Current Affairs in Tamil 7th December 2018
Hello, TNPSC Aspirants, Here we provide Quiz of TNPSC Current Affairs in Tamil 7th December 2018. Take the quiz and improve your knowledge.
1. உதகையில் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு?
- 1953
- 1957
- 1963
- 1967
Answer & Explanation
Answer: 1957
Explanation:
1957-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு நிறுவனத்தை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசு ஆகியன கூட்டாக இந்த நிறுவனத்தை உதகையில் செயல்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
TNPSC Group 2A Model Question Papers – Download
2. “சாக்புர்காண்டி அணைத் திட்டம்” எந்த மாநிலத்தில் அமையயுள்ளது?
- பஞ்சாப்
- கர்நாடகா
- ராஜஸ்தான்
- குஜராத்
Answer & Explanation
Answer: பஞ்சாப்
Explanation:
சமீபத்தில் மத்திய அமைச்சரவை பஞ்சாப் மாநிலம் ராவி ஆற்றின் குறுக்கே ”சாக்புர்காண்டி அணைத் திட்டத்தை” அமைக்க ஒப்புதல் வழங்கியுள்ளது.
3. சமீபத்திய ”முக்யமந்திரி தீர்த் யாத்ரா யோஜனா” என்ற பயண திட்டத்தை அறிமுகம் செய்துள்ள மாநிலம்?
- ஹரியானா
- பீகார்
- டெல்லி
- உத்திரபிரதேஷ்
Answer & Explanation
Answer: டெல்லி
Explanation:
சமீபத்தில் ”முக்யமந்திரி தீர்த் யாத்ரா யோஜனா” (‘Mukhyamantri Teerth Yatra Yojana’) என்ற பெயரில் மூத்த குடிமக்களுக்கு இலவசமாக ஆன்மீக சுற்றுலா வழங்கும் பயண திட்டத்தை டெல்லி அறிமுகம் செய்துள்ளது.
4. “ஹேண்ட் இன் ஹேண்ட்-2018” என்பது இந்தியா மற்றும் எந்த நாட்டுக்கு இடையேயான இராணுவ ஒத்திகை பயிற்சி ஆகும்?
- அமெரிக்கா
- சீனா
- சிங்கப்பூர்
- இங்கிலாந்து
Answer & Explanation
Answer: சீனா
Explanation:
இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே சீனாவின் செங்குடு (Chengdu) நகரில் வரும் டிசம்பர் 10 முதல் 23வரை “ஹேண்ட் இன் ஹேண்ட்-2018” என்ற பெயரில் இராணுவ ஒத்திகை பயிற்சி நடைபெறவுள்ளது.
5. சமீபத்தில் யாருக்கு ”புதுமையான இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான உயிரி தொழில்நுட்ப விருது 2018″ வழங்கப்பட்டது?
- எம்.ஏ. லதீப்
- ராபின் கே. தோவான்
- ராஜானிஷ் கிரி
- வ.மு.முரளி
Answer & Explanation
Answer: ராஜானிஷ் கிரி
Explanation:
ஷிகா வைரஸ்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகாக புதுமையான யோசனைகளை வழங்கியதற்காக பேராசிரியர் ராஜானிஷ் கிரிக்கு ”புதுமையான இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான உயிரி தொழில்நுட்ப விருது 2018″ வழங்கப்பட்டுள்ளது.
6. 2018-ஆம் ஆண்டுக்கான “ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கூடுகை” நடைபெறும் இடம்?
- டெல்லி
- சென்னை
- கோவா
- மும்பை
Answer & Explanation
Answer: கோவா
Explanation:
”இந்தியாவில் கண்டுபிடிப்புகளுக்காக உலகளாவிய முதலீட்டை திரட்டுதல்” என்ற கருப்பொருளுடன் “ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கூடுகை” டிசம்பர்-7ல் கோவாவில் நடைபெறுகிறது.
Theme: Mobilizing Global Capital for Innovation in India
7. 2018-ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் ‘நேஷனல் ரோல் மாடல்’ விருது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது ?
- ஸ்ரீராம் சீனிவாஸ்
- விராட் கோலி
- முகமது முஸ்தாக் அஹ்மத்
- தீபிகா குமாரி
Answer & Explanation
Answer: ஸ்ரீராம் சீனிவாஸ்
Explanation:
நடக்க முடியாத மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தும் நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக 2018ம் ஆண்டுக்கான ஜனாதிபதியின் ‘நேஷனல் ரோல் மாடல்’ விருது சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் சீனிவாஸ் என்ற மாற்றுத்திறனாளி இளைஞருக்கு வழங்கப்பட்டுள்ளது.
8. சமீபத்தில் நடைபெற்ற “அட்மிரல்ஸ் கோப்பை” படகுப்போட்டியில் வெற்றி பெற்ற அணி?
- இத்தாலி
- சிங்கப்பூர்
- அமெரிக்கா
- போலந்து
Answer & Explanation
Answer: இத்தாலி
Explanation:
கேரள மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற, “அட்மிரல்ஸ் கோப்பை” படகுப்போட்டியில் இத்தாலியை சேர்ந்த அணி முதலிடத்தையும், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்க அணிகள் முறேயே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களையும் பிடித்துள்ளன.
9. படைவீரர் கொடிநாள் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
- 4th டிசம்பர்
- 5th டிசம்பர்
- 6th டிசம்பர்
- 7th டிசம்பர்
Answer & Explanation
Answer: டிசம்பர் 7
Explanation:
நாட்டையும், நாட்டின் கௌரவத்தையும் காக்க எல்லைகளில் போரிடும் இந்தியாவின் முப்படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக 1949ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் டிசம்பர் 7 படைவீரர் கொடிநாள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
10. “Mohan Bhagwat : Influencer-in-Chief” என்ற புத்தகத்தை எழுதியவர்?
- ஆண்டி மரினோ
- எஸ்.ஹரிஷ்
- கிங்ஸ்ஹக் நக்
- நீலஞ்சன் முகபாப்புதய்
Answer & Explanation
Answer: கிங்ஸ்ஹக் நக்
Explanation:
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் எடிட்டர் Kingshuk Nag, RSS-இன் தற்போதைய தலைவரான மோகன் பகவத் பற்றி “Mohan Bhagwat : Influencer-in-Chief” என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார்.
More TNPSC Current Affairs
Related