Current Affairs in Tamil 20-21st March 2019
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 20-21 March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.
1. IND-INDO CORPAT என்ற கப்பற்படை ஒத்திகை பயிற்சி நடைபெறும் இடம்?
- திருவனந்தபுரம்
- போர்ட் பிளேர்
- புனே
- வட சிக்கிம்
Answer & Explanation
Answer: போர்ட் பிளேர்
Explanation:
இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் IND-INDO CORPAT என்ற கூட்டுகப்பற்படை பயிற்சியின் 33வது பதிப்பு அந்தமான் நிகோபார் தீவுவின் போர்ட் பிளேயரில் மார்ச் 19 முதல் ஏப்ரல் 4 வரை நடைபெறுகிறது.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. ’FAME’ திட்டத்தின் இரண்டாவதுகட்டம் அமலுக்கு வர உள்ள நாள்?
- ஏப்ரல் 1
- ஏப்ரல் 2
- மே 1
- மார்ச் 31
Answer & Explanation
Answer: ஏப்ரல் 1
Explanation:
பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க தொடங்கப்பட்ட ’FAME’ திட்டத்தின் இரண்டாவது கட்டமான FAME-2 திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 3 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.
கடந்த 2015 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2 ஆண்டுக்கு செயல்படுத்தபட்டு வந்த FAME திட்டத்தினை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விரிவுபடுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கி அதற்காக 10000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
FAME = Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India
3. ‘நூர்சுல்தான்’ என்பது பின்வரும் எந்த நாட்டின் தலைநகரம்?
- தஜிகிஸ்தான்
- கஸகஸ்தான்
- உஸ்பெகிஸ்தான்
- மங்கோலியா
Answer & Explanation
Answer: கஸகஸ்தான்
Explanation:
கஸகஸ்தான் நாட்டின் தலைநகரமான “ஆஸ்தானா” சமீபத்தில் ‘நூர்சுல்தான்’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு, கஜகஸ்தான் ஜனாதிபதி நர்சுல்தான் நாஜ்பேபேவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை தொடர்ந்து கஸகஸ்தானின் தலைநகரான அஸ்தானாவின் பெயரை நர்சுல்தான் என மாற்றப்பட்டுள்ளது.
4. சமீபத்தில், Project Sangam திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள தொழில்நுட்ப நிறுவனம்?
- மைக்ரோசாப்ட்
- கூகிள்
- HCL
- இன்போசிஸ்
Answer & Explanation
Answer: மைக்ரோசாப்ட்
Explanation:
தூய்மை இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் Project Sangam திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
5. சமீபத்தில், நீர்நாய் கணக்கெடுப்பினை துவக்கியுள்ள மாநிலம்?
- மேற்குவங்காளம்
- உத்ராஞ்சல்
- மத்திய பிரதேசம்
- உத்திரபிரதேசம்
Answer & Explanation
Answer: உத்திரபிரதேசம்
Explanation:
நாட்டிலேயே முதல் முறையாக உத்திரபிரதேச மாநில அரசு நீர்நாய் கணக்கெடுப்பினை (Otters Census) துவக்கியுள்ளது.
March 18th and 19th Current Affairs
6. சமீபத்தில், கனடா நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள இந்தியர்?
- ஹர்சித் சஜ்ஜன்
- சோனியா சித்து
- ஜக்மீத் சிங்
- தீபக் ஓபராய்
Answer & Explanation
Answer: ஜக்மீத் சிங்
Explanation:
கனடா நாடாளுமன்றத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜக்மீத் சிங், முதல் வெள்ளையர் அல்லாத எதிர்க்கட்சி தலைவர் எனும் சிறப்பைப் பெற்றுள்ளார். கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பர்னபி தெற்கு நகர தொகுதியில் கடந்த பிப்ரவரி 25ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான ஜக்மீத் சிங் 38.5 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
7. சமீபத்தில் வெளியிடப்பட்ட “ஐ.நா-வின் உலக மகிழ்ச்சி அறிக்கை” பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
- 140
- 125
- 93
- 67
Answer & Explanation
Answer: 140
Explanation:
‘உலக மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை வெளியிட்ட உலக மகிழ்ச்சி அறிக்கை பட்டியலில் இந்தியா 140-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 133வது இடத்தை பிடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பின்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. கடேசி இடத்தில் தெற்கு சூடான் உள்ளது.
மேலும்., பாகிஸ்தான் 67-வது இடத்திலும், சீனா 93-வது இடத்திலும், வங்கதேசம் 125-வது இடத்திலும் உள்ளன.
8. சமீபத்தில் கோலபுடி ஸ்ரீனிவாச தேசிய விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
- பிரேம் குமார்
- வெத் ரஹீ
- மகேஷ் ஆனந்த்
- சங்கர்தேவா
Answer & Explanation
Answer: பிரேம் குமார்
Explanation:
96 திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் அவர்களுக்கு 22-வது கோலபுடி ஸ்ரீனிவாச தேசிய விருது [Gollapudi Srinivas National Award] வழங்கப்பட்டுள்ளது.
9. 2019ஆம் ஆண்டுக்கான “சர்வதேச ஹான்ஸ் கில்லியன்” விருது யாருக்கு வழங்கப்பட்டது ?
- பிரதீப் குமார்
- ஸ்வாதி சதுர்வேதி
- ஆஷிஸ் நந்தி
- நரசிம்ம ராவ்
Answer & Explanation
Answer: ஆஷிஸ் நந்தி
Explanation:
பிரபல இந்திய உளவியலாளர் “ஆஷிஸ் நந்தி”-க்கு (Ashis nandy) 2019ம் ஆண்டிற்கான சர்வதேச ஹான்ஸ் கில்லியன் விருது (Hans Killian Award) வழங்கப்பட்டுள்ளது.
ஆசியாவிலேயே இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
10. “தபித்தா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- டேபிள் டென்னிஸ்
- உயரம் தாண்டுதல்
- நீளம் தாண்டுதல்
- பாட்மிண்டன்
Answer & Explanation
Answer: நீளம் தாண்டுதல்
Explanation:
ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிருக்கான நீளம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த “தபித்தா” தங்கம் வென்றுள்ளார்.
மேலும், ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தமிழக வீரர் “மகேஷ்” வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
11. உலக மகிழ்ச்சி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 19 மார்ச்
- 20 மார்ச்
- 21 மார்ச்
- 22 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 20
Explanation:
ஐ.நா. பொதுச்சபை 2012ஆம் ஆண்டு ஜூலை 12 அன்று மார்ச் 20ஐ சர்வதேச மகிழ்ச்சி தினமாக அறிவித்தது. அன்றுமுதல் ஆண்டுதோறும் மார்ச் 20 உலக மகிழ்ச்சி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Happier Together (மகிழ்ச்சியில் ஒற்றுமை)
More TNPSC Current Affairs
Related
1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 20th and 21st March 2019”