Current Affairs in Tamil 4th May 2019
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 4th May 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.
1. சமீபத்தில், பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள 100 உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழர் ?
- அப்துல்கலாம்
- ஷிவ் நாடார்
- அருணாச்சலம் முருகானந்தம்
- ரஜினிகாந்த்
Answer & Explanation
Answer: அருணாச்சலம் முருகானந்தம்
Explanation:
பார்ச்சூன் பத்திரிகை வெளியிட்டுள்ள 100 உலகின் தலைசிறந்த தலைவர்கள் பட்டியலில் அருணாச்சலம் முருகானந்தம் 45வது இடத்தை பிடித்துள்ளார்.
குறைந்த விலையில் சானிடரி நாப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்ததால் இவருக்கு இந்த சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. “மிஸ் சூப்பர் குலோப் இந்தியா-2019” அழகிப் போட்டியில் வென்றவர்?
- அக்சரா ரெட்டி
- அனுகீர்த்தி வாஸ்
- மனூஷி சில்லார்
- ரீட்டா பரியா
Answer & Explanation
Answer: அக்சரா ரெட்டி
Explanation:
கேரளாவில் நடைபெற்ற “மிஸ் சூப்பர் குளோப் இந்தியா-2019” அழகிப் போட்டியில் சென்னையை சேர்ந்த அக்சரா ரெட்டி பட்டம் வென்றார். இந்த பட்டத்தை வென்றதன் மூலம் துபாயில் நடைபெறும் “மிஸ் சூப்பர் குளோப் வோர்ல்ட் அழகிப் போட்டியில்” இந்தியா சார்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
3. சமீபத்தில், “ஸ்ரீ வேதாந்த தேசிகரின்” எத்தனையாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது?
- 500 வது
- 650 வது
- 750 வது
- 800 வது
Answer & Explanation
Answer: 750 வது
Explanation:
ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750 வது பிறந்த நாள் நினைவாக (750th Birth Anniversary of Sri Vedanta Desika) அஞ்சல் தலையை இந்திய அரசு சார்பில் துணைகுடியரசு தலைவர்
எம். வெங்கையா நாயுடு மே-2 அன்று வெளியிட்டார்.
ஸ்ரீ வேதாந்த தேசிகர் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். இராமனுசரின் தத்துவங்களை பரப்புவதையே முழுப்பணியாக கருதி பரப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
May 3rd Current Affairs - More Details
4. சமீபத்தில், இந்திய கடற்படையில் இருந்து ஒய்வு பெறும் போர்க்கப்பல்?
- ஐ.என்.எஸ் ராஜ்புட்
- ஐ.என்.எஸ் ரன்வீர்
- ஐ.என்.எஸ் ராணா
- ஐ.என்.எஸ் ரஞ்சித்
Answer & Explanation
Answer: ஐ.என்.எஸ் ரஞ்சித்
Explanation:
இந்திய கப்பற்படையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய “ஐ.என்.எஸ் ரஞ்சித் (INS Ranjit)” போர்க்கப்பல் மே 6 உடன் ஓய்வு பெறுகிறது.
5. “சௌரவ் கோஷால்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- ஸ்குவாஷ்
- குத்துசண்டை
- டேபிள் டென்னிஸ்
- கிரிக்கெட்
Answer & Explanation
Answer: ஸ்குவாஷ்
Explanation:
மலேசியாவின் கொலாலம்பூர் நகரில் நடைபெற்ற ஆசிய ஸ்குவாஷ் சாம்பயன்சிப் போட்டிகளின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் “சௌரவ் கோஷால்” (Saurav Ghosal) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
மேலும், பெண்கள் பிரிவில் தமிழகத்தின் “ஜோஷ்னா சின்னப்பா” (Joshna Chinappa) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்
6. சர்வதேச தீயணைப்பாளர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- மே 4
- மே 3
- மே 2
- மே 1
Answer & Explanation
Answer: மே 4
Explanation:
ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே தீயணைப்புப் படையினர் தினம் கொண்டாடி வந்தனர். 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட பெரும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும்போது 5 வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களை நினைவுகூருவதற்காக உலகம் முழுவதும் மின்னஞ்சல் மூலம் பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் மே 4 ஆம் நாள் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
More TNPSC Current Affairs
Related