Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 4th August 2018. Take the quiz and improve your knowledge.
1.சமீபத்தில், 4வது இந்திய சர்வதேச காலணிகள் கண்காட்சி எங்கு நடைபெற்றது?
பெங்களூர்
டெல்லி
கொல்கத்தா
ஹைதராபாத்
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
ஆகஸ்ட் 2-லிருந்து 4-வரை டெல்லியில் 4வது இந்திய சர்வதேச காலணிகள் கண்காட்சி(4th India International Footwear Fair) நடைபெற்றது.
2. சமீபத்தில், மனித செல்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வடிவத்தின் பெயர்?
ஸ்கூடாய்ட்
பென்டநாய்ட்
சர்கிள்டாய்ட்
ட்ரிங்னாய்ட்
Answer & Explanation
Answer: ஸ்கூடாய்ட்
Explanation:
உடலின் பாதுகாப்பு கேடயமாக இயங்கும், மேற்புறச் செல்களில் (Epithelial cells) ஆய்வின் போது ஸ்கூடாய்டு எனப்படும் புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
5 பக்கங்களைக் கொண்ட ஸ்கூடாய்ட் (‘scutoid’) என்ற இந்த வடிவத்தில் ஒரு பகுதி ஐங்கோணமாகவும் மற்றொரு பகுதி அறுகோணமாகவும் உள்ளது குறிப்பிடதக்கது.
இது பார்க்க முப்பெட்டகத்தின் முறுக்கப்பட்ட வடிவம் போன்ற தோற்றம் அளிக்கிறது.
3. சமீபத்தில் பின்வரும் யாருக்கு ”ஷாலகா சம்மான் 2017-2018” விருது வழங்கப்பட்டது?
யாஷ் சோப்ரா
ரன் ஜோஹர்
ஜாவித் அக்தர்
ராஜ்குமார் ஹிரானி
Answer & Explanation
Answer: ஜாவித் அக்தர்
Explanation:
இந்தி சாகித்ய அகதாமியின் உயரிய விருதான ஷாலகா சம்மான் விருது(Shalaka Samman) இந்தி கவிஞர் “ஜாவித் அக்தருக்கு” (Javed Akthar) வழங்கப்பட்டுள்ளது
கடந்த ஆண்டு 2017 ஹிருதயநாத் மங்கேஷ்கர் விருது, ஜாவித் அக்தர் (Javed Akhtar)-க்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
4. ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் தலைமை நீதிபதி?
கீதா மிட்டல்
விஜயா கே தஹுல்ரமணி
கீதா ஜோரி
சிந்து சர்மா
Answer & Explanation
Answer: கீதா மிட்டல்
Explanation:
டெல்லி உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த கீதா மிட்டல் ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
மேலும் ஜம்மு – காஷ்மீர் உயர் நீதிமன்றத்திற்கு முதல் பெண் நீதிபதியாக சிந்து சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த விஜயா கே தஹுல்ரமணி புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை தலைமை நீதிபதியாக பணிபுரிந்து வந்த இந்திரா பானர்ஜி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய மூன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள்: (மொத்த நீதிபதிகள்=25)
உத்தரகாண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.எம். ஜோசப்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி
ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வினீத் சரண்
5. “Shor Nahin” என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
ஹிமாச்சல பிரதேஷ்
மத்திய பிரதேஷ்
உத்திர பிரதேஷ்
ஆந்திர பிரதேஷ்
Answer & Explanation
Answer: ஹிமாச்சல பிரதேஷ்
Explanation:
அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் வாகனங்கள் பற்றி புகார் தெரிவிக்க “Shor Nahin” என்ற மொபைல் செயலியை ஹிமாச்சல பிரதேஷ அரசு தொடங்கியுள்ளது. மேலும் ஒலி மாசுபாட்டை குறைக்க “Horn not ok” என்ற விழிப்புணர்வு இயக்கத்தையும் துவங்கியுள்ளனர்.
6. இந்தியாவின் முதல் ‘பிளாக் செயின்’ மாவட்டம் அமையுள்ள மாநிலம்?
ஆந்திர பிரதேஷ்
தெலுங்கானா
கர்நாடகம்
கேரளா
Answer & Explanation
Answer: தெலுங்கானா
Explanation:
இந்தியாவின் முதல் ‘பிளாக் செயின்’ மாவட்டம் (blockchain district) தெலுங்கானா மாநில அரசு மற்றும் டெக் மகேந்திரா (Tech Mahindra) நிறுவனத்தின் கூட்டு முயற்சியால் தெலுங்கானாவில் அமையவுள்ளது.
7. சமீபத்தில் E-Aksharayan என்ற மென்பொருளை அறிமுகம் செய்த அமைச்சகம்?
உள்துறை அமைச்சகம்
விவசாயத் துறை அமைச்சகம்
மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
Answer & Explanation
Answer: தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
Explanation:
இந்திய மொழிகளில் உள்ள ஸ்கேன் செய்யப்பட்ட கோப்புகளை (Scanned indian language documents) முழுவதும் திருத்தம் செய்யக்கூடிய (Fully editable text) “E-Aksharayan” என்ற மென்பொருளை (Desktop software) மத்திய அரசுசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
முதல் கட்டமாக தமிழ், வங்காளம், மலையாளம், இந்தி, கன்னடம், மற்றும் அசாமி ஆகிய 7 மொழிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
8. ‘ஆஸ்திரேலியா மாஸ்டர்செப் 2018’ ல் போட்டியில் வென்றவர்?
ஜார்ஜ் கேலம்பாரிஸ்
சசி செல்லையா
திவாகரன் S சேது
பென் போர்ஸ்
Answer & Explanation
Answer: சசி செல்லையா
Explanation:
ஆஸ்திரேலியாவில் நடந்த சமையல் கலைஞர்களுக்கான ‘ஆஸ்திரேலியா மாஸ்டர்செப் 2018’ ல் போட்டியில் கோவையை பூர்வீகமாகக் கொண்ட சசி செல்லையா வெற்றி பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை பென் போர்ஸ் பெற்றுள்ளார்.