Current Affairs in Tamil 28th & 29th August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 28th and 29th August 2018. Take the quiz and improve your knowledge.
1. சமீபத்தில், நடைபெற்ற FIFA U-20 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வென்ற அணி?
- பிரான்ஸ்
- இந்தியா
- ஜப்பான்
- ஜெர்மனி
Answer & Explanation
Answer: ஜப்பான்
Explanation:
சமீபத்தில், பிரான்ஸில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான FIFA U-20 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பான் அணி ஸ்பெயினை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் ‘Fair Play’ விருதையும் வென்றது.
TNPSC Group 2 Model Question Papers – Download
2. சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் துணை பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்?
- வி.எஸ் நாயக்
- சத்யா S திரிபாதி
- சித்ரா பானர்ஜி
- ஜோதி நிர்மலா
Answer & Explanation
Answer: சத்யா S திரிபாதி
Explanation:
ஐ.நா.வின் துணை பொதுச் செயலாளராக இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் சத்யா எஸ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நியூயார்க் ஐ.நா. சுற்றுச்சூழல் மையத்தின் தலைவராகவும் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்
3. “Atal Ji Ne Kaha” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- அயான் கபாடியா
- சுப்ரியா கேல்கர்
- பிரிஜேந்திர ரிஹி
- பிரணாப் முகர்ஜி
Answer & Explanation
Answer: பிரிஜேந்திர ரேஹி (Brijendra Rehi)
Explanation:
சமீபத்தில் காலமான முன்னால் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஆற்றிய உரைகளை பிரிஜேந்திர ரிஹி 26 தொகுதிகளாக தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
4. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவர்?
- எஸ்.ஜே.வசீப்தர்
- வீரராகவ ராவ்
- அசோக் டாங்ரே
- சுந்தரவல்லி
Answer & Explanation
Answer: எஸ்.ஜே.வசீப்தர்
Explanation:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள ஆய்வுக்குழுவின் தலைவராக பஞ்சாப் மாநில உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஜே.வசீப்தரை தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
5. தேசிய விளையாட்டு தினம் எப்போது அனுசரிகப்டுகிறது?
- 29th ஆகஸ்ட்
- 28th ஆகஸ்ட்
- 27th ஆகஸ்ட்
- 26th ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: 29th ஆகஸ்ட்
Explanation:
ஹாக்கியின் விளையாட்டின் ஜாம்பவான் என்று வர்ணிக்கப்படும் தயாசந்த் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் 29 தேசிய விளையாட்டு தினமாக அனுசரிகப்டுகிறது. 2012 முதல் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
6. சிந்து நதி நீர் ஆணைய கூட்டம் நடைபெறும் இடம்?
- டெல்லி
- லாகூர்
- இஸ்லாமாபாத்
- புனே
Answer & Explanation
Answer: லாகூர்
Explanation:
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சிந்து நதி நீர் ஆணைய கூட்டம், பாகிஸ்தானின் லாகூரில் ஆகஸ்ட் 29 மற்றும் 30 தேதிகளில் நடக்கிறது.
இமயமலையில் உற்பத்தியாகும் சிந்து நதி, பாகிஸ்தான் பஞ்சாப், சிந்து மாகாணங்கள் வழியாக பாய்ந்து, இந்தியாவின், ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப் மாநிலம் வழியாக அரபிக் கடலில் கலக்கிறது. இந்தியா – பாக்., இடையே, 1960ல், சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின்படி, இரு நாடுகளும், சிந்து நதி நீரை பங்கிட்டு கொள்கின்றன
7. சமீபத்தில் மூன்றாவது இந்திய பெருங்கடல் மாநாடு எங்கு நடைபெற்றது?
- ஜகார்த்தா
- டெல்லி
- கொழும்பு
- ஹனோய்
Answer & Explanation
Answer: ஹனோய்
Explanation:
மூன்றாவது இந்திய பெருங்கடல் மாநாடு வியட்நாம் தலைநகர் Hanoi-ல் ஆகஸ்ட் 27 முதல் 28 வரை நடைபெற்றது. இதை இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த மாநாட்டின் கருப்பொருள் “Building Regional Architectures”
8. 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கலாச்சார மையத்தின் ‘Game Changer of the Year’ விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- இந்திரா நூயி
- சத்யபால் மாலிக்
- சஞ்சீவ் குப்தா
- ரகுராம் ராஜன்
Answer & Explanation
Answer: இந்திரா நூயி
Explanation:
2018ஆம் ஆண்டுக்கான ஆசிய கலாச்சார மையத்தின் ‘Game Changer of the Year’ விருது பெப்சிகோ தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயிக்கு வழங்கப்பட்டது
9. “டுடீ சந்து” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- கோல்ப்
- துப்பாக்கி சுடுதல்
- பாட்மிட்டன்
- தடகளம்
Answer & Explanation
Answer: தடகளம்
Explanation:
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ‘டுடீ சந்து’ (Dutee Chand) சமீபத்தில் நடந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டபந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் 100 மீட்டரை 11.32 நொடிகளிளும், 200 மீட்டரை 23.20 நொடிகளிளும் ஓடி சாதனை படைத்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியின் ஓட்டபந்தயத்தில் 1998க்கு பிறகு தற்போது தான் இந்தியா பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
10. அங்காரியா என்ற பெயரிலான பயணிகள் கப்பல் எந்த இரு நகரங்களுக்கு இடையே இயக்ப்படஉள்ளது?
- கொச்சின் – கோவா
- மும்பை-கோவா
- மைசூர்-விசாகப்பட்டினம்
- சென்னை-கொல்கத்தா
Answer & Explanation
Answer: மும்பை-கோவா
Explanation:
மும்பை-கோவா இடையே அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. அங்காரியா என்ற பெயரிலான பயணிகள் கப்பல் பயன்படுத்தப்பட இருக்கிறது.
இந்த கப்பலில் சுமார் 400 பேர் பயணிக்க முடியும்.
11. சமீபத்தில் “Navlekha” என்ற இணையதளத்தை வெளியிட்டுள்ள நிறுவனம்?
- கூகுள்
- மைக்ரோசாப்ட்
- அமேசான்
- ப்ளிப்கார்ட்
Answer & Explanation
Answer: கூகுள்
Explanation:
12. பெல்ஜிய கிராண்ட் பிரிக்ஸ்-2018 கார் பந்தய போட்டியில் வென்றவர்?
- செபாஸ்டியன் வெட்டல்
- லூயிஸ் ஹாமில்டன்
- நிகோ ரோஸ்பெர்க்
- டேனியல் ரிச்சியார்டோ
Answer & Explanation
Answer: செபாஸ்டியன் வெட்டல்
13. சமீபத்தில் 4வது ஆசிய தேர்தல் கூட்டம் நடைபெற்ற நகரம்?
- டெல்லி
- கொழும்பு
- மலேசியா
- பெஜிங்
Answer & Explanation
Answer: கொழும்பு
Explanation:
இலங்கை தேர்தல் ஆணையமும் Asian Networks for free election அமைப்பும் இணைந்து 4வது ஆசிய தேர்தல் கூட்டதை இலங்கையின் கொழும்புவில் நடத்தின. இந்த கூட்டத்தில் இந்தியா சார்பாக மகாரஷ்டிரா தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி குமார் கலந்து கொண்டார்.
More TNPSC Current Affairs
Related