Current Affairs in Tamil 5th August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 5th August 2018. Take the quiz and improve your knowledge.

1. ஹிந்தி மொழியில் பேசும் உலகின் முதல் மனித ரோபோவின் பெயர்?
- மித்ரா
- ராஷ்மி
- சோஃபியா
- கெம்பா
Answer & Explanation
Answer: ராஷ்மி
Explanation:
“ராஷ்மி” (Rashmi) என்ற உலகின் முதல் இந்தி பேசும் ரோபோவை, ராஞ்சியைச் சேர்ந்த “ரஞ்சித் ஸ்ரீவாட்சா” என்பர் உருவாக்கியுள்ளார்.
மேலும் சில.,
- மித்ரா – உலகத் தொழில்முனைவோர் மாநாட்டின் பொது இவான்கா டிரம்ப்-ஐ வரவேற்ற ரோபோ
- சோஃபியா – உலகில் முதன்முதலில், குடியுரிமை பெற்ற ரோபோ (சவூதி அரேபியா)
- கெம்பா – பெங்களூர் விமான நிலையத்தில் கடந்த மார்ச் முதல் செயல்பட்டு வரும் ரோபோ
2. சமீபத்தில், இந்திய தொழில் வர்த்தக சபையின்(FICCI) பெண்கள் பிரிவு அறிமுகபடுத்தியுள்ள மொபைல் செயலி?
- WOW
- FIC
- WOM
- CLEAN
Answer & Explanation
Answer: WOW
Explanation:
இந்திய தொழில் வர்த்தக சபையின்(FICCI) பெண்கள் பிரிவு, “WOW” [Wellness For Woman] என்ற ஒரு மொபைல் செயலியை சென்னையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
நோக்கம்: பெண்களின் சுகாதாரத்தில் விழிப்புணர்வை உருவாக்குதல்
3. சமீபத்தில் நடந்த பிஜி சர்வதேச கோல்ப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- யாஷ் சோப்ரா
- அதிதி அசோக்
- முகேஷ்குமார்
- ககன்ஜீத் புல்லார்
Answer & Explanation
Answer: ககன்ஜீத் புல்லார்
Explanation:
இந்தியாவின் “ககன்ஜீத் புல்லார்” (Gaganjeet Bhullar) பிஜி சர்வதேச கோல்ப் போட்டியில் (Fiji International Golf Tournament) சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
4. சமீபத்தில் எந்த நாட்டு அறிஞர்கள் ஒற்றை குரோமோசோம் ஈஸ்ட்ஸை கண்டுபிடித்துளனர்?
- ஜப்பான்
- இந்தியா
- சீனா
- இஸ்ரேல்
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
5. உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர்?
- பிவி சிந்து
- அகேனா யமகுச்சி
- கரோலினா மரின்
- நோசோமி ஒக்குஹரா
Answer & Explanation
Answer: கரோலினா மரின்
Explanation:
சீனாவின் நாஞ்ஜிங் நகரில் நடைபெற்ற BWF உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றார். கரோலினா மரினுடன் இறுதி போட்டியில் விளையாடிய பிவி சிந்து தோல்வியடைந்து வெள்ளி பதக்கத்தை வென்றார். [பிவி சிந்து அரையிறுதியில் ஜப்பான் வீராங்கனை அகேனா யமகுச்சியுடன் மோதினார்]

ஆண்கள் பிரிவில் ஜப்பானின் Kento Momota சாம்பியன் பட்டம் வென்றார்.
6. முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2018 – இல் முதலிடம் வகிக்கும் மாநிலம்?
- ஆந்திர பிரதேஷ்
- தெலுங்கானா
- டெல்லி
- தமிழ்நாடு
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியல் 2018 (NCAER State Investment Potential Index [N-SIPI]) -ல் புது தில்லி முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன.
7. சமீபத்தில் தீன்தயாள் உபாத்யாயா என பெயர் மாற்றப்பட்டுள்ள ரயில் நிலையம்?
- முகல்சராய் ரயில் நிலையம்
- எல்பின்ஸ்டோன் ரயில் நிலையம்
- ஆந்தேரி ரயில் நிலையம்
- மஹாராஜ் ரயில் நிலையம்
Answer & Explanation
Answer: முகல்சராய் ரயில் நிலையம்
Explanation:
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முகல்சராய் ரயில் நிலையம் ஆனது தீனதயாள் உபாத்யாயா ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
தீனதயாள் உபாத்யாயா, பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக(RSS) 1953 முதல் 1968 வரை பதவி வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் சில.,
கடந்த ஜூலை மாதத்தில் மும்பையின் எல்பின்ஸ்டோன் ரயில் நிலையதிற்கு பிரபாதேவி ரயில் நிலையம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
கடந்த ஆண்டு குஜராத் மாநிலத்தில் உள்ள காண்ட்லா துறைமுகத்தின் பெயர் தீனதயாள் துறைமுகம் என பெயர் மாற்றப்பட்டது குறிப்பிடதக்கது.
8. சமீபத்தில் “Swachha Meva Jayate” என்ற பிரச்சார இயக்கத்தை துவங்கியுள்ள மாநிலம்?
- உத்திர பிரதேஷ்
- குஜராத்
- தெலுங்கானா
- கர்நாடகா
Answer & Explanation
Answer: கர்நாடகா
Explanation:
கிராமப்புற தூய்மை மற்றும் சுகாதாரம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்வச்சா மேவா ஜெயேட் ( “Swachha Meva Jayate” ) என்ற பிரச்சார இயக்கத்தை கர்நாடகா அரசு துவங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் ஸ்வாஷ் சர்வ்க்சன் கிராமின் [Swachh Survekshan Grameen 2018] 2018 உடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது.
9. சமீபத்தில் நடைபெற்ற “உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில்” வென்ற அணி?
- அயர்லாந்து
- நெதர்லாந்து
- ஸ்பெயின்
- ஆஸ்திரேலியா
Answer & Explanation
Answer: நெதர்லாந்து
Explanation:
லண்டனில் நடைபெற்ற “உலக கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில்” நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 8வது முறையாக நெதர்லாந்து அணி இந்த கோப்பையை வெல்கிறது. அயர்லாந்து அணி இரண்டாவது இடத்தையும், ஸ்பெயின் அணி மூன்றாவது இடத்தையும், ஆஸ்திரேலியா நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த தொடரில், கால் இறுதி வரை முன்னேறிய இந்தியா 8வது இடம் பிடித்தது.
More TNPSC Current Affairs
Related