TNPSC Current Affairs Question and Answer in Tamil 5th to 8th May 2019

Current Affairs in Tamil 5th to 8th May 2019

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 5th May to 8th 2019. Take the quiz and improve your Current Affairs knowledge.

TNPSC Current Affairs in Tamil 5th May 2019

1. சமீபத்தில், யாருக்கு பிசி சந்திர புராஷ்கர் விருது வழங்கப்பட்டது?

  1. இராஜேந்திர குமார் ஜோஸி
  2. தேவி பிரசாத் ஷெட்டி
  3. அருணாச்சலம் முருகானந்தம்
  4. சீமா மேத்தா
Answer & Explanation
Answer: தேவி பிரசாத் ஷெட்டி

Explanation:

இந்தியாவின் மிகவும் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். தேவி பிரசாத் ஷெட்டி அவர்களுக்கு பிசி சந்திர புராஷ்கர் விருது (PC Chandra Purashkaar) வழங்கப்பட்டது.

TNPSC Group 2A Model Question Papers – Download

2. சமீபத்தில், 24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் செயல்படுவதற்கு எதுவான சட்டமசோதாவை நிறைவேற்றியுள்ள மாநிலம்?

  1. குஜராத்
  2. மகராஷ்டிரா
  3. கர்நாடகா
  4. தெலுங்கானா
Answer & Explanation
Answer: குஜராத்

Explanation:

24 மணி நேரமும் கடைகள் மற்றும் வணிக ஸ்தாபனங்கள் செயல்படுவதற்கு எதுவான Gujarat Shops and Establishments Act, 2019 என்ற சட்டமசோதாவை குஜராத் சட்டமன்றம் நிறைவேற்றியுள்ளது.

3. சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்?

  1. மும்பை
  2. கொல்கத்தா
  3. பாட்னா
  4. பரிபாடா
Answer & Explanation
Answer: மும்பை

Explanation:

மும்பையின் சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் (Sanjay Gandhi National Park (SGNP) ) கடைசியாக கண்டறியப்பட்ட வெள்ளைப் புலியான பாஜிராவ் (Bajirao) 18 வயதில் காலமானது.

ரேணுகா மற்றும் சித்தார்த் என்ற புலிகளுக்கு 2001 ம் ஆண்டு பிறந்தது பாஜிராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சமீபத்தில், யாருக்கு வி.கே கிருஷ்ண மேனன் விருது வழங்கப்பட்டது?

  1. ரிச்சர்ட் பவர்
  2. மகேந்திர சௌத்ரி
  3. ஜி. டி. ராபர்ட் கோவெண்டர்
  4. மர்லின் நெல்சன்
Answer & Explanation
Answer: ஜி. டி. ராபர்ட் கோவெண்டர்

Explanation:

காலனியாதிக்கத்திற்கு எதிராக செயல்பட்ட பத்திரிகையாளர் (contribution as a pioneer of decolonised journalism) ‘ஜி. டி. ராபர்ட் கோவெண்டர்’ (G D ‘Robert’ Govender)அவர்களுக்கு 2019ஆம் ஆண்டுக்கான வி.கே கிருஷ்ண மேனன் விருது வழங்கப்பட்டது.

இவர் இந்தியாவை பூர்விகமாக கொண்ட தென்ஆப்பிரிகா வாழ் பத்திரிகையாளர் ஆவார்.

May 4th Current Affairs - More Details

5. சமீபத்தில், இந்திய கடற்படையில் இணைக்ப்பட்ட நீர் மூழ்கி போர்க்கப்பல்?

  1. ஐ.என்.எஸ் காந்தேரி
  2. ஐ.என்.எஸ் கராஞ்ச்
  3. ஐ.என்.எஸ் வேலா
  4. ஐ.என்.எஸ் ரஞ்சித்
Answer & Explanation
Answer: ஐ.என்.எஸ் வேலா

Explanation:

பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும், ‘ஸ்கார்பியன்’ ரக நீர்மூழ்கி கப்பல்களில், நான்காவது கப்பலான, ஐ.என்.எஸ் வேலா சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டிலேயே, இந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்படுகிறது. மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, ‘மாசகோன் டாக்யார்ட்’ நிறுவனதில் இந்த நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமான பணி நடைபெற்றது.

இதுவரை, கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய ஸ்கார்பியன்’ ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

6. SHiELD (Self-Protect High Energy Laser Demonstrator) என்பது பின்வரும் எந்த நாட்டு இராணுவத்துடன் தொடர்பானது?

  1. ஜப்பான்
  2. ரஷ்யா
  3. சீனா
  4. அமெரிக்கா
Answer & Explanation
Answer: அமெரிக்கா

Explanation:

லேசர் கற்றை மூலம் பல்முனை தாக்குதல் நடத்தும் அமைப்பான SHiELD-ஐ அமெரிக்க விமானப்படை சமீபத்தில் வெற்றிகரமாக சோதனை செய்தது.

அதாவது, இந்த SHiELD அமைப்பானது துப்பாக்கி போன்ற ஆயுதங்களுக்கு மாற்றாக லேசர் கற்றை பயன்படுத்தி எதிரின் விமானங்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

7. சமீபத்தில், G-7 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு நடைபெற்ற இடம்?

  1. பிரிட்டன்
  2. பிரான்ஸ்
  3. இத்தாலி
  4. கனடா
Answer & Explanation
Answer: பிரான்ஸ்

Explanation:

G-7 நாடுகளின் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் மாநாடு பிரான்ஸின் மெட்ஸ் நகரில் மே-5 மற்றும் 6 தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் குறிப்பாக காலநிலை நெருக்கடி பற்றி விவாதிக்கப்பட்டது.

மேலும், சமீபத்தில் “இங்கிலாந்து” பாராளுமன்றம் (UK) சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அவசரநிலையை (Environment and Climate Emergency) பிரகனபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

8. சமீபத்தில், “Momo-3” என்ற ராக்கெட்டை ஏவிய நாடு?

  1. ஜப்பான்
  2. ரஷ்யா
  3. சீனா
  4. அமெரிக்கா
Answer & Explanation
Answer: ஜப்பான்

Explanation:

ஜப்பானின் முதல் தனியார் ராக்கெட்டான “Momo-3” விண்வெளிக்கு வெற்றி கரமாக ஏவப்பட்டது. இது 120 கி.மீ பறந்து சாதனை படைத்தது.

இதனை Interstellar Technology Inc. என்ற தனியார் நிறுவனம் உருவாகியுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் இரண்டு ராக்கெட்டுகளான “Momo-1 and Momo-2” தோல்வியை சந்தித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

9. “கௌரவ் சோலங்கி” பின்வரும் எந்த விளையாட்டுடன் தொடர்பானவர்?

  1. ஸ்குவாஷ்
  2. குத்துசண்டை
  3. டேபிள் டென்னிஸ்
  4. கிரிக்கெட்
Answer & Explanation
Answer: குத்துசண்டை

Explanation:

போலந்தின் வார்சா நகரில் நடைபெற்ற 36வது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மொத்தம் 6 பதக்கங்களை வென்றது.

இந்தியா பெற்ற பதக்கங்கள்

  1. கௌரவ் சோலங்கி -தங்கம்
  2. மணீஷ் கௌஷிக் – தங்கம்
  3. முகம்மது ஹுஸமுடின்-வெள்ளி
  4. அங்கிட் கதானா -வெண்கலம்
  5. மண்டிப் ஜங்ரா -வெண்கலம்
  6. சஞ்சீத் -வெண்கலம்

10. சர்வதேச பேறுகால உதவியாளர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. மே 4
  2. மே 5
  3. மே 6
  4. மே 5
Answer & Explanation
Answer: மே 5

Explanation:

International Midwives Day – மே 5 அன்று அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கருத்துரு=“Midwives: Defenders of Women’s Rights“

More TNPSC Current Affairs

Leave a Comment