TNPSC Current Affairs Question and Answer in Tamil 3rd December 2018

Current Affairs in Tamil 3rd December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 3rd December 2018. Take the quiz and improve your knowledge.



TNPSC Current Affairs in Tamil 3rd December 2018

1.  சமீபத்தில், தமிழக அரசு பெண்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அறிமுகம் செய்துள்ள இலவச தொலைபேசி எண்?

  1. 151
  2. 161
  3. 171
  4. 181
Answer & Explanation
Answer: 181

Explanation:

நான்காண்டுகளுக்கு முன், மத்திய அரசால் பெண்களின் வன்கொடுமைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு அறிமுகம் செய்யப்பட்ட இலவச தொலைபேசி எண் 181-ஐ சமீபத்தில் தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  17வது ஜி-20 நாடுகளின் மாநாடு நடைபெறஉள்ள நாடு?

  1. ஜப்பான்
  2. சவூதி அரேபியா
  3. இத்தாலி
  4. இந்தியா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

17வது ஜி-20 மாநாடு 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறஉள்ளது. முன்னதாக “2022-இல் ஜி 20 மாநாட்டை இத்தாலி நடத்துவதாக இருந்தது, 2022ல் இந்தியா 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளதை காரணம்காட்டி பிரதமர் மோடி கேட்டுகொண்டதை தொடர்ந்து ஜி-20 நாடுகள் ஓப்புக்கொண்டன.

  • 13th G-20 Submit – அர்ஜென்டீனா
  • 14th G-20 Submit – ஜப்பான்
  • 15th G-20 Submit – சவூதி அரேபியா
  • 16th G-20 Submit – இத்தாலி

3. “Architecture of Justice: A Pictorial Walk-through of the Supreme Courts and High Courts of India” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. ரஞ்சன் கோகோய்
  2. எஸ்.ஹரிஷ்
  3. விஜய தஹில்ரமணி
  4. வினய் தாகூர்
Answer & Explanation
Answer: வினய் தாகூர்

Explanation:

தந்தை வினய் தாகூர் மற்றும் மகன் அமோக் தாகூர் ஆகியோர் இணைந்து இந்த புத்தகத்தை எழுதியுள்ளனர்.

4. கேம்பிரிட்ஜ் அகராதி 2018-ஆண்டின் மக்கள் வார்த்தையாக அறிவித்த வார்த்தை?

  1. Nomophobia
  2. Populism
  3. Surreal
  4. Pictograph
Answer & Explanation
Answer: Nomophobia

Explanation:

கேம்பிரிட்ஜ் அகராதி 2018-ஆண்டின் மக்கள் வார்த்தையாக Nomophobia தேர்ந்தெடுத்துள்ளது.

நொமோ போபியா என்றால் மொபைல் ஃபோன் இல்லாமல் அல்லது அதைப் பயன்படுத்த இயலாது என்ற பயம் அல்லது கவலை எனப்படும்.

5. சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 2nd டிசம்பர்
  2. 3rd டிசம்பர்
  3. 4th டிசம்பர்
  4. 5th டிசம்பர்
Answer & Explanation
Answer:  டிசம்பர் 3

Explanation:

கருப்பொருள் : மாற்றுத் திறன் கொண்டோரை மேம்படுத்துதல் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்தல் (Empowering persons with disabilities and ensuring inclusiveness and equality)

உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 15% மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

6. சமீபத்தில், ISSF-இன் ‘ஃபுளூ கிராஸ்’ விருதை வென்ற இந்தியர்?

  1. பவன் சிங்
  2. அபினவ் பிந்திரா
  3. மனு பாக்கர்
  4. ஹீனா சித்து
Answer & Explanation
Answer: அபினவ் பிந்திரா

Explanation:

இந்திய துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்திராக்கு சமீபத்தில் ISSF (International Shooting Sport Federation) ‘ஃபுளூ கிராஸ்’ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. இவ்விருதை பெறும் முதல் இந்தியர் அபினவ் பிந்திரா என்பது குறிப்பிடத்தக்கது

ISSF – சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு

7.  சமீபத்தில், ECB-வங்கியால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் கட்டண செலுத்தும் முறை?

  1. TIPS
  2. EMPM
  3. TEZ
  4. M-ECB
Answer & Explanation
Answer: TIPS

Explanation:

ஐரோப்பிய மத்திய வங்கி (ECB) TIPS (TARGET Instant Payment Settlement) என்ற ஸ்மார்ட்போன் கட்டண செலுத்தும் முறை அறிமுகம் செய்துள்ளது.

8. சமீபத்தில், மெக்சிகோவின் அதிபராக பதவி ஏற்றவர்?

  1. என்ரிக் பீனா நீட்டோ
  2. லோபெஸ் ஆப்ரடார்
  3. பெனா நெய்டோ
  4. வெங்கையா நாயுடு
Answer & Explanation
Answer: தர்மேந்திர பிரதான்

Explanation:

மெக்சிகோவின் புதிய அதிபராக “தேசிய ரீஜெனரேசன் இயக்கத்தை” சேர்ந்த மேனுவேல் லோபெஸ் ஆப்ரடார் (Lopez Obrador) டிசம்பர் 02 அன்று பதவி ஏற்றார்.

9. “லக்ஷயா சென்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. குதிரை ஏற்றம்
  2. துப்பாக்கி சுடுதல்
  3. வில்வித்தை
  4. பாட்மிண்டன்
Answer & Explanation
Answer: பாட்மிண்டன்

Explanation:

மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீரர் “லக்ஷயா சென்” உலக ஜூனியர் சாம்பியனான தாய்லாந்தின் குன்வலத் விதித்சர்னை  வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

10. ’Kimberley Process Certification Scheme” என்ற சர்வதேச அமைப்பிற்கு 2019-20 ஆண்டுகளுக்கு தலைமை பொறுபேற்க உள்ள நாடு?

  1. பெல்ஜியம்
  2. இந்தியா
  3. லெபனான்
  4. இந்தோனேஷியா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

“Kimberley Process Certification Scheme” எனப்படும் சர்வதேச வைர வியாபார ஒழுங்குமுறை (regulates trade in rough diamonds) அமைப்பின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் 30 அன்று பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற , இந்த அமைப்பின் 15 வது கூடுகையில் இந்தியாவிற்கு தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

More TNPSC Current Affairs



Leave a Comment