TNPSC Current Affairs Question and Answer in Tamil 23rd December 2018

Current Affairs in Tamil 23rd December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 23rd December 2018. Take the quiz and improve your knowledge.



1. இந்தியாவிலுள்ள சிறந்த 10 காவல் நிலையங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து இடம் பெற்றுள்ள காவல்நிலையம்?

  1. மேலூர்
  2. பெரியகுளம்
  3. திசையன்விளை
  4. அருப்புக்கோட்டை
Answer & Explanation
Answer: பெரியகுளம்

Explanation:

இந்தியாவிலுள்ள சிறந்த 10 காவல் நிலையங்களுக்கான பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெரியகுளம் காவல் நிலையம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல்:

  1. கலு – ராஜஸ்தான்
  2. கேம்ப்பெல் பே – அந்தமான் நிக்கோபார் தீவுகள்
  3. ஃபராக்கா – மேற்கு வங்கம்
  4. நெட்டப்பாக்கம் – புதுச்சேரி
  5. குடேரி – கர்நாடகா
  6. சோப்பல் – ஹிமாச்சல பிரதேசம்
  7. லகேரி – ராஜஸ்தான்
  8. பெரியகுளம்- தமிழ்நாடு
  9. முன்ச்யரி-உத்தராகண்ட்
  10. சுர்கோரம்-கோவா

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில், எங்கு இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கான சர்வதேச தகவல் இணைவு மையம் துவங்கப்பட்டுள்ளது?

  1. குருகிராம்
  2. இந்தூர்
  3. நாக்பூர்
  4. கொச்சின்
Answer & Explanation
Answer: அசோக் கெலாட்

Explanation:

Information Fusion Centre – Indian Ocean Region (IFC-IOR) – ஆனது 22 டிசம்பர் 2018 அன்று குருகிராமில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் துவக்கி வைக்கப்பட்டது.

3. 2019ஆம் ஆண்டில் நடைபெற உள்ள குளோபல் ஏவியேஷன் உச்சி மாநாட்டிற்காக இந்திய விமான போக்குவரத்து அமைச்கம் அறிமுகப்படுத்தியுள்ள மொபைல் செயலி?

  1. GPS-2019
  2. GAS-2019
  3. CAS-2019
  4. GAA-2019
Answer & Explanation
Answer: GAS-2019

Explanation:

வரும் ஜனவரியில் மும்பையில் நடைபெற உள்ள குளோபல் ஏவியேஷன் உச்சி மாநாட்டிற்காக இந்திய விமான போக்குவரத்து அமைச்கம் GAS-2019 என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

4. புருண்டி நாட்டின் புதிய தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ள நகரம்?

  1. Bururi Province
  2. Ngozi Province
  3. Bujumbura
  4. Gitega
Answer & Explanation
Answer: Gitega

Explanation:

புருண்டி நாட்டின் புதிய தலைநகராக Gitega அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தலைநகராக இருந்தது புஜும்பூரா ஆகும்.

5.  சமீபத்தில், டி.ஜி.பி. மற்றும் ஐ.ஜி.பி களுக்கான வருடாந்திரக் கூடுகை நடைபெற்ற இடம்?

  1. குஜராத்
  2. ஆந்திரா
  3. தெலுங்கானா
  4. கேரளா
Answer & Explanation
Answer: குஜராத்

Explanation:

குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபபாய் படேல் சிலைக்கு அருகே உள்ள கெவதியா என்ற இடத்தில் வருடாந்திர டிஜிபி, ஐஜிபி மாநாடு கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற்றது.

6. சமீபத்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ரமேஷ் பவார்
  2. துஷார் ஆரோத்
  3. டபிள்யூ.வி.ராமன்
  4. அனில் கும்ப்ளே
Answer & Explanation
Answer: டபிள்யூ.வி.ராமன்

Explanation:

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த துஷார் ஆரோத் கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்ததை தொடர்ந்து ரமேஷ் பவார் தற்காலிக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது புதிய தலைமை பயிற்சியாளராக டபிள்யூ.வி.ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க மண்ணில் சதம் அடித்த (1992–93) முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியர் டபிள்யூ.வி.ராமன் என்பது குறிப்பிடத்தக்கது.

7. சமீபத்தில், காலமான “திபாலி போர்த்தகரூர்”(Dipali Borthakur) பின்வரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?

  1. கர்நாடகா
  2. மேற்குவங்கம்
  3. பீகார்
  4. அசாம்
Answer & Explanation
Answer: அசாம்

Explanation:

‘அசாமின் நைட்டிங்கேல்’ என அழைக்கப்படும் பாடகர் திபாலி போர்த்தகரூர் (Dipali Borthakur) (77 வயது) சமீபத்தில் காலமானார்

8. சமீபத்தில், தனது ஓய்வை அறிவித்த “அனுப்குமார்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கபடி
  2. கிரிக்கெட்
  3. டென்னிஸ்
  4. ஹாக்கி
Answer & Explanation
Answer: கபடி

Explanation:

பிரபல கபடி வீரரான அனுப்குமார் (Anup Kumar) சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவரது தலைமையில் இந்திய அணி 2016ஆம் ஆண்டில் உலக கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

9. “A Rural Manifesto – Realising India’s Future through her Villages” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. பிராணப்முகர்ஜி
  2. அரவிந்த் சுப்ரமணியன்
  3. வருண் காந்தி
  4. மன்மோகன்சிங்
Answer & Explanation
Answer: வருண் காந்தி

10. தேசிய கணித தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 20th டிசம்பர்
  2. 21st டிசம்பர்
  3. 22nd டிசம்பர்
  4. 23rd டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 22

Explanation:

கணித மேதை சீனிவாச இராமானுஜரின் பிறந்த தினமான டிசம்பர் 22 (22 December 1887) தேசிய கணித தினமாக அனுசரிக்கப்படுகிறது.

More TNPSC Current Affairs


Leave a Comment