TNPSC Current Affairs Question and Answer in Tamil 2nd August 2018

Current Affairs in Tamil 2nd August 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 2nd August 2018. Take the quiz and improve your knowledge.



TNPSC Tamil Current Affairs August 2

1. உலக தாய்ப்பால் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜூலை 18 to 24
  2. ஜூலை 25 to 31
  3. ஆகஸ்ட் 1 to 7
  4. ஆகஸ்ட் 8 to 14
Answer & Explanation
Answer: ஆகஸ்ட் 1 to 7

Explanation:

தாய்ப்பால் ஊட்டுவதன்முக்கியதுவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் தினம் அனுசரிக்கப்படுகிறது.

உலக சுகாதார நிறுவனம்(WHO) மற்றும் உலகக் குழந்தைகள் நலநிதியம் (UNICEF) உள்ளிட்ட பல்வேறு அமைபுகளின் கூட்டு முயற்சியால் 1992 முதல் ஆண்டுதோறும்  ஆகஸ்ட் 1 to 7 உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

கருபொருள்: தாய்ப்பால் ஊட்டுதல் வாழ்க்கையின் அடித்தளம். (Breastfeeding : Foundation of Life)

2. சமீபத்தில் Nepal-India Think Tank மாநாடு நடைபெற்ற இடம்?

  1. காத்மண்டு
  2. டெல்லி
  3. சந்திரகரி
  4. மும்பை
Answer & Explanation
Answer: காத்மண்டு

Explanation:

நேபாள இந்தியா, நாடுகளின் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த “முதலாவது Nepal-India Think Tank மாநாடு” காத்மாண்டுவில் ஜூலை 31 நடைபெற்றது

3. சஞ்சார் கிராந்தி யோஜனாவின் (SKY-Sanchar Kranti Yojna ) கீழ் பொதுமகளுக்கு ஸ்மார்ட் போன்களை வழங்க “மொபைல் டிஹார் [Mobile Tihar]” என்ற திட்டத்தை அறிமுகப்படித்தியுள்ள மாநிலம்?

  1. ஒடிசா
  2. மேற்குவங்கம்
  3. சத்தீஸ்கர்
  4. ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: சத்தீஸ்கர்

Explanation:

சஞ்சார் கிராந்தி யோஜனா (SKY-Sanchar Kranti Yojna ) திட்டத்தின் கீழ் “மொபைல் டிஹார் [Mobile Tihar]” என்ற பெயரில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் மக்களுக்கு செல்போன் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுள்ளது.

4. பின்வரும் நாடுகளில் எது 2018 சர்வதேச இராணுவ விளையாட்டை(IAG) நடத்த உள்ளது?

  1. ஈரான்
  2. ஆர்மீனியா
  3. கஜகஸ்தான்
  4. மேலே உள்ள அனைத்தும்
Answer & Explanation
Answer: மேலே உள்ள அனைத்தும்

Explanation:

அஜர்பைஜான், ஆர்மீனியா, பெலாரஸ், ​​ஈரான், கஜகஸ்தான், சீனா மற்றும் ரஷ்யாவில் ஆகிய ஏழு நாடுகளில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 11 வரை சர்வதேச இராணுவ விளையாட்டு நடைபெறுகிறது.

முதல் தடவையாக ஆர்மீனியாவும் ஈரானும் இந்த போட்டியில் இணைந்துள்ளன.

5. சமீபத்தில் காலமான ‘பீஷ்ம நாராயண் சிங்’ பின்வரும் எந்த துறையுடன் தொடர்புடையவர்?

  1. சினிமா
  2. இலக்கியம்
  3. அரசியல்
  4. தொழில்நுட்பம்
Answer & Explanation
Answer: அரசியல்

Explanation:

தமிழகத்தின் முன்னாள் கவர்னரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியுமான பீஷ்ம நாராயண் சிங் (வயது 85) காலமானார்.

இவர் அஸ்ஸாம் மாநில ஆளுநராக 1984 முத‌ல் 1989 வரை பதவி வகித்தார். பின்னர், 1991-ம் ஆண்டு முதல் தமிழக ஆளுநராகப் பதவி வகித்தார்

6. சமீபத்தில் “மிஷன் சத்யாநிஷ்தா” (Mission Satyanishtha) என்ற திட்டத்தை துவங்கியுள்ள பொதுநிறுவனம்?

  1. இந்தியன் ஏர்லைன்ஸ்
  2. இந்திய தபால் துறை
  3. இந்திய ரயில்வேத் துறை
  4. இந்திய நெடுஞ்சாலை துறை
Answer & Explanation
Answer: இந்திய ரயில்வேத் துறை

Explanation:

பணியிடத்தில் ரயில்வே ஊழியர்கள் நல்ல நெறிமுறைகளை (Good Ethics) கடைப்பிடிக்கவும், உயர் தரத்திலான நேர்மையை (High standards of integrity) பின்பற்றவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்க “மிஷன் சத்யாநிஷ்தா / சத்யனிஸ்டா” (Mission Satyanishtha) திட்டத்தை இந்திய ரயில்வேத்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது

7. அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?

  1. ஜான் இஸ்னர்
  2. ரையான் ஹாரிசன்
  3. ஜிம்மி கானர்ஸ்
  4. ஜான் மெக்கன்ரோ
Answer & Explanation
Answer: ஜான் இஸ்னர்

Explanation:

அமெரிக்காவில் நடந்த அட்லாண்டா ஓபன் (Atlanta Open) டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை தோற்கடித்து 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் நிக்கோலஸ் மொன்றோ (Nicholas Monroe [அமெரிக்கா]), ஜான் பேட்ரிக் ஸ்மித் (ஆஸ்திரேலியா) ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

8. சமீபத்தில் அமெரிக்கா தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டிற்கு ‘எஸ்.டி.ஏ-1’ என்ற சிறப்பு அந்தஸ்தை  வழங்கி உள்ளது?

  1. இலங்கை
  2. இந்தியா
  3. பங்களாதேஷ்
  4. மியான்மர்
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

தெற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இந்தியாவுக்கு ‘எஸ்.டி.ஏ-1’ (Strategic Trade Authorisation-1) என்ற சிறப்பு அந்தஸ்தை அமெரிக்கா வழங்கி உள்ளது. இதன்மூலம் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டுக்கு உரிய பொருட்களை வாங்கும் தகுதியை இந்தியாவுக்கு தந்து உள்ளது

9. ”காவ் வாங்க் கோல்டன்” என்ற பாலம் உள்ள நாடு?

  1. சீனா
  2. மலேசியா
  3. வியட்நாம்
  4. மியான்மர்
Answer & Explanation
Answer: வியட்நாம்

10. அமெரிக்காவின், ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவுக்கு தலைமை செயல் அலுவலராக (CEO) நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. லியோ வாராட்கர்
  2. சீமா நந்தா
  3. அக்ஷய் வெங்கடேஷ்
  4. நிக்கி ஹாலே
Answer & Explanation
Answer: சீமா நந்தா

அமெரிக்காவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

More TNPSC Current Affairs

TNPSC Current Affairs in Tamil – 1st August 2018
TNPSC Current Affairs in Tamil – 30th & 31st July 2018
TNPSC Current Affairs in Tamil – 29th July 2018



Leave a Comment