Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 2nd September 2018. Take the quiz and improve your knowledge.
1. “உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு” நடைபெற உள்ள இடம்?
டெல்லி
கொல்கத்தா
பெங்களூர்
சென்னை
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
நிதி ஆயோக் அமைப்பின் “உலகளாவிய மொபிலிட்டி உச்சி மாநாடு” [MOVE: The Global Mobility Summit] புது டெல்லியில் வரும் செப்டம்பர் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 6 வரை ‘Mobility Week’ என்று கடைபிடிக்கப்படுகிறது.
2. சமீபத்தில் சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயர் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?
வீர சிவாஜி சர்வதேச விமான நிலையம்
தீன தாயாள் சர்வதேச விமான நிலையம்
சத்திரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம்
மஹாராஜ் சிவாஜி சர்வதேச விமான நிலையம்
Answer & Explanation
Answer: சத்திரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம்
Explanation:
மும்பை வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தின் பெயரானது சமீபத்தில் சத்திரபதி சிவாஜி மஹாராஜ் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
3. “Moving on.. Moving Forward : A Year in Office” என்ற புத்தகத்தை எழுதியவர்?
மன்மோகன்சிங்
வெங்கையா நாயுடு
பிரதிபா பாட்டீல்
பிரணாப் முகர்ஜி
Answer & Explanation
Answer: வெங்கையா நாயுடு
Explanation:
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய Moving on.. Moving Forward : A Year in Office என்ற புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.
4. 5வது BIMSTEC மாநாடு நடைபெற உள்ள நாடு?
நேபாளம்
மியான்மர்
தாய்லாந்து
இலங்கை
Answer & Explanation
Answer: இலங்கை
Explanation:
சமீபத்தில் 4வது BIMSTEC மாநாடு நேபாள நாட்டின் தலைநகரமான காத்மாண்டில் நடந்து முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு 5வது BIMSTEC மாநாடு இலங்கையில் நடைபெற உள்ளது.
4வது BIMSTEC மாநாட்டின் கருப்பொருள்: ‘Towards a Peaceful Prosperous, and Sustainable Bay of Bengal Region’
5. சர்வதேச தேங்காய் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
1st செப்டம்பர்
2nd செப்டம்பர்
30th ஆகஸ்ட்
31st ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: செப்டம்பர் 2
Explanation:
2018ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்: “Coconut for Good Health, Wealth & Wellness”
6. 46வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளவர்?
மதன் லோகுர்
ஆர். பானுமதி
ரஞ்சன் கோகாய்
தீபக் மிஸ்ரா
Answer & Explanation
Answer: ரஞ்சன் கோகாய்
Explanation:
45வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து வரும் தீபக் மிஸ்ராவின் பதவிகாலம் வரும் அக்டோபர் 02-ம் தேதியுடன் முடிவடைவதை தொடர்ந்து புதிய தலைமை நீதிபதிக்கு ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
7. சமீபத்தில் காலமான “தருண் சாகர்” பின்வரும் எதனுடன் தொடர்பானவர்?
அரசியல்
ஆன்மிகம்
சினிமா
பத்திரிக்கை
Answer & Explanation
Answer: ஆன்மிகம்
Explanation:
மத்திய பிரதேச மாநிலம் தோகா மாவட்டத்தைச் சேர்ந்த சமண மதத் துறவியான தருண் சாகர் மஹாராஜ் உடல்நலக்குறைவு காரணமாக செப்டம்பர் 1 அன்று காலமானார்.
8. 2018ஆம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள இருப்பவர்?
ரோஷினி ஷெரோன்
அதிதி ஹுண்டியா
ஷ்ரதா சஷிதர்
நேஹல் சூதாசமா
Answer & Explanation
Answer: நேஹல் சூதாசமா
Explanation:
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2018 பட்டத்தை வென்றது மூலம் “நேஹல் சூதாசமா” பாங்காங்கில் டிசம்பரில் நடைபெற உள்ள மிஸ் யுனிவர்ஸ் 2018 போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பாக தேர்வாகியுள்ளார். இவர் மும்பையை சார்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
9. “நிது(Nitu)” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
ஹாக்கி
துப்பாக்கி சுடுதல்
பாட்மிட்டன்
குத்துசண்டை
Answer & Explanation
Answer: குத்துசண்டை
Explanation:
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ‘நிது’ சமீபத்தில் நடந்த உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் 48 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்தின் நில்லாடா மீக்கூனை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.
2வது முறையாக இந்த பட்டத்தை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
10. ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவுவிழாவில் இந்திய கொடியை ஏந்திச் சென்றவர் ?
அபினவ் பிந்த்ரா
பி.வி சிந்து
ராணி ராம்பால்
நீரஜ் சோப்ரா
Answer & Explanation
Answer: ராணி ராம்பால்
Explanation:
செப்டம்பர் 2 அன்று முடிவடைந்த 18வது ஆசிய விளையாட்டு போட்டியின் நிறைவுவிழாவில் இந்திய கொடியை, பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் “ராணி ராம்பால்” ஏந்திச் சென்றார்.
தொடக்க விழாவில் இந்தியாவின் சார்பாக ஈட்டி எறிதல் வீரர் “நீரஜ் சோப்ரா” இந்திய கொடியை ஏந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.