Current Affairs in Tamil 30-31st March 2019
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 30-31 March 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.
1. உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமையபெற்ற வாக்குச்சாவடி எனும் சிறப்பை பெற்றுள்ள இடம்?
- கொழுக்குமலை
- கஞ்சன்ஜங்கா
- தாஷிகாங்
- வெலிங்டன்
Answer & Explanation
Answer: தாஷிகாங்
Explanation:
உலகிலேயே மிக உயரமான இடத்தில் அமையபெற்ற வாக்குச்சாவடி எனும் சிறப்பை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்ன் மாண்டி மக்களவை தொகுதியில் அமைந்துள்ள தாஷிகாங் (Tashigang) கிராம வாக்குச்சாவடி பெற்றுள்ளது
இந்த வாக்குச்சாவடி தரைமட்டத்திலிருந்து 15,256அடி உயரத்தை உடையது
TNPSC Group 2A Model Question Papers – Download
2. உலகிலேயே மிக நீளமான உப்பு குகை சமீபத்தில் எங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
- இஸ்ரேல்
- சீனா
- தென் கொரியா
- வட கொரியா
Answer & Explanation
Answer: இஸ்ரேல்
Explanation:
10 கி.மீ-கும் அதிகமான நீளம் கொண்ட உலகிலேயே மிக நீளமான உப்பு குகை சமீபத்தில் இஸ்ரேலின் சாக்கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த குகைக்கு “மால்கம்” என பெயரிட்டுள்ளனர்.
3. சமீபத்தில், ஸ்லோவேக்கியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
- ஜன் குசியாக்
- மார்ஸ் செஃபோகோவிக்
- ஜுசானா காபுட்டோவா
- ஆண்ட்ரேஜ் கிஸ்கா
Answer & Explanation
Answer: ஜுசானா காபுட்டோவா
Explanation:
வழக்கறிஞர் ஜுசானா காபுட்டோவா (Zuzana Caputova) தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்ஸ் செஃபோகோவிக்கை வீழ்த்தி ஸ்லோவேக்கியாவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஸ்லோவேக்கியாவின் முதல் பெண் அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4. சமீபத்தில் யாருக்கு பிரவாசி பாரதிய சம்மன் விருது வழங்கப்பட்டது?
- கே. குமார்
- இராஜேந்திர குமார் ஜோஸி
- எம்.எஸ். கரீமுதீன்
- மகேந்திரகிரி
Answer & Explanation
Answer: இராஜேந்திர குமார் ஜோஸி
Explanation:
இராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்ட சுவிட்சர்லாந்த் அறிவியல் அறிஞரான “ராஜேந்திர ஜோஸிக்கு” கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டிருந்த பிரவாசி பாரதிய சம்மன் விருது சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் இந்திய தூதர் சிபி ஜார்ஜிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த ஆண்டிற்கான பிரவாசி பாரதிய சம்மன் விருது மொத்தமாக 30பேருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
பிரவாசி பாரதிய திவாஸ் (வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம்) ஜனவரி 9 ல் கொண்டாடப்படுகிறது, மேலும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிகப் பெரிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது.
March 28th and 29th Current Affairs
5. AUSINDEX-19 என்பது இந்தியா மற்றும் பின்வரும் எந்த நாட்டுக்கு இடையே நடைபெறும் கடற் பயிற்சி ஆகும்?
- அமெரிக்கா
- ஆஸ்திரியா
- ஆஸ்திரேலியா
- பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: ஆஸ்திரேலியா
Explanation:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கடற்படைகள் பங்கேற்கும் AUSINDEX-19 கூட்டு கடற்படை பயிற்சியானது விசாகப்பட்டினத்தில் ஏப்ரல் 2 முதல் 16 வரை நடைபெற உள்ளது.
6. “இளவேனில் வளரிவன்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- டேபிள் டென்னிஸ்
- கிரிக்கெட்
- பாட்மிட்டன்
- துப்பாக்கி சுடுதல்
Answer & Explanation
Answer: துப்பாக்கி சுடுதல்
Explanation:
தைவான் நாட்டில் நடைபெற்ற ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டிகளின் 10 மீ ஏர் ரைபிள் பெண்கள் பிரிவில் இந்தியாவின் “இளவேனில் வளரிவன்” (Elavenil Valarivan) தங்கம் வென்றுள்ளார்.
7. “Indian Fiscal Federalism” என்ற புத்தகத்தை எழுதியவர்கள் ?
- Y.V. ரெட்டி & ஜி.ஆர்.ரெட்டி
- கல்யாணி கேன்டாடி & ரகு கர்னாட்
- ராமச்சந்திர குஹா & ராமகாந்த ரத்
- பிரணாப் முகர்ஜி & கரண் தாப்பர்
Answer & Explanation
Answer: Y.V. ரெட்டி & ஜி.ஆர்.ரெட்டி
Explanation:
RBI-இன் முன்னாள் கவர்னர் Y.V. ரெட்டி மற்றும் ஜி.ஆர்.ரெட்டி இணைந்து “Indian Fiscal Federalism”(இந்திய நிதி கூட்டமைப்பு) என்ற புத்தகத்தை எழுதியுள்ளனர்.
Y.V. ரெட்டி 14வது நிதிகுழுவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புத்தகத்தை வெளியிட்டவர் என்.கே சிங் ஆவார்.
8. உலக ஊதா தினம் (Epilepsy Awareness Day) எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 25 மார்ச்
- 26 மார்ச்
- 27 மார்ச்
- 28 மார்ச்
Answer & Explanation
Answer: மார்ச் 26
Explanation:
உலக ஊதா தினம் என அழைக்கப்படும் கால்-கை வலிப்பு விழிப்புணர்வு நாள் (Epilepsy Awareness Day) 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் மார்ச் 26 அன்று அனுசரிக்கப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related