TNPSC Current Affairs Question and Answer in Tamil 26th and 27th August 2018

Current Affairs in Tamil 26th & 27th August 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 26th and 27th August 2018. Take the quiz and improve your knowledge.



1. லக்வர் பல்நோக்கு திட்டம் பின்வரும் எந்த நதியுடன் தொடர்பானது ?

  1. கங்கை
  2. யமுனை
  3. பிரம்மபுத்ரா
  4. காவேரி
Answer & Explanation
Answer: யமுனை

Explanation:

உத்தரகண்டின் டேராடூனுக்கு அருகில் யமுனை நதியின் குறுக்கே கான்கிரீட் அணை மற்றும் அதன் மூலம் மின்சாரம் தயாரித்தல் போன்ற கூட்டு திட்டமே “லக்வர் பல்நோக்கு திட்டம்/Lakhwar multi-purpose project” ஆகும்.

இந்த திட்ட கட்டுமானத்திற்காக உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்களுடன் மத்திய அரசு ஒப்ந்தம் செய்துள்ளது.

TNPSC Group 2 Model Question Papers – Download

2.  சமீபத்தில், இந்தியா – கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் கூட்டம் நடைபெற்ற இடம்?

  1. நைரோபி
  2. டெல்லி
  3. மும்பை
  4. மொம்பாசா
Answer & Explanation
Answer: நைரோபி

Explanation:

கென்யா தலைநகரம் நைரோபியில் இந்தியா – கென்யா கூட்டு வர்த்தகக் குழுவின் 8-வது கூட்டம் ஆகஸ்ட் 22 முதல் 25 வரை நடைபெற்றது. இந்தியா சார்பில் மத்திய தொழில், வர்த்தகத் துறை மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. சுரேஷ் பிரபு கலந்து கொண்டார்.

3. “281 and Beyond” பின்வரும் எந்த இந்திய கிரிக்கெட் வீரரின் சுயசரிதம் ஆகும்?

  1. ராகுல் டிராவிட்
  2. சவுரவ் கங்குலி
  3. சச்சின் டெண்டுல்கர்
  4. வி.வி.எஸ். லஷ்மண்
Answer & Explanation
Answer: வி.வி.எஸ். லஷ்மண்

Explanation:

4. இளம் திறமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில், ஒடிசா அரசு அறிமுகப்படுத்தியுள்ள திட்டம்?

  1. Mu Power, Mu Odisha
  2. Mu Hero, Mu Odisha
  3. Mu Startup, Mu Odisha
  4. Mu Youth, Mu Odisha
Answer & Explanation
Answer: Mu Hero, Mu Odisha

Explanation:

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அவர்கள் இளம் திறமையாளர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் Mu Hero, Mu Odisha” (I am Hero-I am Odisha) எனும் புதிய திட்டத்தை தொடங்கியுள்ளார்

5. சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?

  1. 29th ஆகஸ்ட்
  2. 28th ஆகஸ்ட்
  3. 27th ஆகஸ்ட்
  4. 26th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 29th ஆகஸ்ட்

Explanation:

அணு ஆயுத பரவலைத் தடுக்க ஐ.நா. சார்பில் ஆகஸ்ட் 29 சர்வதேச அணு ஆயுத சோதனை எதிர்ப்பு தினமாக (International Day Against Nuclear Test) அனுசரிகப்டுகிறது.

6. கிஷோர் குமார் விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?

  1. பிரியதர்‌ஷன்
  2. குமார மங்களம்
  3. அமிதாப்பச்சன்
  4. ரிஷிகேஷ் முகர்ஜி
Answer & Explanation
Answer: பிரியதர்‌ஷன்

Explanation:

மத்திய பிரதேச அரசு டைரக்டர் பிரியதர்‌ஷனுக்கு மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமார் விருதை அறிவித்துள்ளது.

இந்த விருதை இதற்கு முன்பு அமிதாப்பச்சன், ரிஷிகேஷ் முகர்ஜி, குல்சார், ஷியாம் பெனகல் ஆகியோர் பெற்று இருக்கிறார்கள்.

7. ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பேட்மிட்டன் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

  1. Tai Tzu Ying
  2. Akane Yamaguchi
  3. Saina Nehwal
  4. P. V. Sindhu
Answer & Explanation
Answer: Tai Tzu Ying

Explanation:

சீனாவின் Tai Tzu Ying தங்க பதக்கத்தையும், பி.வி சிந்து வெள்ளியையும், சாய்னா நேவால் மற்றும் ஜப்பானின் அகானே யமகுச்சி வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

8. சமீபத்தில், ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. க்ரே ஸ்டெட்
  2. துஷார் ஆரோதே
  3. லால்சந்த் ராஜ்புட்
  4. ரமேஷ் பவார்
Answer & Explanation
Answer: லால்சந்த் ராஜ்புட்

Explanation:

ஜிம்பாப்வேவின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் லால்சந்த் ராஜ்புட் நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சமீபத்தில் காலமான “கோபால் போஸ்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. கோல்ப்
  2. கிரிக்கெட்
  3. பாட்மிட்டன்
  4. தடகளம்
Answer & Explanation
Answer: கிரிக்கெட்

Explanation:

கோபால் போஸ் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் ஆவார். இவர் ஆகஸ்ட் 26 அன்று காலமானார்.

10. சமீபத்தில் டி.ஆர்.டி.ஓ-வின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. வி. கே. சரஸ்வத்
  2. எஸ்.கிறிஸ்டோபர்
  3. அவினாஷ் சாந்தர்
  4. ஜி. சதீஷ் ரெட்டி
Answer & Explanation
Answer: ஜி. சதீஷ் ரெட்டி

Explanation:

பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) தலைவராக இருந்து வந்த எஸ்.கிறிஸ்டோபரின் பதவிக்காலம் கடந்த மே 28ம் தேதியுடன் நிறைவு பெற்றதையடுத்து சதீஷ் ரெட்டி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

11. உலக கல்வி மாநாடு நடைபெற உள்ள இடம்?

  1. மாஸ்கோ
  2. பெஜிங்
  3. புதுடெல்லி
  4. சிட்னி
Answer & Explanation
Answer: மாஸ்கோ

Explanation:

மாஸ்கோவில் நடைபெற உள்ள “உலகக் கல்வி மாநாட்டில் (World Education Conference”) பேச டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அழைக்கப்பட்டுள்ளார்.

12வது World Education Summit 2018 ஆகஸ்ட் 9-10 தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது குறிப்பிடதக்கது.

12. சமீபத்தில், நாட்டிலேயே முதல்முறையாக ‘பயோ எரிபொருளில்’ இயக்கப்பட்ட விமானம்?

  1. ஏர் இந்தியா
  2. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
  3. ஏர் ஏசியா
  4. ஸ்பைஸ் ஜெட்
Answer & Explanation
Answer: ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட் (Spice Jet) நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக வழக்கமான ADF எரிபொருளுடன் பயோ-எரிபொருளை 25% கலந்து விமானத்தைச் சோதனை முயற்சியாக இயக்கியுள்ளது.

13. 2018ஆம் ஆண்டுக்கான இந்திய வங்கிக் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்ற நகரம்?

  1. டெல்லி
  2. மும்பை
  3. கொல்கத்தா
  4. திருப்பதி
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

More TNPSC Current Affairs



Leave a Comment