Current Affairs in Tamil 20th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 20th July 2018. Take the quiz and improve your knowledge.
1. 2018 ஆம் ஆண்டுக்கான சிற்பி இலக்கிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்?
- ஹரிகிருஷ்ணன்
- மகுடேசுவரன்
- எஸ்.வைதீஸ்வரன்
- சுகுமாரன்
Answer & Explanation
Answer: மகுடேசுவரன்
Explanation:
சிற்பி அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் (1)2018 சிற்பி இலக்கிய விருது கவிஞர் மகுடேசுவரனுக்கும் (2) பொ. மா. சுப்ரமணியம் விருது, மணல் வீடு ஹரிகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட உள்ளதாக சிற்பி அறக்கட்டளை தலைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் .
2. ஊனமுற்ற மக்களுக்கு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பதற்கான தேசிய மையத்தின் நிர்வாக புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அர்மான் அலி
- ஷிஷு சரோதி
- ஜாவேத் அபிடீ
- ஜோஷி சின்ஹா
Answer & Explanation
Answer: அர்மான் அலி
Explanation: அர்மான் அலி
ஊனமுற்ற மக்களுக்கு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பதற்கான தேசிய மையத்தின் நிர்வாக இயக்குனராக அர்மான் அலி(Arman Ali) நியமிக்கப்பட்டுள்ளார். [National Centre for Promotion of Employment for Disabled People (NCPEDP)]
3. சமீபத்தில் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் 68வது உறுப்பினராக இணைந்துள்ள நாடு?
- இந்தோனேசியா
- மியான்மர்
- இலங்கை
- பாகிஸ்தான்
Answer & Explanation
Answer: மியான்மர்
Explanation:
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் [International Solar Alliance] 68 வது உறுப்பினர் நாடாக மியான்மர் இணைந்துள்ளது [68th member of the association.]
4. பிட்ச் பிளாக் 2018 (Pitch Black-18) என்ற போர் ஒத்திகை பயிற்சி நடைபெற உள்ள நாடு?
- ஜப்பான்
- சீனா
- ஆஸ்திரேலியா
- அமெரிக்கா
Answer & Explanation
Answer: ஆஸ்திரேலியா
Explanation:
ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் 2018 (PB-18) போர் ஒத்திகை பயிற்சியில் முதல் முறையாக இந்திய விமானப்படை பங்கேற்க உள்ளது. இந்த போர் பயிற்சியை Royal Australian Air Force (RAAF) நடத்துகிறது.
5. இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 4 வது கடல்சார் தொடர்பான மாநாடு நடைபெறும் இடம்?
- புது தில்லி
- விசாகப்பட்டினம்
- டோக்கியோ
- கியோட்டோ
Answer & Explanation
Answer: புது தில்லி
Explanation:
புது தில்லியில், இந்தியா மற்றும் ஜப்பான் இடையேயான 4 வது கடல்சார் தொடர்பான மாநாடு (4th Maritime Affairs Dialogue) ஜூலை 18 அன்று நடைபெற்றது . இந்தியா சார்பில் பங்கஜ் சர்மா (வெளியுறவு துறையின் கூடுதல் செயலாளர்) கலந்துகொண்டார்.
6. சமீபத்தில் AICTE-யின் தலைவராக நியமிக்கப்பட்டுளவர்?
- Vijay P. Bhatkar
- Sanjay Govind Dhande
- Anil D Sahasrabudhe
- F. C. Kohli
Answer & Explanation
Answer: Anil D Sahasrabudhe
Explanation:
பேராசிரியர் Anil D Sahasrabudhe மீண்டும் AICTE (All India Council for Technical Education ) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
7. ஆக்சிடோசின் (Oxcytocin) மருந்து மீதான தடை எப்போது முதல் நடைமுறைக்கு வருகிறது?
- ஆகஸ்ட் 1
- செப்டம்பர் 1
- அக்டோபர் 1
- நவம்பர் 1
Answer & Explanation
Answer: செப்டம்பர் 1
Explanation:
பிரசவத்தின்போது அன்னையர் இறப்பதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் ஆக்சிடோசின் (Oxcytocin) மருந்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்தத் தடை வரும் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.
பசுக்கள் அதிகமாகப் பால் சுரக்க ஆக்சிடோசின் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இந்த மருந்திற்கு தடை
8. சமீபத்தில் காலமான கவிஞர் கோபால் தாஸ் நீராஜ், பின்வரும் எந்த மொழி கவிஞர்?
- மலையாளம்
- கன்னடம்
- ஹிந்தி
- குஜராத்தி
Answer & Explanation
Answer: ஹிந்தி
Explanation:
புகழ்பெற்ற ஹிந்தி கவிஞரான கோபால் டஸ் நீராஜ் டெல்லியில் ஜூலை-19 அன்று காலமானார். இவர் பாலிவுட் படங்களுக்கு பல பாடல்களை எழுதியுள்ளார்.
9. ‘சகார் S காஷ்யப்’(Sagar S Kashyap) பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- டென்னிஸ்
- மல்யுத்தம்
- கிரிக்கெட்
- கபடி
Answer & Explanation
Answer: டென்னிஸ்
Explanation:
‘சகார் காஷ்யப்’(Sagar Kashyap), விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் நடுவராக பங்கேற்கும் மிகவும் இளம் வயது (31வயது) இந்திய நடுவர் ஆவார்.
More TNPSC Current Affairs
Related