TNPSC Current Affairs Question and Answer in Tamil 22nd July 2018

Current Affairs in Tamil 22nd July 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 22nd July 2018. Take the quiz and improve your knowledge.




1. ஆசிய ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றவர்?

  1. பிரனவ் சோப்ரா
  2. சமீர் வர்மா
  3. லக்சயா சென்
  4. கருணாரத்னா
Answer & Explanation
Answer: லக்சயா சென்

Explanation: 1965ம் ஆண்டிற்கு பின் பாட்மிண்டன் ஆசிய ஜீனியர் சாம்பியன்சிப் போட்டிகளில் தங்கம் வெல்லும் முதல் இந்திய ஆடவர் என்ற பெருமையை “லக்சயா சென்” (Lakshya Sen) பெற்றுள்ளார்.

  • இந்தோனேஷியா நாட்டின் ஜகர்தா நகரில் July 14-22 வரை இப்போட்டிகள் நடைபெற்றன.
  • வெள்ளிபதக்கம் வென்றவர் – Kunlavut Vitidsarn (தாய்லாந்து)
  • வெண்கல பதக்கம் வென்றவர் – Ikhsan Leonardo Imanuel Rumbay (இந்தோனிசியா) (இறுதி ஆட்டத்தில் ‘லக்சயா சென்’ உடன் மோதினார்)

இதற்கு முன்னர் இப்போட்டிகளில் பதக்கம் வென்றவர்கள்

  • 1965- கௌதம் தாக்க்கர் (Gold)
  • 2009- பிரனவ் சோப்ரா/ பிரஜிக்தா சாவந்த் (Bronze)
  • 2011- பிவி சிந்து / சமீர் வர்மா (Bronze)
  • 2012- பிவி சிந்து (Gold)
  • 2012- பிவி சிந்து / சமீர் வர்மா (Bronze)
  • 2016- லக்சயா சென் (Bronze)

2. 8 வது BRICS சுகாதார அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?

  1. டெல்லி
  2. டர்பன்
  3. மாஸ்கோ
  4. பிரேசிலியா
Answer & Explanation
Answer: டர்பன்

Explanation: 8 வது BRICS சுகாதார அமைச்சர்கள் மாநாடு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்றது. சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் J P Nadda தலைமையில் இந்திய குழு கலந்து கொண்டனர்.

3. சமீபத்தில் காலமான ‘ராம்சந்திர சிங்டியோ’ பினவரும் எந்த துறையுடன் தொடர்புடையவர்?

  1. அரசியல்
  2. சினிமா
  3. இலக்கியம்
  4. பத்திரிக்கை
Answer & Explanation
Answer: அரசியல்

Explanation: சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் மற்றும் முதல் நிதி அமைச்சர் ஆவார்

4. FEDAR என்ற விண்வெளியில் பயன்படுத்தக்கூடிய ரோபோக்களை உருவாகியுள்ள நாடு?

  1. சீனா
  2. ஜப்பான்
  3. அமெரிக்கா
  4. ரஷ்யா
Answer & Explanation
Answer: ரஷ்யா

Explanation:

விண்வெளி மையத்தில் சிக்கலான ஆய்வுகளுக்கு இயந்திர மனிதர்களைப் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஃபெடார் ((FEDAR)) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இயந்திர மனிதர்களை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளது.

5. “ஆதெனா” (Athena) என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த உள்ள தனியார் நிறுவனம்?

  1. Facebook
  2. Microsoft
  3. Google
  4. Twitter
Answer & Explanation
Answer: Facebook

Explanation:

Facebook நிறுவனம், தனக்கென்று சொந்தமான இணையதள செயற்கைக்கோளை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவத் திட்டமிட்டுள்ளது. இணைய வசதி இல்லாத பகுதிகளையும் சென்றடைவதே இதன்நோக்கம்.

“ஆதெனா” (Athena) என்ற பெயருடன் பூமியில் இருந்து மிகக் குறைந்த தொலைவில் பயணிக்கும் சிறிய ரக செயற்கைக் கோளை விண்ணில் செலுத்த ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு ஆமோஸ் (Amos-6) என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் ஃபேஸ்புக்கின் முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத் தக்கது.

6. 7 வது-கிராமப்புற மரபுரிமை மற்றும் மேம்பாட்டுக்கான அறக்கட்டளையின் வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற்ற இடம்?

  1. மும்பை
  2. டெல்லி
  3. கொல்கத்தா
  4. சென்னை
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

Indian Trust for Rural Heritage and Development (ITRHD)-இன் 7வது வருடாந்திர பொதுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் செயலாளர் அமித் கரே (Shri Amit Khare) இதை தொடங்கி வைத்தார்.

7. சமீபத்தில், வாகனங்கள் திருடுபோவதை தடுக்க MicroDot என்ற தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள நாடு?

  1. ஜப்பான்
  2. இந்தியா
  3. சீனா
  4. சவூதி அரேபியா
Answer & Explanation
Answer: இந்தியா

Explantion:

இந்த தொழில்நுட்பத்தின் படி ஆயிரக்கணக்கான  சிறிய லேசர் புள்ளிகள் வாகனத்தின் எண், வாகனத்தின் பாகங்கள் மற்றும் எஞ்சின் உட்பட அனைத்திலும்  பொறிக்கப்பட்டிருக்கும். இவை தொலைந்துபோன/ திருடப்பட்ட வாகங்களை எளிதில் கண்டுபிடிக்க உதவும்.

More TNPSC Current Affairs



Leave a Comment