Current Affairs in Tamil 28th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 28th July 2018. Take the quiz and improve your knowledge.
1. உலக ஹெப்பாட்டைட்டிஸ் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜூலை 29
- ஜூலை 28
- ஆகஸ்ட் 2
- ஆகஸ்ட் 1
Answer & Explanation
Answer: ஜூலை 28
Explanation:
ஹெபடைட்டிஸ் பி வைரஸைக் கண்டுபிடித்த பேராசிரியர் புளூம்பெர்க்கின் பிறந்த தினமான ஜூலை 28 உலக ஹெப்பாட்டைட்டிஸ் தினமாக (உலக கல்லீரல் அலர்ஜி தினம்) அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான கருப்பொருள் – “Test. Treat. Hepatitis”
2. சமீபத்தில் காலமான செர்கல்லம் அப்துல்லா, எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- தமிழ்நாடு
- கேரளா
- தெலுங்கானா
- ஆந்திர பிரதேஷ்
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
கேரளாவை சேர்ந்த இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முத்த தலைவரும், முன்னால் மந்திரியும் ஆவார்.
3. ரஷ்யன் ஓபன் பேட்மிட்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- கோகி வாட்டானபே
- சௌரப் வர்மா
- மிதுன் மஞ்சுநாதன்
- ரோஹன் கபூர்
Answer & Explanation
Answer: சௌரப் வர்மா
Explanation:
ரஷ்யாவில் உள்ள விலாடிவோஸ்டக் நகரில் நடைபெற்ற ரஷ்ய ஓபன் பாட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சௌரப் வர்மா ஜப்பானின் கோகி வாட்டநேபிளை (Koki Watanabe) தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
4. பின்வரும் இந்தியர்களில் 2018 ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது வென்றவர்கள்?
- தோடூர் மடபூசி கிருஷ்ணா மற்றும் சஞ்சீவ் சதுர்வேதி
- தேவ்தத் பட்டேனிக் மற்றும் ராமச்சந்திர குஹா
- மேதா பட்கர் மற்றும் கைலாஷ் சத்யார்த்தி
- பரத் வத்வானி மற்றும் சோனம் வாங்க்சுக்
Answer & Explanation
Answer: பரத் வத்வானி மற்றும் சோனம் வாங்க்சுக்
Explanation:
மும்பையைச் சேர்ந்த மனநல மருத்துவர் பரத் வத்வானி (Bharat Vatwani) மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சோனம் வாங்க்சுக் (Sonam Wangchuk) ஆகியோருக்கு 2018 ஆண்டுக்கான ராமன் மகசேசே விருது அறிவிக்கப்படுள்ளது.
5. சமீபத்தில், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் எப்போது நிகழ்ந்தது?
-
- ஜூலை 26
- ஜூலை 27
- ஜூலை 28
- ஜூலை 29
Answer & Explanation
Answer: ஜூலை 27
Explanation:
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திரகிரகணம் ஜூலை 27 அன்று இரவு 11.54 முதல் அடுத்த நாள் அதிகாலை 3.49 வரை நீடித்தது.
அடுத்ததாக 2029, ஜூலை 25ஆம் தேதி முழு சந்திரகிரகணம் நிகழும்.
6. சமீபத்தில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மைப்படுத்தும் கொள்கையை [Urban Sanitation and Cleanliness Policy] வகுத்துள்ள மாநிலம்?
- குஜராத்
- அசாம்
- மகாரஷ்டிரா
- மேற்குவங்கம்
Answer & Explanation
Answer: குஜராத்
Explanation:
நகரங்களில் உருவாகும் திட மற்றும் திரவ கழிவுகளை அழிக்க குஜராத் அரசாங்கம் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் தூய்மைப்படுத்தும் கொள்கையை [Urban Sanitation and Cleanliness Policy] வகுத்துள்ளது.
7. 6 வது இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் கூட்டம் எங்கு நடைபெற்றது?
- பெங்களூர்
- ஹைதராபாத்
- மும்பை
- புது டெல்லி
Answer & Explanation
Answer: புது டெல்லி
Explanation:
6 வது இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையேயான அறிவியல் & கண்டுபிடிப்பு கவுன்சில் (The 6th India-UK Science & Innovation Council (SIC)) கூட்டம் புது டெல்லியில் நடைபெற்றது.
8. சமீபத்தில் கிளிமாஞ்சாரோ சிகரத்தில் ஏறி சாதனை படைத்த சிவாங்கி பதக், பின்வரும் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
- ஹரியானா
- பஞ்சாப்
- இராஜஸ்தான்
- மத்தியப்பிரதேஷ்
Answer & Explanation
Answer: ஹரியானா
Explanation:
ஹரியாணா மாநிலம் ஹிசார் நகரைச் சேர்ந்த மாணவி சிவாங்கி பதக் (17 வயது) ஆப்ரிக்காவின் உயர்ந்த மலை சிகரமான கிளிமாஞ்சாரோவில் மூன்று நாட்களில் (ஜூலை 21-24) ஏறி சாதனை படைத்துள்ளார்.
இவர் கடந்த மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தில் மூன்று நாட்களில் ஏறி சாதனை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More TNPSC Current Affairs
Related