் அகர்வால்
  3. அசோக் டாங்ரே
  4. சுந்தரவல்லி
Answer & Explanation
Answer: தருண் அகர்வால்

Explanation:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவராக பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே.வசீப்தரை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. ஆனால் அதை வசீப்தர் ஏற்க மறுத்ததால் புதிய தலைவராக மேகாலாயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

5. தேசிய ஊட்டச்சத்து வாரம் எப்போது அனுசரிகப்டுகிறது?

  1. 8 to 14 செப்டம்பர்
  2. 1 to 7 செப்டம்பர்
  3. 20 to 25 ஆகஸ்ட்
  4. 26 to 31 ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 1 to 7 செப்டம்பர்

Explanation:

தேசிய ஊட்டச்சத்து வாரம் ஒவ்வொரு ஆண்டும் 1 செப்டம்பர் முதல் 7 செப்டம்பர் வரை கடைபிடிக்கப்படுகிறது.

2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Go Further with Food”

6. மிகப்பெரிய கடற்பயிற்சியான KAKADU நடைபெறும் நாடு?

  1. ஆஸ்திரேலியா
  2. இந்தோனேசியா
  3. இலங்கை
  4. இந்தியா
Answer & Explanation
Answer: ஆஸ்திரேலியா

Explanation:

மிகப்பெரிய கடற்பயிற்சிகளில் ஒன்றான KAKADU-வின் 14வது பயிற்சி ஆஸ்திரேலியாவின் டார்வின் (Darwin) துறைமுகத்தில் ஆகஸ்ட் 29-முதல் செப்டம்பர் 18 வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சியில் இந்தியாவின் INS-சஹாயாத்ரி (INS-Sahyadri) பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.

காகடு தேசிய பூங்கா (Kakadu National Park) என்ற பெயரில் இருந்து இந்த பயிற்சிக்கு KAKADU என்று பெயர் வைக்கப்பட்டது.

7.  சமீபத்தில் நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாடு எங்கு நடைபெறுகிறது?

  1. ஆஸ்திரேலியா
  2. பங்களாதேஷ்
  3. இலங்கை
  4. நெதர்லாந்து
Answer & Explanation
Answer: நெதர்லாந்து

Explanation:

நெதர்லாந்தின் சர்வதேச மகரிஷி ஆயுர்வேத அறக்கட்டளை, புனேயில் உள்ள சர்வதேச ஆயுர்வேத அகாடமி, புதுதில்லியிலுள்ள அகில இந்திய ஆயுர்வேத மாநாடு ஆகியவை நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதரகத்துடன் இணைந்து கூட்டாக “நான்காவது சர்வதேச ஆயுர்வேத மாநாட்டை நெதர்லாந்தில் நடத்துகிறது.

இந்த மாநாட்டை மத்திய ஆயுஷ் இணையமைச்சர் திரு ஸ்ரீபாத் நாயக் நெதர்லாந்தில் செப்டம்பர் 1 அன்று தொடங்கி வைத்தார்.

8. சமீபத்தில்  எந்த வங்கி  AA Plus  தரச் சான்றை பெற்றது?

  1. New Development Bank
  2. Asian Development Bank
  3. African Development Bank
  4. Central Bank of West African States
Answer & Explanation
Answer: New Development Bank

Explanation:

சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் புதிய மேம்பாட்டு வங்கிகக்கு, Standard & Poor என்ற சர்வதேச தரச்சான்று நிறுவனம் “AA Plus”  தரச் சான்றை வழங்கியுள்ளது.

பிரிக்ஸ் நாடுகள் இணைந்து தொடங்கிய வங்கியே இந்த New Development Bank ஆகும். இதன் தற்போதய தலைவர் இந்தியாவின் கே.வி. காமத் ஆவார்.

9. “அமித் பங்கல்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. ஹாக்கி
  2. துப்பாக்கி சுடுதல்
  3. பாட்மிட்டன்
  4. குத்துசண்டை
Answer & Explanation
Answer: குத்துசண்டை

Explanation:

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ‘அமித் பங்கல்’ (Amit Panghal) சமீபத்தில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு குத்துச் சண்டை போட்டியின் 49 கிலோ எடைப் பிரிவில், 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் பெற்ற உஸ்பெகிஸ்தானின் ஹசன்பாய் உஸ்மாடோவை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

10. சமீபத்தில் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டமைப்பின், 6வது வர்த்தக மந்திரிகள் மாநாடு நடைபெற்ற இடம் ?

  1. ஜப்பான்
  2. சிங்கப்பூர்
  3. மலேசியா
  4. இந்தியா
Answer & Explanation
Answer: சிங்கப்பூர்

Explanation:

ஆகஸ்ட் 30 மற்றும் 31-இல் 6th RCEP Trade Minister Meeting சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்தியக்குழுவானது, இந்திய வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் சுரேஷ் பாபு தலைமையில் பங்கு பெற்றனர்

More TNPSC Current Affairs



Leave a Comment