TNPSC Current Affairs Question and Answer in Tamil 24th and 25th March 2019

Current Affairs in Tamil 24-25th March 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 24-25 March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.



1. கடற்படையின் அடுத்த தலைவராக நியமிக்கப்பட உள்ளவர்?

  1. சுனில் லான்பா
  2. கரம்பீர் சிங்
  3. அர்ஜூன் சிங்
  4. சுரீஷ் மேத்தா
Answer & Explanation
Answer: கரம்பீர் சிங்

Explanation:

இந்திய கடற்படை தளபதி சுனில் லான்பா பதவிக்காலம் விரைவில் முடியவுள்ள நிலையில் புதிய தளபதியாக (Next Chief of Naval Staff) கரம்பீர் சிங் (Karambir Singh) நியமிக்கப்பட உள்ளார்.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. தெற்காசிய மகளிர் கால்பந்து கோப்பை (SAFF) போட்டியில் சாம்பியன் பட்டம் அணி?

  1. மாலதீவு
  2. பங்களாதேஷ்
  3. நேபாள்
  4. இந்தியா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

நேபாளத்தின் பீரட் நகரில் நடைபெற்று வந்த சாஃப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா, நேபாள அணியை தோற்கடித்து தொடர்ந்து 5-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

மேலும், தொடர்ந்து 23 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3. பின்வருபர்களில் யார் ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பின் நிலைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்?

  1. துஷர் கான்டேகர்
  2. பாஸ்கரன்
  3. சர்தார் சிங்
  4. ரகுநாத்
Answer & Explanation
Answer: சர்தார் சிங்

Explanation:

ஆசிய ஒலிம்பிக் கூட்டமைப்பின் நிலைக்குழுவின் உறுப்பினராக இந்தியா ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சர்தார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் பல்வேறு நிலைக் குழுக்களில் 13 இந்திய விளையாட்டு சம்மேளன நிர்வாகிகள் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. ESPNcricinfo பின்வரும் எதனுடன் இணைந்து “Superstats” என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பபத்தை உருவாகியுள்ளனர்?

  1. IIT Madras
  2. IIT Bombay
  3. IIT Guwahati
  4. IIT Kharagpur
Answer & Explanation
Answer: IIT Madras

Explanation:

கிரிக்கெட் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து போட்டியின் முடிவு மற்றும் வீர்களின் செயல்திறனை கணிக்கும் வகையில் “Superstats” என்னும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பபத்தை ஐ.ஐ.டி. சென்னை மற்றும் ESPNcricinfo இணைந்து உருவாக்கி உள்ளனர்.

5.  சமீபத்தில், PRISMA என்ற செயற்கைகோளை ஏவிய நாடு?

  1. இந்தியா
  2. ரஷ்யா
  3. அமெரிக்கா
  4. இத்தாலி
Answer & Explanation
Answer: இத்தாலி

Explanation:

இத்தாலியின் புதிய புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் PRISMA (Precursore Iperspettrale della Missione Applicativa) வேகா(Vega) ராக்கெட் மூலம் கயானா விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்டது.

March 22nd and 23rd Current Affairs

6. அல் நாகா-3 (Al Nagah – III) என்பது இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டுக்கு இடையே நடைபெற்ற ராணுவ பயிற்சி ஆகும்?

  1. நேபாளம்
  2. பஹ்ரைன்
  3. ஓமன்
  4. பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: ஓமன்

Explanation:

அல் நாகா-3 (Al Nagah – III) என்ற பெயரில் இந்தியா மற்றும் ஓமன் படைகள் இணைந்து ஓமனில் உள்ள ஜாபேல் அல் அக்தர் பயிற்சி முகாமில் ராணுவ பயற்சியை மேற்கொண்டன.

7. சமீபத்தில் IATA என்ற சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பில் இணைந்த இந்திய நிறுவனம்?

  1. Spice Jet
  2. Indigo
  3. Air India
  4. Jet Airways
Answer & Explanation
Answer: Spice Jet

Explanation:

குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்கும் அமைப்பான International Air Transport Association (IATA) அமைப்பின் முதல் இந்திய உறுப்பினராக SpiceJet விமான நிறுவனம் இணைந்துள்ளது.

8. சர்வதேச சிறந்த ஆசிரியர் விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது ?

  1. ஸ்வரூப் ராவல்
  2. பீட்டர் தபசி
  3. நரேஷ் கோயல்
  4. ஆர்த்தி குவாங்கோ
Answer & Explanation
Answer: பீட்டர் தபசி

Explanation:

2019ம் ஆண்டிற்கான சர்வதேச சிறந்த ஆசிரியர் (Global Teacher) விருது கென்ய ஆசிரியரான பீட்டர் தபசி (Peter Tabichi) என்பவருக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதானது துபாயின் வார்க்கி குழுமத்தின் சார்பில் 2015ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

9. சமீபத்தில் “நிஷான் – இ- பாகிஸ்தான்” விருது யாருக்கு வழங்கப்பட்டது ?

  1. ஜாகிர் நாயக்
  2. கரேன் உல்லென்பெக்
  3. மஹதிர் முஹம்மது
  4. நஜீப் ரசாக்
Answer & Explanation
Answer: மஹதிர் முஹம்மது

Explanation:

பாகிஸ்தான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான  “நிஷான் – இ- பாகிஸ்தான்” விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

10. “ஜோசிம் பெர்சன்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. டேபிள் டென்னிஸ்
  2. உயரம் தாண்டுதல்
  3. பாட்மிட்டன்
  4. டென்னிஸ்
Answer & Explanation
Answer: பாட்மிட்டன்

Explanation:

மேட்ச் ஃபிக்ஸிங் ஈடுபட்டதற்காக முன்னாள் நம்பர் 10 பாட்மிண்டன் வீரரான டென்மார்கைச் சேர்ந்த ஜோசிம் பெர்சனுக்கு, சர்வதேச பாட்மிட்டன் கூட்டமைப்பு 18-மாதங்கள் போட்டிகளில் பங்கேற்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

11. சமீபத்தில், காலமான “ஹகு ஷா” பின்வரும் எந்த துறையுடன் தொடர்பானவர்?

  1. அரசியல்
  2. சினிமா
  3. பத்திரிக்கை
  4. கலை (ஓவியம்)
Answer & Explanation
Answer: கலை (ஓவியம்)

Explanation:

புகழ்பெற்ற இந்திய ஓவியரான ஹகு ஷா (Haku Shah), மார்ச் 21, 2019 அன்று அகமதாபாத்தில் காலமானார்.

12. “Every Votes Count” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. அரிசங்கர் பிரம்மா
  2. எஸ். ஒய். குரேசி
  3. ஓம் பிரகாஷ் ராவத்
  4. நவீன் சாவ்லா
Answer & Explanation
Answer: நவீன் சாவ்லா

Explanation:

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா எழுதிய ‘Every Vote Counts’ என்ற புத்தகத்தை சமீபத்தில் இந்தியா முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வெளியிட்டார்.

13. உலக காசநோய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 22 மார்ச்
  2. 23 மார்ச்
  3. 24 மார்ச்
  4. 25 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 24

Explanation:

காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் உலக சுகாதார அமைப்பால் மார்ச் 24 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் (Robert Koch) என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24 அன்று கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: It’s time for action! It’s time to End TB.

More TNPSC Current Affairs


1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 24th and 25th March 2019”

Leave a Comment