Current Affairs in Tamil 29th July 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 29th July 2018. Take the quiz and improve your knowledge.
1. சர்வதேச புலிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- ஜூலை 29
- ஜூலை 30
- ஆகஸ்ட் 1
- ஆகஸ்ட் 2
Answer & Explanation
Answer: ஜூலை 29
Explanation:
புலிகள் குறித்து மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் ஜூலை 29 சா்வதேச புலிகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
2010 இல் நடந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் புலிகள் உச்சி மாநாட்டில் (St. Petersburg Tiger Summit) முதன் முதலில் சர்வதேச புலிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
குறிப்பு:
- ஜீன் 29 = புள்ளியியல் தினம்.
- ஜீலை 29 = புலிகள் தினம்
- ஆகஸ்ட் 29 = தேசிய விளையாட்டு தினம்
- செப் 29 = உலக இருதய தினம் மற்றும் தேசிய காப்பி தினம்
- அக்டோபர் 29 = உலக பக்கவாத தினம்
2. ஒடிசாவின் “அட்டிபாடி ஜகன்னாத் தாஸ் சம்மன் விருது” யாருக்கு வழங்கப்பட்டுள்ளது?
- மகாபலேஷ்வர் செய்ல்
- பத்மா சத்தேவ்
- ராமகாந்த ரத்
- சிதன்ஷூ யஷஸ்சந்ராஸ்
Answer & Explanation
Answer: ராமகாந்த ரத்
Explanation:
ஒடியா இலக்கியத்தில் ராமகாந்த ரத்-தின் வாழ்நாள் பங்களிப்புக்காக (Life time contribution to Odia literature], ஒடிசாவின் மிக உயர்ந்த இலக்கிய விருதான அட்டிபாடி ஜகன்னாத் தாஸ் சம்மன் விருது [Odisha’s highest literary award Atibadi Jagannath Das Samman for 2018.] அவருக்குக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சில.,
2017 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருது, குஜராத்தி கவிஞர் சிதன்ஷூ யஷஸ்சந்ராஸ் ( Sitanshu Yashaschandra) எழுதிய Vakhar என்ற கவிதை தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.
2016 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மன் விருது , புகழ்பெற்ற கொங்கனி எழுத்தாளர் மகாபலேஷ்வர் செய்ல் (Mahabaleshwar Sail) எழுதிய ஹவ்தான் என்ற புதினத்திற்கு வழங்கப்பட்டது
3. கேத்லீன் பேக்கர் பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?
- நீச்சல்
- பனிச்சறுக்கு
- ஈட்டி எறிதல்
- குண்டு எறிதல்
Answer & Explanation
Answer: நீச்சல்
Explanation:
அமெரிக்க சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டியில் கேத்லீன் பேக்கர் (Kathleen Baker) 100 மீட்டர் தூரத்தை 58 விநாடிகளில் பின்பக்கமாகக் கடந்து (Backstroke பிரிவு) உலக சாதனையை படைத்துள்ளார்
4. ‘உலகளாவிய எரிசக்தி’ பிரிவில் INFRA ஐகான் விருதை வென்றுள்ள நிறுவனம்?
- GAIL
- BHEL
- ONGC
- NTPC
Answer & Explanation
Answer: ONGC
Explanation:
‘உலகளாவிய எரிசக்தி’ பிரிவில் INFRA ஐகான் விருதை [INFRA Icon Award] எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் [Oil and Natural Gas Corporation (ONGC)] பெற்றுள்ளது
5. மகாநதி பகுதியில் Riverine Port (நதி துறைமுகம்) அமைக்க உள்ள மாநிலம்?
- சத்தீஸ்கர்
- ஒடிசா
- ஜார்கண்ட்
- மேற்குவங்கம்
Answer & Explanation
Answer: ஒடிசா
Explanation:
கேந்திரா மாவட்டத்தின் Khadasali கிராமத்தில் உள்ள மகாநதி நதி பகுதியில் ஒரு நதி துறைமுகத்தை அமைக்க ஒரிசா அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
நதி துறைமுகம் என்பது நதி கரையில் அமைக்கப்படும் துறைமுகம் ஆகும்.
மேலும்.,
மகாநதி, தெல் நதி படுகையில் 2 கோடி மரங்கள் நடவு செய்வதை நோக்கமாக கொண்ட பசுமை மஹாநதி மிஷன் [Green Mahanadi Mission] ஒடிசாவில் சமீபத்தில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
6. மின்னணு தகவல் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு?
- ஸ்ரீகிருஷ்ணா குழு
- T.S.R.சுப்பிரமணியன் குழு
- சதிஷ் சந்திரா குழு
- V.S.சௌகான் குழு
Answer & Explanation
Answer: ஸ்ரீகிருஷ்ணா குழு
Explanation:
தனிநபர் தகவல்களை பாதுகாக்கும் வகையில் ஆதார் சட்டத்தில் மாற்றம் செய்யவேண்டும் என ஸ்ரீ கிருஷ்ணா குழு பரிந்துரை செய்துள்ளது.
UIDAI (Unique Identification Authority of India) அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரிகள் அல்லது அமைப்புகள் மட்டுமே தனிநபர் தகவல்களை அணுகும்வகையில் ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்யப்படவேண்டும் எனவும் ஸ்ரீகிருஷ்ணா குழு பரிந்துரை செய்துள்ளது.
7. சமீபத்தில் பெண்களுக்கான முதல் தேசிய திறன் பயிற்சி மையம் எங்கு துவங்கப்பட்டுள்ளது?
- ஜலந்தர்
- அமிர்தசரஸ்
- பஞ்ச்குலா
- மொஹாலி
Answer & Explanation
Answer: மொஹாலி
Explanation:
இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கான முதல் தேசிய திறன் பயிற்சி மையம் பஞ்சாபின் மொஹலியில் திறக்கப்பட்டுள்ளது [National Skill Training Institute (NSTI) for Women].
இந்த அமைப்பின் மூலம் பெண்களுக்கு, அழகுசாதன பொருட்கள் மற்றும் ஃபேஷன் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பயிற்சி வழங்கப்படும்.
8. யாசர் டோகு சர்வதேச மல்யுத்த தொடரின் 70 கிலோ ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- பஜ்ரங் புனியாக
- பிரதீப் குமார்
- யோகேஷ்வர் தத்
- சுஷீல் குமார்
Answer & Explanation
Answer: பஜ்ரங் புனியாக
Explanation:
துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற யாசர் டோகு சர்வதேச மல்யுத்த தொடரின் 70 கிலோ ஆண்கள் பிரிவில் பஜ்ரங் புனியாகவும், 55 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் பிங்கி என்பவரும் தங்கப்பதக்கம் வென்றனர்.
இந்த தொடரில் இந்தியா மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர். இதில் பெண்கள் 7 பதக்கங்களை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
வெள்ளி:
- சந்தீப் தோமர்- 61 கிலோ ஃப்ரீஸ்டைல்
- பூஜா தந்தா- 57 கிலோ மகளிர் மல்யுத்தம்
- ரஜினி -72 கிலோ மகளிர் மல்யுத்தம்
- சீமா- 53 கிலோ மகளிர் மல்யுத்தம்
வெண்கலம்:
- விக்கி- 57 கிலோ ஃப்ரீஸ்டைல்
- சங்கீதா பாலாலி -59 கிலோ மகளிர் மல்யுத்தம்
- சதாரா- 62 கிலோ மகளிர் மல்யுத்தம்
- கீதா -65 கிலோ மகளிர் மல்யுத்தம்
More TNPSC Current Affairs
Related