TNPSC Current Affairs Question and Answer in Tamil 22nd and 23rd March 2019

Current Affairs in Tamil 22-23rd March 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 22-23 March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.



1. இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கான முதல் உயர் நிலை உரையாடலுக்கான கருத்தரங்கு நடைபெற்ற இடம்?

  1.  ஜகார்தா
  2. போர்ட் பிளேர்
  3. டெல்லி
  4. கொல்கத்தா
Answer & Explanation
Answer: ஜகார்தா

Explanation:

இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கான முதல் உயர் நிலை உரையாடலுக்கான முதல் கருத்தரங்கு (High-Level Dialogue on Indo-Pacific Cooperation )
இந்தோனேசியா தலைநகர் ஜகர்த்தாவில் நடைபெற்றது.

கருப்பொருள்: “Towards a Peaceful, Prosperous, and Inclusive Region”

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் கோடைகால போட்டியில் இந்தியா வென்ற பதக்கங்கள் எண்ணிக்கை?

  1. 368
  2. 268
  3. 364
  4. 264
Answer & Explanation
Answer: 368

Explanation:

ஐக்கிய அரபு எமிரேட் அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் கோடைகால போட்டியில் இந்தியா 368 பதக்கங்களை வென்றுள்ளது.

  • 85 தங்கம்,
  • 154 வெள்ளி
  • 129 வெண்கலம்

இதன் அடுத்த போட்டி 2021 ல் சுவீடனில் நடைபெற உள்ளது.

3. தமிழக மாநில சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. சங்கரலிங்கம்
  2. முரளிரஜன
  3. புஸ்பலதா
  4. ஜான் மகேந்திரன்
Answer & Explanation
Answer: ஜான் மகேந்திரன்

Explanation:

4. சமீபத்தில், Shiksha Vani என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு?

  1. UPSC
  2. ICSC
  3. CBSE
  4. NCERT
Answer & Explanation
Answer: CBSE

Explanation:

10, 12 வகுப்பு தேர்வு தாள்களை மதிப்பீடு செய்து பதிவேற்றுவதற்கு CBSE (Central Board of Secondary Education)  Shiksha Vani என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

5.  சமீபத்தில், எந்த குறுங்கோளில் நீ்ர் இருப்பதற்கான சாதகமான சூழ்நிலை கண்டறியப்பட்டுள்ளது?

  1. சரோன்
  2. பென்னு
  3. ர்யுகு
  4. சிரிஸ்
Answer & Explanation
Answer: பென்னு

Explanation:

நாசா அனுப்பிய OSIRIS-REx எனும் செயற்கைகோள் பென்னு எனும் குறுங்கோளில் ஆய்வுசெய்ததில் நீர் இருப்பதற்கான சாதகமான சூழ்நிலையை கண்டறிந்துள்ளது.

குறுங்கோளில் உள்ள கனிம வளங்களை கண்டுபிடிப்பதற்காக கடந்த 2016 ம் ஆண்டு புளோரிடாவின் கேப்கேனவரால் ஏவுதளத்திலிருந்து ஓஸிரிஸ் ரெக்ஸ் விண்கலத்தை நாசா நிறுவனம் அனுப்பியது. 2 மில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்த ரெக்ஸ், பென்னு என்ற குறுங்கோளை கண்டறிந்து அதில் கரையறங்கி கடந்த மார்ச் 2018-இல் மேற்பரப்பை படம் எடுத்து அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

March 20th and 21st Current Affairs

6. சமீபத்தில், 2019ம் ஆண்டிற்கான சர்வதேச சமஸ்கிருத மாநாடு நடைபெற்ற இடம்?

  1. ஜெனிவா
  2. வான்குவர்
  3. காத்மாண்டு
  4. பாங்காங்
Answer & Explanation
Answer: காத்மாண்டு

Explanation:

2019ம் ஆண்டிற்கான சர்வதேச சமஸ்கிருத மாநாடு நேபாளத்தலைநகர் காத்மாண்டில் மார்ச் 19 முதல் 21வரை நடைபெற்றது.

7. சமீபத்தில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை கண்டறிந்துள்ள பல்கலைக்கழகம்?

  1. ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்
  2. சிக்காகோ பல்கலைக்கழகம்
  3. கொலம்பியா பல்கலைக்கழகம்
  4. கலிபோர்னியா இன்ஸ்டிட்டியூட்
Answer & Explanation
Answer: ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக

Explanation:

சூரிய சக்தியைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளைத் தயாரிக்கும் முறையை அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

8. 2018ம் ஆண்டிற்கான வியாஸ்சம்மன் விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது ?

  1. மம்தா காலியா
  2. சிவன் பிரசாத் சிங்
  3. லீலாதார் ஜகுடி
  4. சங்கர்தேவா
Answer & Explanation
Answer: லீலாதார் ஜகுடி

Explanation:

2018ம் ஆண்டிற்கான வியாஸ்சம்மன் விருது ஹிந்தி எழுத்தாளர் லீலாதார் ஜகுடி (Leeladhar Jagudi) என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Jitne Log Utne Prem என்ற பாடலின் தொகுப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

9. 2019ஆம் ஆண்டுக்கான ” ஏபெல் பரிசு” யாருக்கு வழங்கப்பட்டது ?

  1. ஜான் டேட்
  2. கரேன் உல்லென்பெக்
  3. ஆஷிஸ் நந்தி
  4. ராபர்ட் லாங்லாண்ட்ஸ்
Answer & Explanation
Answer: கரேன் உல்லென்பெக்

Explanation:

2019ஆம் ஆண்டுக்கான ” ஏபெல் பரிசு” அமெரிக்க பேராசிரியரான கரேன் உல்லென்பெக் (Karen Uhlenbeck ) -க்கு வழங்கப்பட்டுள்ளது.

ஏபெல் பரிசை பெறும் முதல் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

10. “விசேஷ் பரமேஸ்வரன்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. டேபிள் டென்னிஸ்
  2. உயரம் தாண்டுதல்
  3. நீளம் தாண்டுதல்
  4. நீச்சல்
Answer & Explanation
Answer: நீச்சல்

Explanation:

மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற 55வது சர்வதேச நீச்சல் போட்டியில் தமிழக மாணவர் விசேஷ் பரமேஸ்வரன் (13வயது) தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற அவர், பந்தய தூரத்தை 2 நிமிடம், 15 வினாடியில் கடந்து புதிய சாதனையுடன் தங்கம் வென்றார். கடந்த 25 வருட சாதனையை பரமேஸ்வரன் முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

11. உலக நீர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 19 மார்ச்
  2. 20 மார்ச்
  3. 21 மார்ச்
  4. 22 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 22

Explanation:

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Leaving no one behind

More TNPSC Current Affairs


Leave a Comment