Current Affairs in Tamil 26th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 26th July 2018. Take the quiz and improve your knowledge.
1. கார்கில் விஜய் திவாஸ் (Kargil Vijay Diwas) தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜூலை 24
- ஜூலை 25
- ஜூலை 26
- ஜூலை 27
Answer & Explanation
Answer: ஜூலை 25
Explanation:
கார்கில் போரில் உயிரிழந்த வீரர்களை மரியாதை செய்வதற்காக, ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று கார்கில் விஜய் திவாஸ் (Kargil Vijay Diwas) தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டோடு கார்கில் போர் முடிந்து 19 வருடங்கள் ஆகிறது.
2. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
- கர்நாடகம்
- தமிழ்நாடு
- கேரளா
- தெலுங்கானா
Answer & Explanation
Answer: கர்நாடகம்
Explanation:
‘The Institute For Energy Economics and Financial Analysis’ (IEEFA), வெளியிட்டுள்ள அறிக்கையின் படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி(renewable energy) உற்பத்தி செய்வதில் கர்நாடகம் தமிழ்நாட்டை பின்னுக்குத்தள்ளி முதலிடம் பிடித்தது.
IEEFA என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் ஆகும்.
3. சமீபத்தில் பிஜ்லி மித்ரா [Bijli Mitra] என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- குஜராத்
- பீகார்
- மகாராஷ்டிரா
- இராஜஸ்தான்
Answer & Explanation
Answer: இராஜஸ்தான்
Explanation:
மாற்றப்படாத மின்மாற்றிகளை பற்றிய புகார்களை விவசாயிகள் தெரிவிக்க பிஜ்லி மித்ரா [Bijli Mitra] என்ற மொபைல் செயலியை இராஜஸ்தான் அரசு அறிமுகம் செய்துள்ளது.
இதில் புகார் செய்த 6 மணி நேரத்திற்குள் புதிய மின்மாற்றி வழங்க வழிவகை செய்யும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிக மின் இழப்பை தவிர்க்கும் வகையில் ‘ஒரு விவசாயி ஒரு மின்மாற்றி / One farmer one Transformer’ என்னும் திட்டம் மகாராஷ்டிராவில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
4. இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் குறித்த 2-வது தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற இடம்?
- கொல்கத்தா
- மும்பை
- சென்னை
- புது டெல்லி
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
போஸான் அபியான் [POSHAN Abhiyaan] கீழ் இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்கள் குறித்த 2-வது தேசிய கவுன்சில் கூட்டம் ஜூலை 24 அன்று புது டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நடத்தியது.
போஸான் அபியான் என்பது 6 வயது வரையிலான குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்காக இந்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் ஆகும்.
கடந்த மே மாதம் இந்த போஸான் அபியான் திட்டத்துக்கு உலக வங்கி 200 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5. 3வது கபிரா விழாவை (Kabira festival) நடத்த உள்ள நகரம்?
- மைசூர்
- மதுரா
- வாரணாசி
- உதய்பூர்
Answer & Explanation
Answer: வாரணாசி
Explanation:
15 வது நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞர் கபீரை நினைவு கூறும் வகையில் கபிரா விழா வாரணாசியில் வரும் நவம்பர் 16 அன்று நடைபெற உள்ளது.
6. 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 இல் இருந்து எந்த தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது?
- செப்டம்பர் 25
- செப்டம்பர் 29
- அக்டோபர் 25
- அக்டோபர் 29
Answer & Explanation
Answer: செப்டம்பர் 25
Explanation:
வரும் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளதால் 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு தினம் ஆகஸ்ட் 29 இல் இருந்து செப்டம்பர் 25க்கு மாற்றப்பட்டுள்ளது.
7. எந்த திட்டத்தின் கீழ் எம்.பி.களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இலவசமாக WiFi சேவைகள் வழங்கப்பட உள்ளது?
- Pradhan Mantri Adarsh Gram Yojana
- Pradhan Mantri Gram Sadak Yojana
- Pradhan Mantri Ujjwala Yojana
- Sansad Adarsh Gram Yojana
Answer & Explanation
Answer: Sansad Adarsh Gram Yojana
Explanation:
Sansad Adarsh Gram Yojna’ திட்டத்தின் கீழ் எம்.பி.களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் இலவசமாக WiFi சேவைகள் வழங்கப்பட உள்ளது.
More TNPSC Current Affairs
Related