2. 2018ஆம் ஆண்டுக்கான “KAZIND” என்ற கூட்டு இராணுவ பயிற்சி நடைபெற்ற உள்ள இடம்?
Bakloh Belt, Himachal Pradesh
Karaganda Region, Kazakhstan
Otar region, Kazakhstan
Vairengte, Mizoram
Answer & Explanation
Answer: Otar region, Kazakhstan
Explanation:
இந்தியா மற்றும் கசகஸ்தான் இராணுவங்கள் இணைந்து மேற்கொள்ளும் 3வது “KAZIND” என்ற கூட்டு இராணுவ பயிற்சி கசகஸ்தானின் Otar region-ல் வரும் செப்டம்பர் 10 முதல் 23 வரை நடைபெற உள்ளது.
3. “மீசா (Meesha)” என்ற புத்தகத்தை எழுதியவர்?
கனேஷ் மூர்த்தி
எஸ்.ஹரிஷ்
மனோ செல்வம்
வைரமுத்து
Answer & Explanation
Answer: எஸ்.ஹரிஷ்
Explanation:
ஹிந்து பெண்கள் கோவிலுக்கு செல்வதை, தரக்குறைவான வகையில் சித்தரிக்கும், ‘மீசா’ மலையாள புத்தகத்துக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
4. சமீபத்தில் எத்தனை பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது?
55
52
42
45
Answer & Explanation
Answer: 45
Explanation:
துணை குடியரசு தலைவர் வெங்கைய்யா நாயுடு 45 ஆசிரியர்களுக்கு, தேசிய நல்லாசிரியர் விருதை செப்டம்பர் 5 அன்று வழங்கினார்.
தமிழகத்தில் இருந்து ஆசிரியை ஸதி (கோவை) ஒருவருக்கு மட்டுமே தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5. உலக ஆசிரியர்கள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
5th செப்டம்பர்
5th அக்டோபர்
6th செப்டம்பர்
6th அக்டோபர்
Answer & Explanation
Answer: 5th அக்டோபர்
Explanation:
உலக ஆசிரியர்கள் தினம் or சர்வதேச ஆசிரியர்கள் தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் 6 அன்று அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில், தேசிய ஆசிரியர் தினமானது, முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.
6. ‘எகனா’ என்ற கிரிக்கெட் மைதானம் உள்ள மாநிலம்?
மேற்குவங்கம்
கர்நாடகா
உத்திர பிரதேஷ்
மகாராஷ்டிரா
Answer & Explanation
Answer: உத்திர பிரதேஷ்
Explanation:
இதுவரை உள்ளூர் போட்டிகள் மட்டும் நடைபெற்று வந்த ‘எகனா'(Ekana) கிரிக்கெட் மைதானதில் விரைவில் சர்வதேச போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் முதல் சர்வதேச போட்டியாக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது.
இது உத்திர பிரதேஷ மாநிலம் லக்னோவில் உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே கான்பூர் கிரிக்கெட் மைதானம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
7. சமீபத்தில் தேசிய தூய்மை பள்ளி விருதுக்கு தேர்வுசெய்யப்பட்ட பள்ளிகளில், முதலிடம் வகிக்கும் தொடக்கப்பள்ளி?
ரெட்டியார்பட்டி
கீச்சாங்குப்பம்
கூனிச்சம் பட்டு
எ.ஆவரம்பட்டி
Answer & Explanation
Answer: கூனிச்சம் பட்டு
Explanation:
2017-18-ம் ஆண்டுக்கான தேசிய தூய்மைப் பள்ளி விருதுக்கு தேர்வாகியுள்ள 52 பள்ளிகளில் புதுச்சேரியை சேர்ந்த கூனிச்சம் பட்டு அரசுத் தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது.
இந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த எ.ஆவரம்பட்டி அரசு கள்ளர் பள்ளி மட்டும் தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ளது.
8. சமீபத்தில், காபி விவசாயிகளுக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள மொபைல் செயலி?
Coffee Connect
Coffee Krishi
Kishan Coffee
Coffee India 2018
Answer & Explanation
Answer: Coffee Connect
Explanation:
காபி பயிரிடும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மத்திய அரசு Coffee Connect என்ற மொபைல் செயலி மற்றும் Coffee KrishiTharanga என்ற இணைய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதனை மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்தார்.
9. “ஜெயவீனா” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?
குதிரை ஏற்றம்
துப்பாக்கி சுடுதல்
பாட்மிட்டன்
நீச்சல்
Answer & Explanation
Answer: நீச்சல்
Explanation:
72-வது மாநில சீனியர் நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியின் பெண்கள் பிரிவில் ஜெயவீனாவும், ஆண்கள் பிரிவில் நெல்லை வீரர் எமில் ராபின் சிங்கும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
ஜெயவீனா, நடிகர் தலைவாசல் விஜய் மகள் என்பது குறிப்பிடதக்கது.
பதக்கபட்டியல்
400 மீட்டர் பிரிஸ்டைல் – எமில் ராபின் சிங்
200 மீட்டர் பேக் ஸ்டிரோக் – சேது மாணிக்கவேல்
100 மீட்டர் பிரிஸ்டைல் மற்றும் 50 மீட்டர் பட்டர்பிளை – ஜெயவீனா
400 மீட்டர் பிரிஸ்டைல் – பாவிகா துகார்
10. சமீபத்தில், BSNL நிறுவனத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர்?
ஹிமாதாஸ்
நிரஜ் சோப்ரா
மேரிகோம்
பி.வி சிந்து
Answer & Explanation
Answer: மேரிகோம்
Explanation:
BSNL நிறுவனத்தின் விளம்பர தூதராக, குத்துசண்டை வீராங்கனை மேரிகோம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு விளம்பர தூதராக செயல்படுவார்.