Current Affairs in Tamil 7th August 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 7th August 2018. Take the quiz and improve your knowledge.
1. சமீபத்தில் காலமான ஆர்.கே தவான் பின்வரும் எந்த துறையுடன் தொடர்புடையவர்?
- அரசியல்
- சினிமா
- பத்திரிக்கை
- விவசாயம்
Answer & Explanation
Answer: அரசியல்
Explanation:
காங்கிரஸ் மூத்த தலைவர் மேலும் இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் 1962-ம் ஆண்டு முதல் அவர் படுகொலை செய்யப்பட்ட 1984-ம் ஆண்டு வரை உதவியாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடதக்கது.
2. சமீபத்தில் எந்த மாநிலத்தின் சட்டபேரவையின் 60வது ஆண்டு விழா, “குடியரசின் திருவிழாவாக” கொண்டாடப்பட்டது?
- கர்நாடகா
- கேரளா
- ஆந்திரபிரதேஷ்
- கோவா
Answer & Explanation
Answer: கேரளா
Explanation:
கேரள சட்டபேரவையின் 60வது ஆண்டு விழாவினை(Diamond Jublee) “குடியரசின் திருவிழாவாக” (Festival On Democracy) கேரள அரசால் திருவனந்தபுரத்தில் ஆகஸ்ட் 6-இல் கொண்டாடப்பட்டது.
இதனை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்துள்ளார்.
மேலும் சில.,
கடந்த மார்ச் 17இல் இதே பெயரில் (Festival Of Democracy) விழா ஒன்று ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டமன்றம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 14-7-1937
கேரளாவின் கவர்னர்: P. சதாசிவம்
3. சமீபத்தில் ‘RISECREEK’ என்ற மைக்ரோ ப்ரோசஸ்சரை உருவாகியுள்ள கல்வி நிறுவனம்?
- IIT சென்னை
- IISc பெங்களூர்
- TIFR பாம்பே
- IIT தில்லி
Answer & Explanation
Answer: IIT சென்னை
Explanation:
சக்தி திட்டத்தின் (Project Shakti) கீழ் ‘RISECREEK’ என்ற மைக்ரோ ப்ரோசஸ்சரை (Microprocessors) IIT சென்னை மாணவர் மற்றும் அறிஞர்கள் குழு உருவாகியுள்ளனர். இது முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் மைக்ரோ ப்ரோசஸ்ர் என்பது குறிப்பிடதக்கது.
4. சமீபத்தில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO) வெளியிட்டுள்ள மொபைல் செயலி?
- NIRYAT MITRA
- EMPZILLA
- E-FIEO
- KISHAN SWETHA
Answer & Explanation
Answer: NIRYAT MITRA
Explanation:
சர்வதேச வாணிபத்தை பற்றி அறிந்து கொள்ளவும், சர்வதேச வாணிபத்தில் உள்ள ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ளவும், சமீபத்தில் இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (FIEO- Federation of Indian Export Organisations) NIRYAT MITRA என்ற மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது.
5. தேசிய பங்குச் சந்தை தொடங்கப்பட்ட ஆண்டு?
- 1982
- 1992
- 2002
- 2012
Answer & Explanation
Answer: 1992
Explanation:
மும்பையில் உள்ள ‘தேசிய பங்குச் சந்தை’ (NSE) தொடங்கி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி NSEன் புதிய சின்னம் வெளியிடப்பட்டுள்ளது.

6. 5th Act East Business Show -2018 நடைபெற்ற மாநிலம்?
- ஆந்திர பிரதேஷ்
- மேகாலயா
- உத்தரகாண்ட்
- உத்திர பிரதேஷ்
Answer & Explanation
Answer: மேகாலயா
Explanation:
மேகாலயாவின் ஷில்லாங் நகரில் கடந்த ஜூலை 25 to 29 வரை 5th Act East Business Show -2018 நடைபெற்றது. இந்த வர்த்தக கண்காட்சி முக்கிய நோக்கம், ஆசியான் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துதல் ஆகும்.
7. Xingkong-2 என்ற ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய விமானத்தை தயாரித்துள்ள நாடு?
- ஜப்பான்
- வட கொரியா
- தென்கொரியா
- சீனா
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
Xingkong-2 (Starry Sky-2) ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகமாக செல்லக்கூடிய (Hypersonic Wave Rider) சீனாவின் முதல் விமானமான “Xingkong-2” சமீபத்தில் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது
8. சமீபத்தில் ICANN-இன் ccNSO குழுவிற்கு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்தியர்?
- ராஜா சாரி
- சுசீலா ஜெயின்
- அஜய் டேட்டா
- நரிந்தர் பத்ரா
Answer & Explanation
Answer: அஜய் டேட்டா
Explanation:
ICANN என்பது Internet Corporation for Assigned Names and Numbers என்று பொருள் தரும். உலகளாவிய இணைய அமைப்பை, மேற்பார்வையிடும் ஒரு லாப நோக்கற்ற நிறுவனம் ஆகும்.
ccNSO – Country Code Names Supporting Organization
More TNPSC Current Affairs
Related