TNPSC Current Affairs Question and Answer in Tamil 4th December 2018

Current Affairs in Tamil 4th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 4th December 2018. Take the quiz and improve your knowledge.



1.  உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில், திருப்பூர் பெற்றுள்ள இடம் ?

  1. 3 வது
  2. 6 வது
  3. 9 வது
  4. 12 வது
Answer & Explanation
Answer: 6 வது

Explanation:

ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டுள்ள, உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில், 8.36 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன் திருப்பூர் 6 வது இடத்தை பிடித்துள்ளது.மேலும் சென்னை 8.17 சதவிகித வளர்ச்சியை பெற்று 9வது இடத்தில் உள்ளது

இந்த பட்டியலில் முதல் பத்து இடங்களையும் இந்திய நகரங்கள் பிடித்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.

முதல் இடத்தில் குஜராத்தின் 1.சூரத் நகரமும், அடுத்தடுத்த இடங்களை 2.ஆக்ரா, 3.பெங்களூர், 4.ஹைதராபாத், 5.நாக்பூர்  பிடித்துள்ளன.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  “எக்ஸ் கோப் இந்தியா-18” என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையேயான விமானப்படை பயிற்சி ஆகும்?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. சிங்கப்பூர்
  4. இங்கிலாந்து
Answer & Explanation
Answer: அமெரிக்கா

Explanation:

Ex Cope India-18  என்ற பெயரில் இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகளின் கூட்டு இராணுவ பயிற்சி ஆனது மேற்கு வங்காளத்தின் காலைகுண்டா (Kalaikunda) மற்றும் பனகார்க் (Panagarh) விமானப்படைத் தளங்களில் டிசம்பர்-3 முதல் டிசம்பர்-14 வரை நடைபெற உள்ளது.

மேலும்.,

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே “கொங்கன் 18” என்ற பெயரில் கடற்படை பயிற்சி கோவாவில் நவம்பர் 28 அன்று துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

3. “Blue Waters Ahoy!’ Chronicling the Indian Navy’s History from 2001-10”” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. சுனில் லன்பா
  2. அனுப் சிங்
  3. ராபின் கே. தோவான்
  4. நீலஞ்சன் முகபாப்புதய்
Answer & Explanation
Answer: அனுப் சிங்

Explanation:

2001-10 காலகட்டங்களில் இந்திய கடற்படை வரலாற்றை பற்றி துணை அட்மிரல் அனுப் சிங் எழுதியுள்ளார்.

4. சமீபத்தில், பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து (OPEC) விலக முடிவு செய்துள்ள நாடு?

  1. சவூதி அரேபியா
  2. ஓமன்
  3. பஹ்ரைன்
  4. கத்தார்
Answer & Explanation
Answer: கத்தார்

Explanation:

ஆஸ்திரியா நாட்டின் வியன்னாவை தலைமையிடமாக கொண்ட “பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் (OPEC – Organization of the Petroleum Exporting Countries) இருந்து விலகுவதாக கத்தார் நாடு முடிவு செய்துள்ளது.

இந்த அமைப்பில் சவூதி அரேபியாவின் ஆதிக்கம் நிறைந்த இருப்பதாலும் சக உறுப்பு நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டு வருவதாலும் இந்த முடிவை கத்தார் எடுத்துள்ளது.

இவ்வமைப்பு 1960 ஆம் ஆண்டு பாக்தாத்தில் துவங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

5. இந்திய கடற்படை தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 3rd டிசம்பர்
  2. 4th டிசம்பர்
  3. 5th டிசம்பர்
  4. 6th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 4

Explanation:

1971 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று இந்தியா – பாகிஸ்தான் போரின் போது, ”ஆபரேஷன் டிரைடண்ட்” (Operation Trident) என்ற அடைமொழியிடப்பட்ட இராணுவ திட்டத்தின் மூலம், இந்திய கடற்படை வெற்றிகரமாக பாகிஸ்தானின் கராச்சி துறைமுகத்தைத் தாக்கின. இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 கடற்படை தினம் அனுசரிக்கப்படுகிறது.

6. சமீபத்தில், PETA-வின் ஹீரோ டூ அனிமல் விருது யாருக்கு வழங்கப்பட்டது?

  1. இம்ரான் ஹுசைன்
  2. அருந்ததிராய்
  3. த்ரிஷா
  4. கவிதா ஜவகர்
Answer & Explanation
Answer: இம்ரான் ஹுசைன்

Explanation:

சீனாவின் மாஞ்ஜா நூலை [பட்டம் விட பயன்படும் நூல்] தடை செய்ததற்காக தில்லி அமைச்சர் இம்ரான் ஹுசைனுக்கு Hero to Animals விருதை பீட்டா நிறுவனம் சமீபத்தில் வழங்கியது.

7.  சமீபத்தில், மத்திய அரசின் நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?

  1. கீதா கோபிநாத்
  2. ரகுராம் ராஜன்
  3. ஹஸ்முக் ஆதியா
  4. அஜய் நாராயண் ஜா
Answer & Explanation
Answer: அஜய் நாராயண் ஜா

Explanation:

மத்திய அரசின் நிதித்துறை செயலராக இருந்த ஹஸ்முக் ஆதியா ஓய்வுபெற்றதை  தொடர்ந்து புதிய செயலராக  அஜய் நாராயண் ஜா (A.N Jha) நியமிக்கப்பட்டுள்ளார்.

1982 ஆம் தொகுப்பு இந்திய ஆட்சி பணியை சேர்ந்த இவர் மணிப்பூரை சேர்ந்தவர்.

8. GSAT-11 செயற்கைகோளின் எடை மற்றும் ஆயுட்காலம்?

  1. 3435 kg & 15 ஆண்டுகள்
  2. 5854 kg & 15 ஆண்டுகள்
  3. 3534 kg & 18 ஆண்டுகள்
  4. 5458 kg & 18 ஆண்டுகள்
Answer & Explanation
Answer: 5854 & 15 ஆண்டுகள்

Explanation:

5854 kg எடை கொண்ட, தகவல் தொடர்பு செயற்கைக்கோளான GSAT-11 பிரஞ்சு கயானாவில் இருந்து Ariane 5 VA-246 ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது.

இஸ்ரோவினால் இதுவரை ஏவப்பட்ட செயற்கைக்கோள்களிலேயே இதுவே அதிக எடை உடையது ஆகும்

9. “அஸ்மிதா சாலிஹா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. குதிரை ஏற்றம்
  2. துப்பாக்கி சுடுதல்
  3. வில்வித்தை
  4. பாட்மிட்டன்
Answer & Explanation
Answer: பாட்மிட்டன்

Explanation:

மும்பையில் நடைபெற்ற டாடா ஓபன் பாட்மிண்டன் போட்டியின், பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கணை Ashmita Chaliha சாம்பியன் பட்டம் வென்றார்.

  • ஆண்கள் ஓற்றையர் – லக்‌ஷயா சிங்
  • பெண்கள் இரட்டையர் – நிக் விங் யங், யாங் கா சிங் இணை (ஹாங்காங்)
  • ஆண்கள் இரட்டையர் – அர்ஜீன் எம்.ஆர்., சுமீத் ரெட்டி
  • கலப்பு இரட்டையர் – Nipitphon Phuangphuapet, Savitree Amitrapai ஜோடி (தாய்லாந்து)

10. சமீபத்தில், சர்வதேச் துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்ட்டமைப்பில் (ISSF) நடுவர்கள் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்தியர்?

  1. பவன்குமார்
  2. பவன் சிங்
  3. ராகுல் சௌத்ரி
  4. எஸ்.எஸ். தேஸ்வால்
Answer & Explanation
Answer: பவன் சிங்

Explanation:

International Shooting Sport Federation -இன் ஏழுபேர்கள் கொண்ட நடுவர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக பவன் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

More TNPSC Current Affairs



Leave a Comment