Current Affairs in Tamil 25th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 25th July 2018. Take the quiz and improve your knowledge.
1. உலக கருவியல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜூலை 24
- ஜூலை 25
- ஜூலை 26
- ஜூலை 27
Answer & Explanation
Answer: ஜூலை 25
Explanation:
உலகின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான லூயிஸ் ப்ரௌன் 1978ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி இங்கிலாந்தில் பிறந்தார்.
முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்த தினமான ஜூலை 25ஆம் தேதி உலகக் கருவியல் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
2. சமீபத்தில் பாகிஸ்தானின் முதல் பெண் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளவர்?
- நூர் முஸ்கான்
- மரியா உல்பா
- டஹிரா சஃப்தர்
- ஆசிபா குரேஷி
Answer & Explanation
Answer: டஹிரா சஃப்தர்
Explanation:
பாகிஸ்தானின், பலூசிஸ்தான் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ‘டஹிரா சஃப்தர்’ (Tahira Safdar) நியமிக்கப்படுள்ளார்
3. 13 ஆவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றவர் யார்?
- வீர் சோட்ரானி
- மார்வன் டாரக்
- மோஸ்தபா அசல்
- ராகுல் பாய்தா
Answer & Explanation
Answer: மோஸ்தபா அசல்
Explanation:
சென்னையில் நடைபெற்ற 13 ஆவது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் மோஸ்தபா அசல், நடப்பு சாம்பியனான மார்வன் டாரக் (எகிப்து) – ஐ தோற்கடித்து வெற்றிபெற்றார்.
பெண்கள் பிரிவில் வென்றவர் – ரோவன் ரெடா அராபி (எகிப்து)
4. சமீபத்தில் ‘அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை இயலாதோர் சட்டத்தின் [Disabilities Act 2016] கீழ்’ சேர்த்துள்ள மாநிலம்?
- மத்தியபிரதேசம்
- உத்திர பிரதேசம்
- அசாம்
- குஜராத்
Answer & Explanation
Answer: மத்தியபிரதேசம்
Explanation:
அமிலத் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை இயலாதோர் சட்டத்தின் [Disabilities Act 2016] கீழ் சேர்க்கப்பட்டு அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் அனைத்து நலன்களையும் பெற தகுதியுடையவர்கள் என மத்தியபிரதேசம் சட்டம் இயற்றியுள்ளது.
5. சமீபத்தில் எப்போது பிரிக்ஸ் நாடுகளின் 10-வது உச்சி மாநாடு நடைபெற்றது?
- ஜூலை 23
- ஜூலை 24
- ஜூலை 25
- ஜூலை 26
Answer & Explanation
Answer: ஜூலை 25
Explanation:
தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜூலை 25-ம் தேதி பிரிக்ஸ் நாடுகளின் 10-வது உச்சி மாநாடு நடைபெற்றது.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இதில் பிரதமர் மோடி இந்தியாசார்பில் கலந்து கொண்டார்.
6. சமீபத்தில் “பசுமை மஹாநதி மிஷன்” என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- ஒடிசா
- பீகார்
- சத்தீஸ்கர்
- ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: ஒடிசா
Explanation:
மகாநதி, தெல் நதி படுகையில் 2 கோடி மரங்கள் நடவு செய்வதை நோக்கமாக கொண்ட பசுமை மஹாநதி மிஷன் [Green Mahanadi Mission] ஒடிசாவில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.
7. ருவாண்டா நாட்டிற்கு இந்தியா எவ்வளவு தொகையை உதவியாக வழங்க உள்ளது?
- ரூ.1479 கோடி
- ரூ.1379 கோடி
- ரூ.1279 கோடி
- ரூ.1179 கோடி
Answer & Explanation
Answer: ரூ.1379 கோடி
Explanation:
ருவாண்டா நாட்டிற்கு இந்தியா ரூ.1379 கோடியை உதவியாக வழங்க உள்ளது. இவை இரண்டு கட்டமாக தலா ரூ.689 கோடி வீதம் வழங்கப்படும்.
மேலும் அந்நாட்டிற்கு 2௦௦ பசுக்களை வழங்கியுள்ளது.
8. சமீபத்தில் உலகளாவிய ஊனமுற்றோர் உச்சி மாநாடு நடந்த இடம்?
- லண்டன்
- மெக்சிகோ
- சிங்கப்பூர்
- சிட்னி
Answer & Explanation
Answer: லண்டன்
Explanation:
உலகளாவிய ஊனமுற்றோர் உச்சி மாநாடு 2018 [Global Disability Summit 2018] லண்டனில் நடைபெற்றது இதில் இந்தியா சார்பில் சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பிற்கான மத்திய அமைச்சர் தாவர்காண்ட் கெலோட் கலந்துகொண்டார்
More TNPSC Current Affairs
Related