Current Affairs in Tamil 27th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 27th July 2018. Take the quiz and improve your knowledge.
1. 2018ஆம் ஆண்டுக்கான பூமி விருதுக்கு தேர்வாகியுள்ள விமான நிலையம்?
- கொச்சி சர்வதேச விமான நிலையம்
- பெங்களூரு விமான நிலையம்
- ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையம்
- இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம்
Answer & Explanation
Answer: கொச்சி சர்வதேச விமான நிலையம்
Explanation:
பொது மற்றும் தனியார் துறைகளில் சிறந்த சுற்றுச்சூழல் செயல்பாடுகளை அங்கீகரிக்க வழங்கப்படும் ‘பூமி விருதுக்கு'[Earth Prize-2018] கொச்சி சர்வதேச விமான நிலையம் தேர்வாகியுள்ளது. கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுமையாக சூரிய சக்தி மூலம் இயக்கப்படுவதால் இதற்கு விருது வழங்கப்பட உள்ளது. முழுமையாக சூரிய சக்தி மூலம் இயக்கப்படும் உலகின் முதல் விமான நிலையம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், விமானப் பயணிகளுக்கு மனநிறைவு அளிக்கும் சேவைகளை அளிப்பதில் உலகிலேயே பெங்களூரு பன்னாட்டு விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
2. சமீபத்தில், மாற்றுதிறனாளிகளுக்கென ஒரு தனி இயக்குநரகத்தை அமைக்க முடிவு செய்துள்ள மாநிலம் ?
- கேரளா
- தமிழ்நாடு
- அசாம்
- மேகாலயா
Answer & Explanation
Answer: அசாம்
3. 2வது இளம் காவல்துறை கண்கணிப்பாளர்கள் மாநாடு நடைபெற்ற இடம் ?
- கொல்கத்தா
- டெல்லி
- மும்பை
- சென்னை
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
ஜூலை 26 மற்றும் 27 அன்று 2வது இளம் காவல்துறை கண்கணிப்பாளர்கள் மாநாடு (2nd Young Superintendent of Police Conference 2018) டெல்லியில் நடைபெற்றது . இந்த மாநாட்டை போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகம் (BPR&D) நடத்தியது.
இந்த மாநாட்டின் கருப்பொருள் : Predictive Policing and Contemporary Challenges for Indian Police Forces
4. The Dhoni Touch: Unravelling the Enigma That Is Mahendra Singh Dhoni என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
- பாரத் சுந்தரேசன்
- K.C விஜய குமார்
- M.S தோனி
- ஜக்திஷ் சிங் ராஜ்புட்
Answer & Explanation
Answer: பாரத் சுந்தரேசன்
5. 18 வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா நடைபெறும் நகரம்?
- கோவா
- மும்பை
- சென்னை
- கொல்கத்தா
Answer & Explanation
Answer: கொல்கத்தா
Explanation:
Unicef-இன் 18 வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா கொல்கத்தாவில் ஜூலை 25இல் தொடங்கியது. இதில் 17நாடுகளின் 32 படங்கள் திரையிடபடுகிறது.
இதில் முதல் படமாக மோனா(Moana) என்ற அனிமேஷன் படம் திரையிடப்பட்டது.
6. கஜ் யாத்ரா எப்பொழுது தொடங்க உள்ளது?
- ஜூலை 30
- ஆகஸ்ட் 1
- ஜூலை 31
- ஆகஸ்ட் 2
Answer & Explanation
Answer: ஆகஸ்ட் 1
Explanation:
யானைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆகஸ்ட் 1 ம் தேதி தில்லியில் கஜ் யாத்ரா [Gajyatra] என்னும் பெயரில் பேரணி நடத்தப்பட உள்ளது.
7. பவன் ஷா பின்வரும் எந்த விளையாட்டுகளுடன் தொடர்புடையவர்?
- கால்பந்து
- கிரிக்கெட்
- ஹாக்கி
- கைபந்து
Answer & Explanation
Answer: கிரிக்கெட்
Explanation:
19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் வீரர் பவன் ஷா, இலங்கைக்கு எதிரான யூத் டெஸ்ட் போட்டியில் 282 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். Under-19 சர்வதேச போட்டிகளில் 2 வது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
1995ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் ஆஸி.யின் கிளிண்டன் பீக் 304 (நாட் அவுட்) என்பதே இதுவரை உள்ளவற்றில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
8. உலகின் நீளமான சைக்கிள் போட்டி எந்த நகரத்தில் நடக்க உள்ளது?
- மாஸ்கோ
- சிட்னி
- புது டெல்லி
- பீஜிங்
Answer & Explanation
Answer: மாஸ்கோ
More TNPSC Current Affairs
Related