TNPSC Current Affairs Question and Answer in Tamil 3rd May 2019

Current Affairs in Tamil 3rd May 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 3rd May 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.




TNPSC Current Affairs in Tamil 3rd May 2019

1. சென்னையில் நடைபெற உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டியின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. மேக்னா நாயுடு
  2. த்ரிஷா
  3. வரலட்சுமி
  4. குஷ்பு சுந்தர்
Answer & Explanation
Answer: வரலட்சுமி

Explanation:

வருகின்ற ஆகஸ்ட் 03 முதல் 07 வரை சென்னையில் நடைபெற உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான (Intellectually challenged children) சர்வதேச கால்பந்து போட்டியின் (Special Olympics International Football Championship) நல்லெண்ண தூதராக நடிகை வரலட்சுமி சரத்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  சமீபத்தில், எங்கு முழவதும் பெண்களால் ஆன “ராணி அபாக்கா படை” என்ற ரோந்து துவங்கப்பட்டுள்ளது?

  1. கிருஷ்ணாபட்டினம்
  2. மங்களூர்
  3. கோபால்பூர்
  4. பிராசர்கஞ்ச்
Answer & Explanation
Answer: மங்களூர்

Explanation:

முழுவதும் பெண் காவலர்களை உள்ளடக்கிய “ராணி அபாக்கா படை” (Rani Abbakka Force) என்ற ரோந்து  படை மங்களூரில் துவங்கப்பட்டுள்ளது.

3. ஆசியா கூட்டுறவு உரையாடல் தொடர்பான 16 வது அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?

  1. டெல்லி
  2. தோஹா
  3. பாங்காக்
  4. ரியாத்
Answer & Explanation
Answer: தோஹா

Explanation:

ஆசியா கூட்டுறவு உரையாடல் [Asia Cooperation Dialogue’s (ACD)] தொடர்பான 16 வது அமைச்சர்கள் மாநாடு கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் கருப்பொருள்: Partners in Progress

May 2nd Current Affairs - More Details

4. சமீபத்தில், பெப்சி நிறுவனத்தால் சர்ச்சைக்கு உள்ளாகப்பட்ட உருளைக்கிழங்கு ரகம்?

  1. FL-2027
  2. FC-5
  3. FC-5 C
  4. FL-2027 C
Answer & Explanation
Answer: FC-5

Explanation:

தங்கள் நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள FC-5 ரக உருளைக்கிழங்கை விதிமுறைக்குப் புறம்பாக உற்பத்தி செய்வதாக குஜராத்தைச் சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது 1.5 கோடி நஷ்டஈடு கேட்டு போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுவதாக பெப்சிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.




5. ‘Operation Swift Retort’ என்பது பின்வரும் எந்த நாட்டுடன் தொடர்பானது?

  1. பாகிஸ்தான்
  2. இந்தியா
  3. நேபாளம்
  4. பங்களாதேஷ்
Answer & Explanation
Answer: பாகிஸ்தான்

Explanation:

புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா விமான படை பாகிஸ்தானில் தாக்குதல் மேற்கொண்டது.மேற்படி தாக்குதலுக்கு எதிராக பாகிஸ்தான் விமான படை இந்தியாவின் Balakot strike பகுதியில் நடத்திய பதிலடி நடவடிக்கைக்கு அதிகாரபூர்வாமாக ‘Operation Swift Retort’. என பெயரிட்டுள்ளது பாகிஸ்தான் விமான படை.

6. 8வது ஆசிய இளைஞர் பெண்களுக்கான கைப்பந்து (Hand Ball) போட்டி நடைபெற உள்ள நகரம்?

  1. கொழும்பு
  2. ஜகர்த்தா
  3. விசாகப்பட்டினம்
  4. ஜெய்பூர்
Answer & Explanation
Answer: ஜெய்பூர்

Explanation:

8வது ஆசிய இளைஞர் பெண்களுக்கான கைப்பந்து போட்டி (Asian Youth Women Handball Championship) வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் ஜெய்பூரில் நடைபெற உள்ளது.

கடந்த ஆண்டு இந்த போட்டி ஜகர்த்தா நகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

7. “பஜ்ரங் புனியா ” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. துப்பாக்கி சுடுதல்
  2. குத்துசண்டை
  3. டேபிள் டென்னிஸ்
  4. கிரிக்கெட்
Answer & Explanation
Answer: குத்துசண்டை

Explanation:

ரஷ்யாவில் நடைபெற்ற அலி அலீவ் ( Ali Aliev Tournament) குத்துசண்டை போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா தங்கம் வென்றார்

8. உலக பத்திரிகை சுதந்திர தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மே 3
  2. மே 2
  3. மே 1
  4. ஏப்ரல் 30
Answer & Explanation
Answer: மே 3

Explanation:

யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் பரிந்துரையைத் தொடர்ந்து ஐ.நா. பொது அவையில் 1993 ஆம் ஆண்டு டிசம்பரில் உலக பத்திரிகை சுதந்திர தினம் பிரகனப்படுத்தப்பட்டது. அதுமுதல் மே 3 உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது

இந்த ஆண்டுக்கான கருப்பொருள்: Media for Democracy: Journalism and Elections In Times of Disinformation

More TNPSC Current Affairs



Leave a Comment