TNPSC Current Affairs Question and Answer in Tamil 23rd July 2018

Current Affairs in Tamil 23rd July 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 23rd July 2018. Take the quiz and improve your knowledge.




1. இந்தியாவில் சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலங்களின் பட்டியலில், முதலிடம் வகிக்கும் மாநிலம்?

  1. கேரளா
  2. தமிழ்நாடு
  3. கர்நாடகம்
  4. தெலங்கானா
Answer & Explanation
Answer: கேரளா

Explanation:

Public Affairs Centre எனப்படும் பொது விவகாரங்கள் மையம் வெளியிட்டுள்ள சிறந்த நிர்வாகங்களை தரும் மாநிலங்கள் பட்டியலில் தொடர்ந்து 3வது வருடமாக கேரளா முதலிடம் பிடித்துள்ளது.

இரண்டாம் இடத்தில் தமிழ்நாடும். தெலங்கானா மூன்றாம் இடத்திலும், கர்நாடகா நான்காம் இடத்திலும் குஜராத் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.

2. ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் – 2018 போட்டியில் இந்தியா வென்றுள்ள பதக்கங்களின் எண்ணிக்கை?

  1. 10
  2. 9
  3. 8
  4. 7
Answer & Explanation
Answer: 8

Explanation:

டெல்லியில் நடைபெற்ற ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா மொத்தம் 8 பதக்கங்களை வென்றுள்ளது (2-தங்கம், 3-வெள்ளி, 3-வெண்கலம்)

இந்த போட்டியில் ஈரான் அணி 189 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், இந்தியா 173 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் மற்றும் 128 புள்ளிகளுடன் உஸ்பெகிஸ்தான் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

3.  லக்னோவில் காலநிலை மாற்றத்திற்கான மையத்தை தொடங்கி வைத்துள்ள அமைப்பு?

  1. சுற்றுச்சூழல் அமைச்சகம்
  2. யுனெஸ்கோ
  3. நபார்டு
  4. மத்திய அரசு
Answer & Explanation
Answer: நபார்டு

4. பயணிகளுக்கு மனநிறைவு அளிக்கும் விமானநிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள விமான நிலையம்?

  1. பலாலி விமான நிலையம்
  2. பெங்களூரு விமான நிலையம்
  3. ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம்
  4. இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்
Answer & Explanation
Answer: பெங்களூரு விமான நிலையம்

Explanation:

விமானப் பயணிகளுக்கு மனநிறைவு அளிக்கும் சேவைகளை அளிப்பதில் உலகிலேயே பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

5. சமீபத்தில் ‘மாணவர் போலீஸ் கேடட் (SPC) திட்டத்தை’ தேசிய அளவில் தொடங்கி வைத்தவர்?

  1. அருண் ஜெட்லி
  2. ராஜ்நாத் சிங்
  3. நரேந்திர மோடி
  4. நிர்மலா சீதாராமன்
Answer & Explanation
Answer: ராஜ்நாத் சிங்

Explanation:

மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், மாணவர் போலீஸ் கேடட் (SPC –
Student Police Cadet) திட்டத்தை தேசிய அளவில் தொடங்கினார். இதை போன்ற அமைப்பு கேரளாவில் கடந்த 2010 முதல் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த அமைப்பின் நோக்கம் பள்ளிகளிலும், வெளிப்புறத்திலும் மாணவர்களுக்கு மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை உருவாக்குதல்

6. இலங்கை முழுவதும் ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டதிற்கு இந்தியா அளித்துள்ள தொகை?

  1. $13.02 million
  2. $12.02 million
  3. $17.02 million
  4. $15.02 million
Answer & Explanation
Answer: $15.02 million

Explanation:

இந்தியா உதவியுடன் இலங்கை முழுவதும் 15.02 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவையை விரிவுபடுத்தும் திட்டத்தினை இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், இந்திய பிரதமர் மோடியும் இன்று கூட்டாக துவக்கி வைத்தனர்.

முதற்கட்டமாக இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் 2016-ம் ஆண்டு அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் சேவை துவக்கிவைக்கப்பட்டது.

7. 2020ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியின் சின்னமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது?

  1. Miraitowa
  2. Someity
  3. Zabivaka
  4. Borobi
Answer & Explanation
Answer: Miraitowa

Explanation:

  • Miraitowa – 2020 ஒலிம்பிக் போட்டியின் சின்னம்
  • Someity – 2020 பாரா ஒலிம்பிக் போட்டியின் சின்னம்
  • Zabivaka – 2018 பிபா உலக கால்பந்து போட்டியின் சின்னம்
  • Borobi – 2018 Commonwealth போட்டியின் சின்னம்

8. 4 வது BIMSTEC உச்சி மாநாட்டை நடத்த உள்ள நாடு?

  1. இந்தியா
  2. நேபாள்
  3. இலங்கை
  4. மியான்மார்
Answer & Explanation
Answer: நேபாள்

Explanation:

4 வது BIMSTEC மாநாடு நேபாளின் தலைநகரம், காத்மாண்டுவில் வரும் வரும் ஆகஸ்ட் 30 மற்றும் 31-இல் நடைபெற உள்ளது.

More TNPSC Current Affairs



Leave a Comment