Current Affairs in Tamil 6th December 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 6th December 2018. Take the quiz and improve your knowledge.
1. 2018-ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் ?
- பூமணி
- எஸ். ராமகிருஷ்ணன்
- இ. ரா இரணியன்
- முத்து வீரப்பன்
Answer & Explanation
Answer: எஸ். ராமகிருஷ்ணன்
Explanation:
2018-ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ள சஞ்சாரம் என்ற நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நூலானது நாகஸ்வர கலைஞர்களின் வாழ்க்கையை தெள்ள தெளிவாக படம் பிடித்து காட்டும் காவியமாக வடிக்கப்படுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிற மொழி சாகித்ய அகாதெமி விருதுகள்.,
மலையாள எழுத்தாளர் எஸ். ரமேஷ் நாயரின் குரு பௌர்ணமி எனும் கவிதைப் படைப்பு, தெலுங்கு மொழியில் கோலகலுரி எனோக் எழுதிய விமர்ஷினி எனும் கட்டுரை, சம்ஸ்கிருத மொழியில் ரமா காந்த் சுக்லா எழுதிய மாமா ஜனனி கவிதைப் படைப்பு, கன்னடத்தில் கே.ஜி. நாகராஜப்பா எழுதிய அனுஷ்ரேனி- யஜமானிக்கே எனும் தலைப்பிலான இலக்கிய விமர்சனப் படைப்பு ஆகியவற்றுக்கும் சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. சமீபத்தில் ”பீத்தா” (PEETHA) என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம்?
- ஒடிஷா
- பீகார்
- ராஜஸ்தான்
- குஜராத்
Answer & Explanation
Answer: ஒடிஷா
Explanation:
சமீபத்தில் ”பீத்தா” (PEETHA) என்ற திட்டத்தை ஒடிஷா மாநிலஅரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் “அரசு திட்டங்களைப் பற்றிய பொறுப்புடைமை மற்றும் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்வது” ஆகும்.
PEETHA – Peoples Empowerment Enabling Transparency and Accountability
3. சமீபத்திய கணக்கின்படி “பிரசாத் திட்டத்தின்” கீழுள்ள புனிதத் தலங்களின் எண்ணிக்கை?
- 41
- 54
- 62
- 39
Answer & Explanation
Answer: 41
Explanation:
உத்தர்காண்டிலுள்ள “யமுனோத்திரி”, மத்திய பிரதேசத்திலுள்ள “அமர்கண்டக்” மற்றும் ஜார்க்கண்டிலுள்ள “பரசாந்த்” ஆகியவை புதிதாக சேர்க்கப்படத்தை தொடர்ந்து “பிரசாத் திட்டத்தின்” கீழுள்ள புனிதத் தலங்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்துள்ளது.
“பிரசாத்” (PRASAD) திட்டம் என்பது, நாடெங்கிலுமுள்ள புனிதத் தலங்களை மேம்படுத்த மத்திய அரசினால் 2014-2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
PRASAD: Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive
4. சமீபத்தில், தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பிற்கு, நியமிக்கப்பட்டுள்ள இந்தியர்?
- மனிஷா சிங்
- மினால் பட்டேல்
- ஷமிலா படோஹி
- லியோ வராத்கர்
Answer & Explanation
Answer: ஷமிலா படோஹி
Explanation:
தென்னாப்பிரிக்க நாட்டின் தேசிய குற்ற விசாரணை அமைப்பிற்கு முதல் பெண் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷமிலா படோஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
5. 2018-19ம் நிதியாண்டின் ரிசர்வ் வங்கியின் 5வது நிதி கொள்கையீன் படி, ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம்?
- 6.50%
- 6.25%
- 5.75%
- 4.75%
Answer & Explanation
Answer: 6.25%
Explanation:
சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள 2018-19ம் நிதியாண்டுக்கான ரிசர்வ் வங்கியின் 5வது நிதி கொள்கைபடி, ரெப்போ வட்டி விகிதம் 6.50% என்ற தற்போதைய நிலையிலேயும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6.25% சதவீதமாகவும் தொடரஉள்ளது.
6. 2018ஆம் ஆண்டுக்கான உலகின் வலிமையான பாஸ்போர்ட்டுகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம்?
- 62
- 63
- 65
- 67
Answer & Explanation
Answer: 67
Explanation:
Arton Capital எனும் நிறுவனம் வெளியிட்டுள்ள Global Passport Power Rank 2018 பட்டியலில் இந்தியா 65 புள்ளிகளுடன் 67 இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் முதலிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்டும், இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களை முறையே சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
7. 2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் வரிசையில் முதலிடம் வகிப்பவர்?
- டைகர் உட்ஸ்
- விராட் கோலி
- டோனி
- தீபிகா குமாரி
Answer & Explanation
Answer: விராட் கோலி
Explanation:
ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிக்கை வெளியிட்டுள்ள, இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தனிநபர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.235.25 கோடியுடன் முதலிடத்தில் உள்ளார். அந்தப் பட்டியலில் அவருக்கு அடுத்தபடியாக ரூ.228.09 கோடி வருவாயுடன் 2-ஆவது இடத்தில் விராட் கோலி உள்ளார்.
8. 2018-ஆம் ஆண்டுக்கான சிறந்த தடகள வீரர் விருதை வென்றவர்?
- முதாஸ் ஈஸா பார்ஷி
- உசேன் போல்ட்
- கிறிஸ்டியன் கோல்மன்
- எலியுட் கிப்சொக்
Answer & Explanation
Answer: எலியுட் கிப்சொக்
Explanation:
சர்வதேச தடகள கூட்டமைப்பின் (IAAF), 2018 ஆம் ஆண்டின் சிறந்த தடகள வீரர்கள் விருதின் ஆடவர் பிரிவில் மாரத்தான் போட்டியில் சாதனைபடைத்த கென்யாவைச் சேர்ந்த வீரர் எலியுட் கிப்சோகெ(Eliud Kipchoge) மற்றும் மகளிர் பிரிவில் கொலம்பியாவைச் சேர்ந்த உயரம் தாண்டுதல் வீராங்கனை கேதரின் இபார்குயின் (Caterine Ibarguen ) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
9. சர்வதேச தன்னார்வலர்களுக்கான தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 5th டிசம்பர்
- 6th டிசம்பர்
- 7th டிசம்பர்
- 8th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 5
More TNPSC Current Affairs
Related