TNPSC Current Affairs Question and Answer in Tamil 5th December 2018

Current Affairs in Tamil 5th December 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 5th December 2018. Take the quiz and improve your knowledge.



1. சமீபத்தில் One Card என்ற ‘பயண அட்டையை’ அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு?

  1. ஆந்திரப்பிரதேசம்
  2. டெல்லி
  3. கர்நாடகா
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: டெல்லி

Explanation:

ரயில், பேருந்து போன்ற அனைத்து அரசு போக்குவரத்துகளுக்குமான ஒருங்கிணைந்த ஒரே ‘பயண அட்டையை’ தில்லி அரசு “One Card” என்ற பெயரில்  அறிவித்துள்ளது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2.  ”சின்யூ மைத்ரி – 18” என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையேயான விமானப்படை பயிற்சி ஆகும்?

  1. அமெரிக்கா
  2. சீனா
  3. சிங்கப்பூர்
  4. ஜப்பான்
Answer & Explanation
Answer: ஜப்பான்

Explanation:

“SHINYUU Maitri-18” என்ற பெயரில்  இந்தியா மற்றும் ஜப்பான் விமானப்படைகளின் ஐந்து நாள் கூட்டு இராணுவப்பயிற்சி உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ரா நகரில் டிசம்பர்-3 முதல் டிசம்பர்-7 வரை நடைபெறுகிறது.

மேலும்.,

Ex Cope India-18  என்ற பெயரில் இந்தியா மற்றும் அமெரிக்க விமானப்படைகளின் கூட்டு இராணுவ பயிற்சி ஆனது மேற்கு வங்காளத்தின் காலைகுண்டா (Kalaikunda) மற்றும் பனகார்க் (Panagarh) விமானப்படைத் தளங்களில் டிசம்பர்-3 முதல் டிசம்பர்-14 வரை நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையே “கொங்கன் 18” என்ற பெயரில் கடற்படை பயிற்சி கோவாவில் நவம்பர் 28 அன்று துவங்கி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

3. “How India Sees the World” என்ற புத்தகத்தை எழுதியவர்?

  1. ஜுபேன் கார்க்
  2. ஷியாம் சரண்
  3. ஜெயந்தி லலிதா
  4. அமித் பாரத்வாஜ்
Answer & Explanation
Answer: ஷியாம் சரண்

4. தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் செயற்கைக் கோள்?

  1. ExseedSAT
  2. WildBlue
  3. SpaceX78
  4. IndSAT
Answer & Explanation
Answer: ExseedSAT

Explanation:

மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனமான ‘எக்ஸீட் ஸ்பேஸ்’ (Exseedspace) ரூ.2 கோடி மதிப்பில் ”எக்‌ஸீட் சாட்” (ExseedSAT) என்ற செயற்கைக் கோளை உருவாகியுள்ளது.

இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ (SpaceX) நிறுவனத்தினால் டிசம்பர் 3 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

5. உலக மண் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. 3rd டிசம்பர்
  2. 4th டிசம்பர்
  3. 5th டிசம்பர்
  4. 6th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 5

Explanation:

கருப்பொருள்: Be the Solution to Soil Pollution

6. ”இந்தியா தண்ணீர் தாக்கத்திற்கான கூடுகை 2018” நடைபெறும் இடம்?

  1. ஹைதரபாத்
  2. பெங்களூர்
  3. கொல்கத்தா
  4. புது தில்லி
Answer & Explanation
Answer: புது தில்லி

Explanation:

தேசிய கங்கை நதி சுத்திகரிப்பு திட்டம் ( National Mission for Clean Ganga (NMCG) ) மற்றும் ‘கங்கை படுகை மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி மையம்” (Centre for Ganga River Basin Management and Studies (cGanga) ) ஆகியவை இணைந்து, புது தில்லியில் ”India Water Impact Summit-2018” -ஐ  டிசம்பர் 5முதல் 7வரை நடத்துகின்றன.

7.  சமீபத்தில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் YONO என்ற  டிஜிட்டல் தளத்திற்கான விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. தீபா கர்மாக்கர்
  2. ஸ்வப்னா வர்மன்
  3. பி. வி. சிந்து
  4. ராணி ராம்பால்
Answer & Explanation
Answer: ஸ்வப்னா வர்மன்

Explanation:

SBI-இன் ஒருங்கிணைந்த டிஜிட்டல் வங்கி தளத்திற்கான விளம்பர தூதராக ஸ்வப்னா வர்மன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2018-ல் ‘ஹெப்தத்லான்’ (Heptathlon) பிரிவில் தங்க பதக்கத்தை வென்றவராவர்.

8. சமீபத்தில், சோயுஸ்-11 என்ற விண்கலத்தை, விண்ணுக்கு அனுப்பிய நாடு?

  1. ரஷ்யா
  2. சீனா
  3. இங்கிலாந்து
  4. அமெரிக்கா
Answer & Explanation
Answer: ரஷ்யா

Explanation:

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மூன்று விண்வெளி வீரர்களை பயணத்தை ரஷியாவின் ‘சோயஸ்’ விண்கலம் (Soyuz spacecraft) ,  கொண்டு சென்றது.

இந்த விண்கலத்தில், ரஷியாவின் Oleg Kononenko, நாசாவின் Anne McClain மற்றும் கனடாவின் David Saint Jacques ஆகியோர் பயணிக்கிறார்கள். இவர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் 6.5 மாதங்கள் தங்கியிருந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளனர்.

9.  சமீபத்தில், யாருக்கு பேலன் டி’ஆர் (Ballon d’Or ) விருது வழங்கப்பட்டது?

  1. லியோனல் மெஸ்ஸி
  2. ரொனால்டோ
  3. லுகா மொட்ரிக்
  4. ஜார்ஜ் வியா
Answer & Explanation
Answer: லுகா மொட்ரிக்

Explanation:

பிரான்ஸ் கால்பந்து சங்கம் சார்பில் வழங்கப்படும் சிறந்த கால்பந்து வீரருக்க்கான  பேலன் டி ஆர்- விருதை குரோஷிய கால்பந்து அணி கேப்டன் லுகா மொட்ரிக் வென்றுள்ளார்.

பெண்கள் பிரிவில் அடா ஹெகெர்பேர்க்கு இவ்விருது வழங்கப்பட்டது.

10. சமீபத்தில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள வீரர்?

  1. பாபர் அசாம்
  2. முகமது முஸ்தாக்
  3. கவுதம் கம்பீர்
  4. ராமச்சந்திரன்
Answer & Explanation
Answer: கவுதம் கம்பீர்

Explanation:

டிசம்பர் 6 அன்று ஆந்திரத்துக்கு எதிராக தொடங்கும் ரஞ்சி கோப்பை ஆட்டத்துடன் கெளதம் கம்பீர் அனைத்து வகையான கிரிக்கெட் ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

More TNPSC Current Affairs



Leave a Comment