TNPSC Current Affairs Question and Answer in Tamil 28th and 29th March 2019

Current Affairs in Tamil 28-29th March 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 28-29 March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.

1. சமீபத்தில், தமிழகத்தின் எந்த பகுதியில் சூரிய ஒளி மூலம் கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலை அமைக்கப்பட்டுள்ளது?

  1. ராமநாதபுரம்
  2. கடலூர்
  3. வேலூர்
  4. கன்னியாகுமரி
Answer & Explanation
Answer: கன்னியாகுமரி

Explanation:

ஐஐடி-சென்னையை சேர்ந்த விஞ்ஞானிகள் கன்னியாகுமரியில் சூரிய ஒளி மூலம் இயங்கும் “கடல்நீரை குடிநீராக மாற்றும் ஆலையை” நிறுவியுள்ளனர். 

TNPSC Group 2A Model Question Papers – Download

2. லிமா (LIMA) 2019 விமான கண்காட்சி நடைபெறும் இடம்?

  1. காத்மாண்டு
  2. புது டெல்லி
  3. சிங்கப்பூர்
  4. மலேசியா
Answer & Explanation
Answer: மலேசியா

Explanation:

LIMA ( Langkawi International Maritime Aero Expo (LIMA) விமான கண்காட்சி. மலேசியாவின் லங்காவாவியில் மார்ச் 26 முதல் 30 வரை நடைபெறுகிறது.

3. சமீபத்தில், ஏவுகணை மூலம் செயற்கைக்கோளை தாக்கி அழித்த திட்டத்திற்கு இந்தியா வைத்த பெயர்?

  1. மிஷன் சக்தி 
  2. மிஷன் மேகா
  3. மிஷன் அவதார்
  4. மிஷன் ரட்சகன்
Answer & Explanation
Answer: மிஷன் சக்தி 

Explanation:

2019 மார்ச் 27-ம் ஒடிசாவில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் தீவுவில் இருந்து செயற்கைக்கோள் ஒன்றைத் தாக்கிய திட்டத்தின் பெயரே மிஷன் சக்தி.

இந்தியாவின் மிகக் குறுகிய சுற்று வட்டப் பாதையில் பயன்படுத்தாமல் உள்ள ஒரு செயற்கைக்கோளை இந்திய விஞ்ஞானிகள் ஏவுகணை மூலம் தாக்கி அழித்தன.

இது ஒரு ஆன்டி சாட்டிலைட் தாக்குதல் சோதனை முயற்சி. முன்னதாக இது போன்று தேவை இல்லாமல் விண்வெளியில் சுற்றி வரும் செயற்கைக்கோள்களைப் பாதுகாப்பு கருதி அமெரிக்க, ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே ஏவுகணை உதவியுடன் தாக்கி அழித்துள்ளன.

4. GRAPES-3 என்ற தொலைநோக்கி அமைந்துள்ள இடம்?

  1. ஊட்டி
  2. அப்துல்கலாம் தீவு
  3. காவலூர்
  4. மகேந்திரகிரி
Answer & Explanation
Answer: ஊட்டி

Explanation:

உலகில் முதன்முறையாக இந்தியாவின் ஊட்டியில் உள்ள GRAPES-3 muon தொலைநோக்கி இடிமேகத்தின் மின்திறன், அளவு மற்றும் உயரம் ஆகியவற்றை அளவிட்டுள்ளது. அதாவது மேகங்களில் 1.3 கிகாவோல்ட் மின்னழுத்தம் (thundercloud’s electrical potential) உருவாவது கண்டறியப்பட்டுள்ளது.

GRAPES-3 திட்டமானது இந்தியாவின் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம், ஜப்பானின் ஒசாகா நகரப் பல்கலைக்கழகம் மற்றும் நகோயா மகளிர் பல்கலைக்கழகத்தின் கூட்டுத்திட்டமாகும்.

1927-ம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு பெற்ற சி.டி.ஆர்.வில்சன் வான்மேகங்களில் 1 கிகா வோல்ட் மின்னழுத்தம் இருக்கும் என யூகித்தார். 90 ஆண்டுகளுக்கு பின்னர், இதை உதகை காஸ்மிக் கதிர்கள் ஆய்வகம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

March 26th and 27th Current Affairs

5. மித்ராசக்தி-VI (MITRASHAKTI – VI) என்பது இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டுக்கு இடையே நடைபெறும் ராணுவ பயிற்சி ஆகும்?

  1. மலேசியா
  2. இலங்கை
  3. ரஷ்யா
  4. பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: இலங்கை

Explanation:

மித்ராசக்தி-VI என்ற பெயரில் இந்தியா மற்றும் இலங்கை ராணுவம் இணைந்து இலங்கையின், தியத்தலாவாவில் ஒத்திகை பயிற்சியை மார்ச் 26 முதல் ஏப்ரல் 8 வரை மேற்கொள்ள உள்ளன.

6. “PWD app” என்னும் மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள இந்திய அமைப்பு?

  1. இந்திய ரிசர்வ் வங்கி
  2. நிதி ஆயோக்
  3. இந்திய உச்ச நீதிமன்றம்
  4. இந்திய தேர்தல் ஆணையம்
Answer & Explanation
Answer: இந்திய தேர்தல் ஆணையம்

Explanation:

ஊனமுற்ற இளம் வாக்காளர்கள் எளிதில் வாக்குசாவடிகளை கண்டறிந்து வாக்களிக்கும் வகையில் PWD app என்னும் மொபைல் செயலியை இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

7. சமீபத்தில் சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Intiative” திட்டத்தில் இணைந்துள்ள முதல் G-7 நாடு?

  1. இத்தாலி
  2. கனடா
  3. பிரான்ஸ்
  4. ஜெர்மனி
Answer & Explanation
Answer: இத்தாலி

Explanation:

G-7 நாடுகளில் இருந்து முதலாவது நாடாக இத்தாலி, சீனாவின் உலகளாவிய கட்டுமான திட்டமான “Belt Road Intiative” திட்டத்தில் இணைந்துள்ளது.

8. “மன்கடிங்”என்ற முறை பின்வரும் எந்த விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது?

  1. டேபிள் டென்னிஸ்
  2. கிரிக்கெட்
  3. பாட்மிட்டன்
  4. டென்னிஸ்
Answer & Explanation
Answer: கிரிக்கெட்

Explanation:

’மன்கடிங்’ என்பது கிரிக்கெட்டில் பயன்படுத்தப்படும் ரன் அவுட் முறைஆகும். மன்கடிங் என்று கூறப்படும் இந்த ரன் அவுட்டின்படி பந்து வீச்சாளர் பேட்ஸ்மேனுக்குப் பந்து வீசும்போது, எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேன் ரன் எடுக்க வசதியாகச் சில அடிகள் எடுத்துவைக்கும் போது, பந்துவீச்சாளர் கிரீஸ் அருகில் வந்து நடுவருக்கு அருகில் உள்ள ஸ்டம்பைத் தட்டி ரன் அவுட் செய்வார். சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் படி இந்த முறையில் விக்கெட் எடுக்கலாம்.

9. சமீபத்தில், காலமான “’அசிதா’” பின்வரும் எந்த துறையுடன் தொடர்பானவர்?

  1. அரசியல்
  2. சினிமா
  3. பத்திரிக்க
  4. எழுத்தாளர்
Answer & Explanation
Answer: எழுத்தாளர்

Explanation:

புகழ்பெற்ற மலையாள எழுத்தாளரும் கவிஞருமான அசிதா (Ashita), மார்ச் 27, 2019 அன்று  காலமானார்.

10. உலகத் திரையரங்க தினம் (World Theater Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 25 மார்ச்
  2. 26 மார்ச்
  3. 27 மார்ச்
  4. 28 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 27

Explanation:

யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1960ஆம் ஆண்டில் உலகத் திரையரங்க தினம் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று உலகத் திரையரங்க தினம் சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.

More TNPSC Current Affairs

Leave a Comment