TNPSC Current Affairs Question and Answer in Tamil 30th and 31st July 2018

Current Affairs in Tamil 30th & 31st July 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 30th &31st July 2018. Take the quiz and improve your knowledge.



TNPSC Current Affairs 30th July 2018

1. சர்வதேச நட்புறவு தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஜூலை 29
  2. ஜூலை 30
  3. ஆகஸ்ட் 1
  4. ஆகஸ்ட் 2
Answer & Explanation
Answer: ஜூலை 30

Explanation:

வெவ்வேறு இனம், மதம், நாடு கலாச்சாரம் போன்றவற்றை கொண்ட மக்களிடையே நட்புறவை ஊக்குவிக்கும் விதமாக ஜூலை 30 சர்வதேச நட்புறவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

2009 முதல் ஐ.நா சபையினால் சர்வதேச நட்புறவு தினம் கொண்டாடப்படுகிறது.

2. Gandhi : The years that Changed the world (1914-1948) என்ற புத்தகத்தை எழுதியவர்??

  1. டயானா எடுல்ஜி
  2. ராமச்சந்திர குஹா
  3. ராமகாந்த ரத்
  4. மாதவ் காட்கில்
Answer & Explanation
Answer: ராமச்சந்திர குஹா

Explanation:

காந்தி: உலகத்தை மாற்றிய வருடங்கள் (1914-1948) (Gandhi : The years that Changed the world (1914-1948) என்ற புத்தகத்தை எழுதியவர் ராமச்சந்திர குஹா. இப்புத்தகம் விரைவில் வெளிவர உள்ளது.

3. சமீபத்தில் ஜப்பானை தாக்கிய புயல்?

  1. ஜாங்டரி
  2. ரோனு
  3. மீகா
  4. ஒக்கி
Answer & Explanation
Answer: ஜாங்டரி

Explanation:

சமீபத்தில் ஜப்பானை ஜாங்டரி (Jongdari) என்ற புயல் தாக்கியது. இந்த புயலுக்கு ஜாங்டரி (Jongdari) என்ற பெயரை வடகொரியா வைத்துள்ளது.

4. சமீபத்தில் காலமான எழுத்தாளர் ராமபடா சௌத்ரி, பின்வரும் எந்த மொழியை சார்ந்தவர்?

  1. மலையாளம்
  2. கொங்கனி
  3. பெங்காலி
  4. தெலுங்கு
Answer & Explanation
Answer: ONGC

Explanation:

பிரபல பெங்காலி, நாவலாசிரியர் மற்றும் சிறுகதை எழுத்தாளரான ராமபடா சௌத்ரி [Ramapada Chowdhury] வயது முப்பு காரணமாக ஜூலை 29 அன்று காலமானார்.

‘Bari Badle Jay’ என்ற நாவலுக்காக 1988இல் சாகித்திய விருது வென்றவர் என்பது குறிப்பிடதக்கது.

5. சமீபத்தில் இங்கிலாந்து-பிரான்ஸ் கால்வாயை நீந்தி கடந்த ஆசிய இளைஞர்?

  1. சார்லோட் சாமுவேல்ஸ்
  2. பிரபாத் கோலி
  3. ஜார்கண்ட்
  4. மேற்குவங்கம்
Answer & Explanation
Answer: பிரபாத் கோலி

Explanation:

இங்கிலாந்து-பிரான்ஸ் கால்வாயை நீந்தி கடந்த முதல் ஆசிய இளைஞர் எண்ணும் பெருமையை பிரபாத் கோலி (Prabhat Koli) [19 Years]  பெற்றுள்ளார்.

25 கி.மீ தூரத்தை 6 மணிநேர மற்றும் 54 நிமிடங்களில் நீந்தி கடந்தார்.

6. சமீபத்தில் 3-வது பிரிக்ஸ் திரைப்பட விழா நடைபெற்ற நகரம்?

  1. கொல்கத்தா
  2. இஸ்லாமாபாத்
  3. கொழும்பு
  4. டர்பன்
Answer & Explanation
Answer: டர்பன்

Explanation:

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 3-வது பிரிக்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது. இதில் இந்திய படமான ‘நியூட்டன்’ சிறந்த படத்துக்கான விருதையும், Village Rockstars இரண்டு விருதுகளையும் பெற்றுள்ளது.

7. பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளவர்?

  1. பெனாஸிர் பூட்டோ
  2. இம்ரான்கான்
  3. நவாஸ் ஷெரீஃப்
  4. ஷாகித் அப்பாஸி
Answer & Explanation
Answer: மொஹாலி

Explanation:

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான ‘பாகிஸ்தான் தெஹ்ரீஃப் இ இன்சாஃப்’ கட்சி 116 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, எனவே வரும் ஆகஸ்ட் 11இல் பாகிஸ்தானின் 19 வது பிரதமராக பதவியேற்க உள்ளார்.

மொத்த தொகுதிகள் – 272

  • நவாஸ் ஷெரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி  – 64 இடங்கள்
  • பெனாசீர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி – 43 இடங்கள்

8. சமீபத்தில் எப்போது செவ்வாய் கிரகம் பூமிக்கு மிக அருகில் வந்தது?

  1. ஜூலை 30
  2. ஜூலை 31
  3. ஆகஸ்ட் 1
  4. ஆகஸ்ட் 2
Answer & Explanation
Answer: ஜூலை 31

Explanation:

15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 31 அன்று பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் தோன்றுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 2003-ம் ஆண்டு இதே நிகழ்வு நடைபெற்றது.

9. சமீபத்தில் ஒருங்கிணைந்த தளபதிகளின் மாநாடு எங்கு நடைபெற்றது?

  1. கொல்கத்தா
  2. மும்பை
  3. புது டெல்லி
  4. சென்னை
Answer & Explanation
Answer: புது டெல்லி

Explanation:

புது டெல்லியில் ஜூலை 30 மற்றும் 31 தேதிகளில், ஒருங்கிணைந்த தளபதிகளின் மாநாடு (Unified Commanders’ Conference (UCC) 2018)  நடைபெற்றது.

10. சமீபத்தில் யாருக்கு “மாலதி சந்தூர் விருது” வழங்கப்பட்டது?

  1. சாந்தா தேவி
  2. அனுரூபா
  3. மகாலக்ஷ்மி
  4. கோகில வாணன்
Answer & Explanation
Answer: சாந்தா தேவி

More TNPSC Current Affairs

TNPSC Current Affairs in Tamil – 29th July 2018
TNPSC Current Affairs in Tamil – 28th July 2018
TNPSC Current Affairs in Tamil – 27th July 2018



Leave a Comment