TNPSC Current Affairs Question and Answer in Tamil 3rd September 2018

Current Affairs in Tamil 3rd September 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 3rd September 2018. Take the quiz and improve your knowledge.



TNPSC Current Affairs Tamil 3rd september 2018

1. ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’ என்ற உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி அமைக்கப்பட்டு வரும் நாடு?

  1. சிலி
  2. அர்ஜென்டினா
  3. ரஷ்யா
  4. அமெரிக்கா
Answer & Explanation
Answer: சிலி

Explanation:

விண்வெளியை பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய உலகின் அதி நவீன தொலைநோக்கியான ‘ஜெயன்ட் மெக்கல்லன் டெலஸ்கோப்’ சிலி நாட்டில் அமைக்கப்பட்டு வருகிறது. 2024ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்க உள்ள இது உலகின் மிகப் பெரிய தொலைநோக்கியாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

TNPSC Group 2 Model Question Papers – Download

2.  சமீபத்தில் 15வது இந்திய-ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம் நடைபெற்ற இடம்?

  1. ஜப்பான்
  2. சிங்கப்பூர்
  3. மலேசியா
  4. இந்தியா
Answer & Explanation
Answer: சிங்கப்பூர்

Explanation:

6th RCEP Trade Minister Meeting மற்றும் 15வது இந்திய-ஆசியான் பொருளாதார மந்திரிகள் கூட்டம் சிங்கபூரில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளன.

இந்த ஆண்டுக்கான ஆசியான் அமைப்பின் தலைமை பொறுப்பை சிங்கப்பூர் வகிப்பது குறிப்பிடதக்கது.

3. “No Spin: My Autobiography” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. வாசிம் அக்ரம்
  2. ஷேன் வார்ன்
  3. அணில் கும்ப்ளே
  4. முத்தையா முரளிதரன்
Answer & Explanation
Answer: ஷேன் வார்ன்

4. 2018ம் ஆண்டிற்கான பி. சி.ராய் தேசிய விருது யாருக்கு வழங்கப்பட உள்ளது?

  1. இந்திரா இந்துஜா
  2. பசந்த் குமார் மிஸ்ரா
  3. ஆசிபா உல்பா
  4. ஷியாம் ஸ்ரீனிவாசன்
Answer & Explanation
Answer: பசந்த் குமார் மிஸ்ரா

Explanation:

இந்திய மருத்துவத்துறையில் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் டாக்டர் பி.சி. ராய் தேசிய விருதுக்கு டாக்டர். பசந்த் குமார் மிஷ்ரா (Dr. Basant Kumar Mishra) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல நரம்பியல் மருத்துவர் ஆவார்.

சுதந்திர போராட்ட வீரர், சிறந்த டாக்டர் என பன்முகங்களை கொண்ட பாரத ரத்னா பி.சி.ராய் பெயரில் 1976-ம் ஆண்டிலிருந்து மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களுக்கு பி. சி.ராய் தேசிய விருது’ வழங்கி, கெளரவிக்கப்படுகிறது. பி.சி.ராய் அவர்களின் பிறந்த நாளான ஜூலை 1, தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

5. சர்வதேச காணாமற் போனோர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 1st செப்டம்பர்
  2. 2nd செப்டம்பர்
  3. 30th ஆகஸ்ட்
  4. 31st ஆகஸ்ட்
Answer & Explanation
Answer: ஆகஸ்ட் 30

Explanation:

International Day of the Disappeared 2018

6. சமீபத்தில், உத்தரகாண்ட் மாநில போதைப் பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கப் பட்டுள்ளவர்?

  1. மதன் லோகுர்
  2. அமீர்கான்
  3. அமிதாபச்சன்
  4. சஞ்சய் தத்
Answer & Explanation
Answer: சஞ்சய் தத்

Explanation:

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் மற்றும் டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் போதைப் பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7.  சமீபத்தில் முதல் முறையாக விமானத்தை ஓட்டிய காஷ்மீர் முஸ்லிம் பெண்?

  1. இராம் ஹபீப்
  2. மரியா ஹாசன்
  3. ஆசிபா உல்பா
  4. ஜாஸ்மின் முஹமத்
Answer & Explanation
Answer: இராம் ஹபீப் (Iram Habib)

Explanation:

காஷ்மீர் இஸ்லாமியப் பெண்களில் முதல் விமான ஓட்டுநர் பெண் என்ற பெருமையை இராம் ஹபீப் (Iram Habib) பெற்றுள்ளார்.

8. இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்?

  1. ஆதித்யா பூரி
  2. பினாய் குமார்
  3. சுனில் மேத்தா
  4. சந்தா கோச்சார்
Answer & Explanation
Answer: சுனில் மேத்தா

Explanation:

மும்பையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பின் புதிய தலைவராக சுனில் மேத்தாவும் துணை தலைவராக தினாபந்து மஹபத்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

9. “சாக்ஷி சௌத்ரி (Sakshi Choudhary)” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. ஹாக்கி
  2. துப்பாக்கி சுடுதல்
  3. பாட்மிட்டன்
  4. குத்துசண்டை
Answer & Explanation
Answer: குத்துசண்டை

Explanation:

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ‘சாக்ஷி சௌத்ரி’ சமீபத்தில் நடந்த உலக யூத் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியின் 57 கிலோ எடைப் பிரிவில் குரோசியா வீராங்கனை  நிகோலினா கசிக்னை வீழ்த்தி தங்க பதக்கம் வென்றுள்ளார்.

10. ஆசிய விளையாட்டு போட்டியின், மிகவும் மதிப்புமிக்க வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ?

  1. தக்மி கனியா
  2. ரிகாகோ இகீ
  3. ஜின் செங்
  4. நீரஜ் சோப்ரா
Answer & Explanation
Answer: ரிகாகோ இகீ

Explanation:

18ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியின் பல்வேறு நீச்சல் பிரிவுகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்ற ஜப்பானிய வீராங்கனை ரிகாகோ இகீ, மிகவும் மதிப்புமிக்க வீரராக (Most Valuable Player) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

More TNPSC Current Affairs

TNPSC Current Affairs in Tamil – 2nd September 2018
TNPSC Current Affairs in Tamil – 1st September 2018



Leave a Comment