Current Affairs in Tamil 2nd May 2019
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 2nd May 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.

1. சமீபத்தில், மும்பை பங்குச்சந்தையின் (BSE) முதல் தனி பெண் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
- அன்னம்மா ஜேக்கப்
- இந்திரா நூயி
- ஜெயஸ்ரீ வியாஸ்
- அனிதா உதூப்
Answer & Explanation
Answer: ஜெயஸ்ரீ வியாஸ்
Explanation:
மும்பை பங்குச்சந்தையின் (BSE) முதல் தனி பெண் இயக்குநராக (First independent woman director to the board) “ஜெயஸ்ரீ வியாஸ்” (Jayashree Vyas) நியமிக்கப்பட்டுள்ளார்
TNPSC Group 2A Model Question Papers – Download
2. ராணுவத்துக்கு அதிகமாகச் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
- 2 வது
- 3 வது
- 4 வது
- 5 வது
Answer & Explanation
Answer: 4 வது
Explanation:
சமீபத்தில் ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சிக்கான நிறுவனம் (Stockholm International Peace Research Institute) வெளியிட்டுள்ள அறிக்கைபடி 2018ஆம் ஆண்டில் ராணுவத்துக்கு அதிகமாகச் செலவிடும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 4ஆவது இடத்தில் உள்ளது. (66.5 பில்லியன் டாலர்)
முதல் மூன்று இடங்களை பிடிக்கும் நாடுகள்…
- அமெரிக்கா (649 பில்லியன் டாலர்)
- சீனா (250 பில்லியன் டாலர்)
- சவூதி அரேபியா (67.6 பில்லியன் டாலர்)
3. சமீபத்தில், பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
- ஏ.எஸ்.கிரண் குமார்
- அஞ்சலி கோபாலன்
- ஷெரீன் சேவியர்
- நாகநாதன் வேலுப்பிள்ளை
Answer & Explanation
Answer: ஏ.எஸ்.கிரண் குமார்
Explanation:
இஸ்ரோ(ISRO) முன்னாள் தலைவர் ‘ஏ.எஸ்.கிரண் குமாருக்கு’ (A.S.Kiran Kumar) பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது (Chevalier de l’Ordre national de la Legion d’Honneur) சமீபத்தில் வழங்கபட்டுள்ளது.
May 1st Current Affairs - More Details
4. சமீபத்தில்,ராஜாளி பறவைக்கென தனியாக சிறப்பு மருத்துவமனை எங்கு திறக்கப்பட்டுள்ளது ?
- கொல்கத்தா
- வார்சா
- ஷார்ஜா
- அபுதாபி
Answer & Explanation
Answer: அபுதாபி
Explanation:
உலகிலேயே அதிக வேகத்தில் பறக்கக்கூடிய பறவையான ‘பால்கன்’ எனப்படும் ராஜாளி பறவைக்கு அபுதாபியில் முதல் முறையாக தனியாக சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
5. சமீபத்தில், “எவரெஸ்ட் தூய்மையாக்கல் இயக்கத்தை” துவங்கியுள்ள நாடு?
- சீனா
- இந்தியா
- நேபாளம்
- பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: நேபாளம்
Explanation:
எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள குப்பைகளை அகற்றுவதை நோக்கமாக கொண்டு 45 நாள் “எவரெஸ்ட் தூய்மையாக்கல் இயக்கத்தை” (Everest Cleaning Campaign) நேபாள அரசு தொடங்கியுள்ளது.
6. மெல்பர்ன் கிரிக்கெட் கிளப்பின்(MCC) முதல் பிரிட்டிஷர் அல்லாத தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
- சனத் ஜெயசூர்யா
- சவுரவ் கங்குலி
- சச்சின் டெண்டுல்கர்
- குமார் சங்ககாரா
Answer & Explanation
Answer: குமார் சங்ககாரா
Explanation:
மெல்பர்ன் கிரிக்கெட் கிளப்பின்(MCC) முதல் பிரிட்டிஷர் அல்லாத தலைவராக, முன்னாள் இலங்கை கேப்டன் “குமார் சங்ககாரா” (Kumar Sangakkara) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர், வரும் அக்டோபர் மாதம் முதல் இந்த பொறுப்பை ஏற்கப் போகிறார். இதனைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்த பொறுப்பில் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தற்போதைய தலைவர்: Anthony Wreford
7. “சுந்தரம் ரவி ” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- துப்பாக்கி சுடுதல்
- ஈட்டி எறிதல்
- டேபிள் டென்னிஸ்
- கிரிக்கெட்
Answer & Explanation
Answer: கிரிக்கெட்
Explanation:
ICC உலக கோப்பை போட்டியில் பணிபுரிய உள்ள 22 நடுவர்களில் இந்தியாவை சேர்ந்த ஒரே நடுவராக சுந்தரம் ரவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
8. “Game Changer” என்ற புத்தகம், பின்வரும் யாருடைய சுயசரிதை ஆகும்?
- தோனி
- சாஹித் அப்ரிடி
- ராகுல் டிராவிட்
- VVS லக்ஷ்மணன்
Answer & Explanation
Answer: சாஹித் அப்ரிடி
Explanation:
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாஹித் அப்ரிடி அவர்களின் சுயசரிதை Game Changer என்ற பெயரில் வெளிவந்துள்ளது. இந்த புத்தகத்தை சாஹித் அப்ரிடி (Shahid Afridi), வஜஹாத் எஸ். கான் (Wajahat S. Khan) உடன் இணைந்து எழுதியுள்ளார்
9. 2019ஆம் ஆண்டுக்கான உலக கடவுச்சொல் தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
- மே 3
- மே 2
- மே 1
- ஏப்ரல் 30
Answer & Explanation
Answer: மே 2
Explanation:
உலக கடவுச்சொல் தினம் (World Password Day) மே மாதத்தின் முதல் வியாழக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான உலக கடவுச்சொல் தினம் மே-2 அன்று அனுசரிக்கப்பட்டது.
More TNPSC Current Affairs
Related