Current Affairs in Tamil 24th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 24th July 2018. Take the quiz and improve your knowledge.
1. சமீபத்தில் Fuchsia என்ற இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிறுவனம்?
- Micro Soft
- Google
- Yahoo
- FaceBook
Answer & Explanation
Answer: Google
2. இந்திய கால்பந்து கூட்டமைப்பின் சார்பில், 2017 ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக தெரிவு செய்யப்பட்டுள்ளவர்?
- சுனில் சேத்ரி
- சந்தேஷ் ஜிங்ஹான்
- C.K. வினித்
- நிஷு குமார்
Answer & Explanation
Answer: சுனில் சேத்ரி
Explanation:
2017 ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரராக இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிறந்த வீராங்கனையாக கமலா தேவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சுனில் சேத்ரி சர்வதேச அளவில் தற்போது விளையாடும் வீர்களில், அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. சமீபத்தில் கிரிங்கா என்ற பெயரில் குடும்பத்துக்கு ஒரு பசு வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ள நாடு?
- மியான்மர்
- உகாண்டா
- ருவாண்டா
- நேபாள்
Answer & Explanation
Answer: ருவாண்டா
Explanation:
ருவாண்டா அரசு கிரிங்கா என்ற பெயரில் குடும்பத்துக்கு ஒரு பசு வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது. இத்திட்டத்திற்கு இந்தியா சார்பில் 2௦௦ பசுக்கள் வழங்கப்பட உள்ளது.
4. காது கேளாதோர்க்கான மிஸ் ஆசியா போட்டியில் பட்டம் வென்றவர்?
- தேஷ்னா ஜெயின்
- ஹனி தியான்
- மிரியா லகுனா
- சந்திர பிரபா குமாரி
Answer & Explanation
Answer: தேஷ்னா ஜெயின்
Explanation:
மத்திய பிரதேசத்தை சேர்ந்த தேஷ்னா ஜெயின் [Deshna Jain] காது கேளாதோர்க்கான மிஸ் ஆசியா போட்டியில் பட்டம் வென்றுள்ளார். மேலும் 2018 Miss International (Deaf) போட்டியில் மூன்றாவதாக வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5. ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் 2018-ல் வெற்றி பெற்றவர்?
- லூயிஸ் ஹாமில்டன்
- வால்டர்டி பாடாஸ்
- நிகோ ரோஸ்பெர்க்
- கிமி ரெய்க்கோனன்
Answer & Explanation
Answer: லூயிஸ் ஹாமில்டன்
Explanation:
2வது இடம்: வால்டர்டி பாடாஸ் (Valtteri Bottas)
3வது இடம்: கிமி ரெய்க்கோனன் (Kimi Räikkönen)
6. சமீபத்தில் வெளியிடப்பட்ட, ATP டென்னிஸ் உலக தரவரிசையில் முதல் இடம் பிடித்தவர்?
- ஜுவான் மார்ட்டின்
- அலெக்சாண்டர்
- ரோஜர் பெடரர்
- ரபேல் நடால்
Answer & Explanation
Answer: ரபேல் நடால்
Explanation:
ரபேல் நடால் (9,310 புள்ளிகள்)
ரோஜர் பெடரர் (7,080 புள்ளிகள்)
அலெக்சாண்டர் (5,665 புள்ளிகள்)
ஜுவான் மார்ட்டின் (5395 புள்ளிகள்)
7. இந்தியா-பங்களாதேஷ் கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம்?
- இம்பால்
- குவஹாத்தி
- அகர்தலா
- ஷில்லாங்
Answer & Explanation
Answer: அகர்தலா
Explanation:
இரண்டு நாடுகளின் எல்லையில் உள்ள கிராமங்களில் வசிக்கும் மக்களுடைய நல்வாழ்வை மேம்படுத்த இந்த கூட்டம் நடைபெற்றது.
8. முகமது அனாஸ் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- துப்பாக்கி சுடுதல்
- தடகளம்
- குத்துச்சண்டை
- ஈட்டி எறிதல்
Answer & Explanation
Answer: தடகளம்
Explanation:
செக் குடியரசு நாட்டில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியில் இந்திய வீரர் முகமது அனாஸ் 400 மீட்டர் பந்தைய தூரத்தை 45.24 விநாடிகளில் கடந்து புதிய தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
முன்னதாக ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், 400 மீட்டர் பந்தைய தூரத்தை இவர் 45.31 விநாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார்
9. வருமான வரி தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜூலை 24
- ஜூலை 25
- ஜூலை 26
- ஜூலை 27
Answer & Explanation
Answer: ஜூலை 24
Explanation:
இந்தியாவின் 158 வது வருமான வரி தினம் ஜூலை 24 கொண்டாடப்பட்டது. 24 ஜூலை 1860 அன்று இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இருந்த சர் ஜேம்ஸ் வில்சன் வருமான வரியை அறிமுகப்படுத்தினார், அதை சிறப்பிக்கும் பொருட்டு ஜூலை 24 வருமான வரி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related