Current Affairs in Tamil 4th September 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 4th September 2018. Take the quiz and improve your knowledge.

1. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைப் பெண்களுக்கு இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ள மாநிலம்?
- ராஜஸ்தான்
- குஜராத்
- தெலுங்கானா
- உத்திரபிரதேஷ்
Answer & Explanation
Answer: ராஜஸ்தான்
Explanation:
‘பாமாஷா யோஜனா’ திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு செல்போன்கள் வழங்கும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
TNPSC Group 2 Model Question Papers – Download
2. சமீபத்தில் “Banshidar” என பெயர் மாற்றப்பட்டுள்ள Nagar Untari ரயில் நிலையம் உள்ள மாநிலம்?
- ஒடிசா
- அருணாசலப்பிரதேசம்
- உத்தரகாண்ட்
- ஜார்கண்ட்
Answer & Explanation
Answer: ஜார்கண்ட்
Explanation:
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள Untari ரயில் நிலையம் மற்றும் அது இருக்கும் ஏரியா, “Banshidar” ரயில் நிலையம் மற்றும் Banshidar Nagar என பெயர் மாற்றப்பட்டுள்ளது.
3. “CBI Insider Speaks: Birlas to Sheila Dixit” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- Mahesh Rao
- Prashant Bhushan
- Shantonu Sen
- Arundhati Roy
Answer & Explanation
Answer: Shantonu Sen
4. சமீபத்தில் “தூய்மை கங்கா” திட்டதிற்கு 120 மில்லியன் யூரோவை கடனாக வழங்கியுள்ள நாடு?
- பிரான்ஸ்
- இங்கிலாந்து
- ஜெர்மனி
- இத்தாலி
Answer & Explanation
Answer: ஜெர்மனி
Explanation:
சமீபத்தில் “தூய்மை கங்கா” (National Mission for Clean Ganga) திட்டதிற்கு 120 மில்லியன் யூரோவை (990 கோடி) கடனாக வழங்கியுள்ளது. இந்த தொகை கங்கையை ஒட்டி உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த பயன்படுத்தப்படும்.
5. சமீபத்தில் காலமான “ஆர்தர் பெரேரா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- கால்பந்து
- கிரிக்கெட்
- ஹாக்கி
- கோல்ப்
Answer & Explanation
Answer: கால்பந்து
Explanation:
முன்னாள் மகாராஷ்டிரா கால்பந்து வீரரான “ஆர்தர் பெரேரா” செப்டம்பர் 3 அன்று காலமானார்.
6. சமீபத்தில், ‘மில்-பன்சே’ என்ற திட்டத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- மேற்குவங்கம்
- கர்நாடகா
- மத்திய பிரதேஷ்
- மகாராஷ்டிரா
Answer & Explanation
Answer: மத்திய பிரதேஷ்
Explanation:
குழந்தைகள் மத்தியில் கல்வி மற்றும் கற்றல் விழிப்புணர்வை உருவாக்குவதை குறிக்கோளாக கொண்ட ‘மில்-பன்சே’ (Mil -Banche) என்ற திட்டத்தை மத்திய பிரதேஷ அரசு துவங்கியுள்ளது.
7. சமீபத்தில் “ஜெபி” என்ற புயலால் பாதிக்கப்பட்ட நாடு ?
- ஜப்பான்
- தென்கொரியா
- மொரீசியஸ்
- சீனா
Answer & Explanation
Answer: ஜப்பான்
Explanation:
ஜப்பானின் மேற்குப் பகுதியை ஜெபி ((jebi)) என்று பெயரிடப்பட்ட பெரும் புயல் சமீபத்தில் தாக்கியது. ஜெபி என்பதற்கு கொரிய மொழியில் விழுங்குதல் என்று பொருள்.
8. சமீபத்தில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள வீரர்?
- பென் ஸ்டோக்ஸ்
- அலய்ஸ்டர் குக்
- ஜோ ரூட்
- ஜானி பேர்ஸ்டோவ்
Answer & Explanation
Answer: அலய்ஸ்டர் குக்
Explanation:
இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அலய்ஸ்டர் குக் சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் இந்திய அணியின் பத்திரிநாத் ஓய்வை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
9. “அஞ்சும் முட்கில்” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
- ஹாக்கி
- துப்பாக்கி சுடுதல்
- பாட்மிட்டன்
- குத்துசண்டை
Answer & Explanation
Answer: துப்பாக்கி சுடுதல்
Explanation:
அஞ்சும் முட்கில் மற்றும் அபூர்வி சந்தேலா இருவரும் இப்போதே, 2020 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். தென் கொரியாவில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாடியதினால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் அஞ்சும் முட்கில் வெள்ளி பதக்கத்தையும், அபூர்வி சந்தேலா 4 இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
10. 19 வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற உள்ள நாடு?
- தென் கொரியா
- இந்தோனிசியா
- சீனா
- ஜப்பான்
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 19ஆவது பதிப்பு வரும் 2022 ஆண்டு செப்டம்பர் 10-25 வரை சீனாவின் ஹாங்ஜோவ் நகரில் நடைபெற உள்ளது.
- 17th- தென் கொரியா (2014)
- 18th- இந்தோனிசியா (2018)
- 19th- சீனா (2022)
- 20th- ஜப்பான் (2026)
More TNPSC Current Affairs
Related