Current Affairs in Tamil 26-27th March 2019
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 26-27 March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.
1. இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின்(BFI) தலைவராக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்?
- பிலிப் ஜான் வெபர்
- சந்தர் முக்தி ஷர்மா
- கோவிந்தராஜ்
- தேஜா சிங் தலிவால்
Answer & Explanation
Answer: கோவிந்தராஜ்
Explanation:
கோவிந்தராஜ் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பின் தலைவராக மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் செயலாளராக சந்தர் முக்தி ஷர்மாவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. சமீபத்தில் வெளியிடப்பட்ட “WEF-இன் உலகளாவிய எரிசக்தி மாற்ற குறியீட்டு” பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
- 140
- 125
- 93
- 76
Answer & Explanation
Answer: 76
Explanation:
உலக பொருளாதார மன்றம் [World Economic Forum (WEF)] வெளியிட்ட உலகளாவிய எரிசக்தி மாற்ற குறியீட்டில் இந்தியா 76-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சுவீடன், சுவிட்சர்லாந்து , நார்வே நாடுகள் பிடித்துள்ளன.
3. சமீபத்தில் நிதியியல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற்ற இடம்?
- மும்பை
- புது டெல்லி
- கொல்கத்தா
- புனே
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
நிதி ஆயோக் மூலம் நடத்தப்படும் நிதியியல் தொழில்நுட்ப மாநாடு (FinTech Conclave) புது தில்லியில் மார்ச் 25 அன்று நடைபெற்றுது.
மேலும், டிஜிட்டல் பண வழங்கீடுகள் மற்றும் நிதியியல் தொழில்நுட்பத்தின் மூலமாக நிதியியல் உள்ளடக்கத்தை (Deepen digital payments and enhance financial inclusion through Fintech) மேம்படுத்த நந்தன் நீலேகனியின் தலைமையில் 5 நபர்கள் கொண்ட குழுவை இந்திய ரிசர்வ் வங்கி நியமித்துள்ளது.
4. உலகின் பரப்பரப்பான விமான நிலைப்பட்டியலில் “இந்தியாவின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்” பிடித்துள்ள இடம்?
- 6
- 8
- 12
- 17
Answer & Explanation
Answer: 12
Explanation:
சர்வதேச விமான கவுன்சில் அமைப்பு (Air port Council International) வெளியிட்டுள்ள, உலகின் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் இந்தியாவின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் (IGIA) 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.
- முதலிடம்= ஹார்ட்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையம்-அமெரிக்கா
- இரண்டாம் இடம்= பெய்ஜிங் கேபிட்டல் சர்வதேச விமான நிலையம் -சீனா
5. பின்வருபர்களில் யார் மொராக்கோ நாட்டிற்கான இந்தியாவின் அடுத்த தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்?
- சுரேஷ் பாபு
- பாஸ்கரன்
- ஷம்மா ஜெயின்
- ஷம்பூ எஸ். குமரன்
Answer & Explanation
Answer: ஷம்பூ எஸ். குமரன்
Explanation:
6. சமீபத்தில், எங்கு உலகின் மிகப் பெரிய மின்-கழிவு மறுசுழற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது?
- டெல்லி
- மெக்சிக்கோ
- பெய்ஜிங்
- துபாய்
Answer & Explanation
Answer: துபாய்
Explanation:
உலகின் மிகப் பெரிய மின்-கழிவு மறுசுழற்சி மையம் (e-waste recycling hub ) துபாய் தொழில்துறை பூங்காவில் திறக்கப்பட்டுள்ளது
March 24th and 25th Current Affairs
7. சமீபத்தில் கர்நாடகா மக்களவைத் தேர்தலுக்கான தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளவர்?
- ராகுல் டிராவிட்
- பிரீத்தி
- கிர்ஷ் என் கௌடா
- கௌரி சாவந்த்
Answer & Explanation
Answer: கிர்ஷ் என் கௌடா
Explanation:
பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் பதக்கம் வென்ற ‘கிரிஷ் கௌடா’ (Girish Gowda) கர்நாடகா மக்களவைத் தேர்தலுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தூதுவராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
8. குரோஷியா நாட்டின் உயர்ந்த குடிமகனுக்கான விருது சமீபத்தில் யாருக்கு வழங்கப்பட்டது ?
- ராம்நாத் கோவிந்
- நரேந்திர மோடி
- நரேஷ் கோயல்
- மன்மோகன்சிங்
Answer & Explanation
Answer: ராம்நாத் கோவிந்
Explanation:
குரோஷியா நாட்டின் உயர்ந்த குடிமகனுக்கான விருது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு வழங்கி அந்நாடு சிறப்பித்துள்ளது
9. “அர்ச்சனா காமத்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- டேபிள் டென்னிஸ்
- உயரம் தாண்டுதல்
- பாட்மிட்டன்
- டென்னிஸ்
Answer & Explanation
Answer: டேபிள் டென்னிஸ்
Explanation:
மஸ்கட் நகரில் நடைபெற்ற 2019ம் ஆண்டிற்கான ஓமன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியின் 21 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒற்றையர் போட்டியில் ஜப்பானின் சாட்சுகி ஓடோ சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதில் இந்தியாவின் “அர்ச்சனா காமத்” வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
மேலும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த சத்யன் ஞானசேகரன் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
10. உலக வானியல் தினம் (World Meteorological Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 22 மார்ச்
- 23 மார்ச்
- 24 மார்ச்
- 25 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 23
Explanation:
இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: “சூரியன், பூமி மற்றும் வானிலை” (The Sun, The Earth and The Weather)
More TNPSC Current Affairs
Related