Current Affairs in Tamil 3rd August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 3rd August 2018. Take the quiz and improve your knowledge.

1.சமீபத்தில், ஒரு டிரில்லியன் டாலர் ($1 Trillion) சந்தை மதிப்பை எட்டிய நிறுவனம்?
- Apple
- Micro soft
- Face Book
- Google
Answer & Explanation
Answer: Apple
Explanation:
ஒரு டிரில்லியன் டாலர் ($1 Trillion) சந்தை மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனம் என்ற சாதனையை “ஆப்பிள்” (Apple) நிறுவனம் எட்டியுள்ளது
2. சமீபத்தில் கடக்நாத் கோழிக்கு புவிசார் குறியீடை பெற்றுள்ள மாநிலம்?
- சத்தீஸ்கர்
- மத்திய பிரதேசம்
- உத்திரபிரதேசம்
- அசாம்
Answer & Explanation
Answer: மத்திய பிரதேசம்
Explanation:
மத்திய பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டதில் கிடைக்கும் “கடக்நாத் கோழிக் கறிக்கு” (Kadaknath Chicken) புவிசார் குறியீடு (GI Tag) வழங்கப்பட்டுள்ளது.
கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக ’MP kadaknath’ என்ற செயலியும் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பு:
சத்தீஸ்கர் மாநிலமும் கடக்நாத் கோழிக்கு ‘புவிசார் குறியீடு’ கேட்டு மனு அளித்திருந்தது குறிப்பிடதக்கது.
3. சமீபத்தில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் யோகாப் பயிற்சியினை கட்டாயமாக்கியுள்ள மாநிலம்?
- குஜராத்
- ஒரிசா
- கர்நாடகா
- தெலுங்கானா
Answer & Explanation
Answer: கர்நாடகா
4. 2018-ஆம் ஆண்டுக்கான பீல்டு மெடல் (Field Medal)-ஐ வென்ற இந்திய வம்சாவளி நபர்?
- அக்ஷய் வெங்கடேஷ்
- பிரவின் கோர்தான்
- ரக்பிர் சிங் சங்கேரா
- தனிஷ்க் ஆப்ரஹாம்
Answer & Explanation
Answer: அக்ஷய் வெங்கடேஷ்
Explanation:
ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அக்ஷய் வெங்கடேஷ், கணிதத்துக்கான நோபல் பரிசு என அழைக்கப்படும், இவ்வாண்டுக்கான, ஃபீல்ட்ஸ் விருதைப் பெற்றுள்ளார். இவருடன் ஈரானை சேர்ந்த காச்சர் பிர்கார்(Caucher Birkar), ஜெர்மனியின் பீட்டர் ஷோல்ஸ்(Peter Scholze), இத்தாலியை சேர்ந்த அலிசியோ பிகலி(Alessio Figalli)ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்படவுள்ளது.
நான்கு வருடங்களுக்கு ஒருமுறை இவ்விருது வழங்கப்படுகிறது.
5. 123வது சட்டதிருத்த மசோதா பின்வரும் எதனுடன் தொடர்புடையது?
- தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்
- NITI Aayog-விற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்
- தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்
- CBI-விற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்
Answer & Explanation
Answer: தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்குதல்
Explanation:
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (National Commission for Backward Classes) அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கும், அரசியலமைப்பு 123வது திருத்த மசோதா (123rd amendment bill 2017) மக்களவையில் ஒருமனதாக 02.08.2018 அன்று நிறைவேறியுள்ளது
இம்மசோதா ஜீலை 31,2017 அன்று ராஜ்யசாபாவில் நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது
மேலும் இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினை வகைப்படுத்த “நீதிபதி ரோகிணி” தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. “வைஷ்ணவி ரெட்டி ஜக்கா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- ஹாக்கி
- கிரிக்கெட்
- பாட்மிட்டன்
- குத்துசண்டை
Answer & Explanation
Answer: பாட்மிட்டன்
Explanation:
உக்ரேன் சர்வதேச ஜீனியர் பாட்மிண்டன் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் “வைஷ்ணவி ரெட்டி ஜக்கா” (Vaishnavi Reddy Jakka) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஆண்கள் பிரிவில் DANYLO BOSNIUK பட்டம் வென்றுள்ளார்
7. சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?
- எமர்சன் மங்கோவா
- ராபர்ட் முகாபே
- ஜிம்மி கானர்ஸ்
- ஜான் மெக்கன்ரோ
Answer & Explanation
Answer: எமர்சன் மங்கோவா
Explanation:
சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் நடந்த முதல் பொதுத்தேர்தலில் எமர்சன் மங்கோவா வென்றுள்ளார்.
37 ஆண்டு காலம் ஆட்சிபுரிந்து வந்த அதிபர் ராபர்ட் முகாபேவுக்கு எதிராக கடந்த ஆண்டு அங்கு புரட்சி செய்து இராணுவ துணையுடன் ‘எமர்சன் மங்கோவா’ ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடதக்கது.
8. சமீபத்தில் “முதல்வர்-யுவ நேஸ்தம்” என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- கர்நாடகா
- தெலுங்கானா
- ஆந்திர பிரதேஷ்
- கேரளா
Answer & Explanation
Answer: ஆந்திர பிரதேஷ்
Explanation:
22 முதல் 35 வயது வரையிலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் “முதல்வர்-யுவ நேஸ்தம்” (Mukhya Manthri Yuva Nestham) திட்டத்தை ஆந்திர பிரதேஷ அரசு தொடங்கியுள்ளது.
9. சமீபத்தில் எப்போது தேசிய காகித தினம் அனுசரிக்கப்பட்டது?
- ஜூலை 30
- ஜூலை 31
- ஆகஸ்ட் 01
- ஆகஸ்ட் 02
Answer & Explanation
Answer: ஆகஸ்ட் 01
Explanation:
1940- ஆகஸ்ட் 1-ம் தேதி, ஜவஹர்லால் நேரு புனேயில் தொடங்கி வைத்த இந்தியாவின் முதல் காகித ஆலையான ‘பேப்பர் டெல்ஸ்’ என்ற கைவினை காகித ஆலையையின் அடையாளமாக இந்தியா அளவில் முதல் முறையாக ஆகஸ்ட் -1 காகித தினம் (National Papers Day) அனுசரிக்கப்பட்டது.
மேலும் சில.,
- January 29 – Indian Newspaper Day
- May 26 – National Paper Airplane Day
- May 29 – National Paperclip Day
- August 26 – National Toilet Paper Day
More TNPSC Current Affairs
Related