TNPSC Current Affairs Question and Answer in Tamil 6th August 2018

Current Affairs in Tamil 6th August 2018

Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 6th August 2018. Take the quiz and improve your knowledge.



TNPSC Current Affairs 6th August 2018 | U-20 Foot ball world Cup

1. சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ராஜிவ் சர்மா
  2. ஹுலுவாடி ஜி ரமேஷ்
  3. ன்.ஹெச்.பட்டீல்
  4. இந்திரஜித் மஹந்தி
Answer & Explanation
Answer: ஹுலுவாடி ஜி ரமேஷ்

Explanation:

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வந்த  விஜயா கே தஹுல்ரமணி புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார். அதுவரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ஜி ரமேஷ்  (ஆகஸ்ட் 6) நியமிக்கப்பட்டுள்ளார்

2. ஹிரோசிமா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?

  1. ஆகஸ்ட் 4
  2. ஆகஸ்ட் 5
  3. ஆகஸ்ட் 6
  4. ஆகஸ்ட் 7
Answer & Explanation
Answer: ஆகஸ்ட் 6

Explanation:

1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை அமெரிக்கா ஜப்பானின் ஹிரோசிமா மீது வீசியது. இதில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இது போன்ற நிகழ்வு மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.

3. சமீபத்தில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோருக்கான (யூ-20) கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி?

  1. அர்ஜென்டினா
  2. ஸ்பெயின்
  3. ஜெர்மனி
  4. இந்தியா
Answer & Explanation
Answer: இந்தியா

Explanation:

ஸ்பெயின் நாட்டில் நடந்த 20 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் காட்டிஃப் கோப்பைக்கான (COTIF-Cup) கால்பந்து போட்டியில் 6 முறை கோப்பை வென்ற அர்ஜென்டினா அணியை இந்தியா வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

போட்டியின் 54வது நிமிடத்தில் இந்திய அணியின் ஜாதவுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டதால் 10 வீரர்களுடன் விளையாடி கோப்பையை வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

4. சமீபத்தில், பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளவர்?

  1. ரமோன் லகூர்தா
  2. ஜேம்ஸ் சதர்லெண்ட்
  3. ரூபர்ட் ஸ்டாட்லெர்
  4. சாலி எஸ்.பரேக்
Answer & Explanation
Answer: ரமோன் லகூர்தா

Explanation:

கடந்த 12 ஆண்டுகளாக தலைமை செயல் அதிகாரியாக இருந்து வரும் இந்திரா நூயி அக்டோபரில் பதவி விலக உள்ளதை தொடர்ந்து, புதிய தலைமை செயல் அதிகாரியாக ரமோன் லகூர்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

5. ‘Maitree 2018’ என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையேயான கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்?

  1. இஸ்ரேல்
  2. தாய்லாந்து
  3. இந்தோனேசியா
  4. சிங்கப்பூர்
Answer & Explanation
Answer: தாய்லாந்து

Explanation:

இந்தியா மற்றும் தாய்லாந்து நாடுகளுக்கு இடையே ‘ மைத்ரி (Maitree 2018)’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சி தாய்லாந்தில் வரும் ஆகஸ்ட் 6 முதல் 14 நாட்கள் நடைபெறவுள்ளது.

6. பசு பாதுகாவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க உள்ள மாநிலம்?

  1. ஆந்திர பிரதேஷ்
  2. தெலுங்கானா
  3. உத்தரகாண்ட்
  4. உத்திர பிரதேஷ்
Answer & Explanation
Answer: உத்தரகாண்ட்

Explanation:

7. உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

  1. தெலுங்கானா
  2. கர்நாடகா
  3. ஆந்திர பிரதேஷ்
  4. தமிழ்நாடு
Answer & Explanation
Answer: ஆந்திர பிரதேஷ்

Explanation:

புதுப்பிக்க முடியாத ஆற்றல் மூலங் களைப் பயன்படுத்தி பேட்டரிகள் தயாரிப்பதற்கு பதிலாக புதுப்பிக் கத்தக்க வளங்களைப் பயன் படுத்தி ஆற்றலை சேமிப்பதை ஊக்குவிக்கும் வகையில் உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை Bharat Energy Storage Technology (BEST) நிறுவனம் அமைத்துள்ளது.

8. இந்தியாவின் முதல் மொபைல் பரிமாற்ற மண்டலம் எங்கு அமைக்கப்பட உள்ளது?

  1. நொய்டா
  2. புனே
  3. கொல்கத்தா
  4. அமராவதி
Answer & Explanation
Answer: நொய்டா

Explanation:

இந்தியாவின் முதல் மொபைல் பரிமாற்ற மண்டலம் (Mobile Exchange Zone) உத்திர பிரதேச மாநிலம் ‘நொய்டாவில்’ (Noida) அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடிகல்லை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

9. சமீபத்தில் எந்த திட்டத்தின் கீழ் புதிதாக 122 ஆராய்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

  1. PMRF
  2. SAMPRITI
  3. IMPRINT-2
  4. IMPRINT-I
Answer & Explanation
Answer: IMPRINT-2

Explanation:

IMPRINT- Impacting Research Innovation and Technology

இம்பிரிண்ட் இந்தியா-2 (IMPRINT-2) திட்டத்தின் கீழ் புதிதாக 122 ஆராய்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 122 ஆராய்ச்சி திட்டங்களுக்காக 112 கோடி ரூபாய் ஒதுக்கப்படுள்ளது.

தேசிய தொழில்நுட்ப சவால்களை எதிர்கொள்ளும் வகையில், ஐஐடி(IIT), ஐஐஎஸ்சி(IISC) கல்வி நிறுவனங்கள் இணைந்து, இம்பிரிண்ட் இந்தியா திட்டம் 2015-இல் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

IMPRINT- 1 கீழ் ஏற்கனவே 142 ஆராlய்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

More TNPSC Current Affairs

TNPSC Current Affairs in Tamil – 5th August 2018
TNPSC Current Affairs in Tamil – 4th August 2018
TNPSC Current Affairs in Tamil – 3rd August 2018



1 thought on “TNPSC Current Affairs Question and Answer in Tamil 6th August 2018”

Leave a Comment